ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
பாடம் : 20 உடல் நலம் விசாரிக்கச் சென்றவர் நோயாளிக்காகப் பிராத்திப்பது. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் (நான் நோயுற்றிருந்த போது என்னை உடல் நலம் விசாரிக்க வந்து), இறைவா! சஅதுக்கு (நோயிலிருந்து) குணமளிப்பாயாக என்று பிரார்த்தித்தார்கள்.30
5675. ஆயிஷா(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘ஒரு நோயாளியிடம் (உடல் நலம் விசாரிக்கச்) சென்றால்’ அல்லது ‘நோயாளி ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டால்’ அவர்கள், ‘அத்ஹிபில் பாஸ் ரப்பந் நாஸ் இஷ்ஃபி, வ அன்த்தஷ் ஷாஃபி, லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக்க, ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்’ என்று பிரார்த்திப்பார்கள்.
(பொருள்: மனிதர்களைப் படைத்துப் பராமரிப்பவனே! நோயைப் போக்கி அறவே நோயில்லாதவாறு குணமளிப்பாயாக. நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தை தவிர வேறு நிவாரணம் இல்லை.)
மற்றோர் அறிவிப்பில் ‘நோயாளி நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டால்’ என்றும், இன்னோர் அறிவிப்பில், ‘நபி(ஸல்) அவர்கள் ஒரு நோயாளியிடம்
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ إِذَا أَتَى مَرِيضًا أَوْ أُتِيَ بِهِ، قَالَ: «أَذْهِبِ البَاسَ رَبَّ النَّاسِ، اشْفِ وَأَنْتَ الشَّافِي، لاَ شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ، شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا» قَالَ عَمْرُو بْنُ أَبِي قَيْسٍ، وَإِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ: عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، وَأَبِي الضُّحَى: «إِذَا أُتِيَ بِالْمَرِيضِ» وَقَالَ جَرِيرٌ: عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي الضُّحَى، وَحْدَهُ، وَقَالَ: «إِذَا أَتَى مَرِيضًا»
சமீப விமர்சனங்கள்