أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقْرَأُ المُسَبِّحَاتِ قَبْلَ أَنْ يَرْقُدَ وَيَقُولُ: «إِنَّ فِيهِنَّ آيَةً خَيْرٌ مِنْ أَلْفِ آيَةٍ»
2921. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தூங்குவதற்கு முன்பு முஸப்பிஹாத் எனும் (அத்தியாயங்களான ஸப்பஹ, யுஸப்பிஹு, ஸப்பிஹ் எனத் துவங்கும் 57, 59, 61, 62, 64, 87 ஆகிய ஆறு) அத்தியாயங்களை ஓதுவார்கள். மேலும், இவற்றில் ஒரு வசனம் உள்ளது. அது ஆயிரம் வசனங்களை விடச் சிறந்தது என்றும் கூறுவார்கள்.
அறிவிப்பவர்: இர்பாள் பின் ஸாரியா (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும்.