🔗

திர்மிதி: 905

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

«كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَحَضَرَ الأَضْحَى، فَاشْتَرَكْنَا فِي البَقَرَةِ سَبْعَةً، وَفِي الجَزُورِ عَشَرَةً»


905. நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்த போது (ஈதுல் அள்ஹா எனும்) ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது. அப்போது ஒரு மாட்டில் 7 பேர் வீதமும், ஒரு ஒட்டகத்தில் 10 பேர் வீதமும் நாங்கள் கூட்டு சேர்ந்தோம்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்திலமைந்த ஹதீஸாகும். இது ஹுஸைன் பின் வாகித் அவர்களின் அறிவிப்பாகும்.