Month: September 2020

Kubra-Bayhaqi-6189

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

6189. உமர் (ரலி) அவர்கள் ஜனாஸா தொழுகையிலும் பெருநாள் தொழுகையிலும் ஒவ்வொரு தக்பீரிலும்  கைகளை உயர்த்துவார்கள்.

அறிவிப்பவர்: பக்ர் பின் ஸவாதா

 


أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ كَانَ يَرْفَعُ يَدَيْهِ مَعَ كُلِّ تَكْبِيرَةِ فِي الْجِنَازَةِ وَالْعِيدَيْنِ


Abu-Dawood-722

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

722. நபி (ஸல்) அவர்கள் தொழத் தயாராகும் போது தமது இரு கைகளையும் உயர்த்துவார்கள். அவ்விரு கைகளையும் தோள் புஜத்திற்கு நேராக வைத்துப் பிறகு அதே நிலையில் தக்பீர் சொல்வார்கள். பிறகு ருகூவு செய்வார்கள். ருகூவிலிருந்து தலையை உயர்த்த விரும்பினால் கைகளை புஜங்களுக்கு நேராக அமைகின்ற வரை உயர்த்திபிறகு ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று சொல்வார்கள். பிறகு ஸஜ்தா செய்வார்கள். சுஜூதின் போது தமது கைகளை உயர்த்த மாட்டார்கள். தமது தொழுகை முடிகின்ற வரை ருகூவுக்கு முன்னால் சொல்கின்ற ஒவ்வொரு தக்பீரின் போதும் கைகளை உயர்த்துவரர்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ رَفَعَ يَدَيْهِ حَتَّى تَكُونَ حَذْوَ مَنْكِبَيْهِ، ثُمَّ كَبَّرَ وَهُمَا كَذَلِكَ فَيَرْكَعُ، ثُمَّ إِذَا أَرَادَ أَنْ يَرْفَعَ صُلْبَهُ رَفَعَهُمَا حَتَّى تَكُونَ حَذْوَ مَنْكِبَيْهِ، ثُمَّ قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ وَلَا يَرْفَعُ يَدَيْهِ فِي السُّجُودِ وَيَرْفَعُهُمَا فِي كُلِّ تَكْبِيرَةٍ يُكَبِّرُهَا قَبْلَ الرُّكُوعِ حَتَّى تَنْقَضِيَ صَلَاتُهُ


Kubra-Bayhaqi-6188

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

பெருநாள் தொழுகையில் தக்பீரின் போது கைகளை உயர்த்துதல்.

6188. நபி (ஸல்) அவர்கள் தொழத் தயாராகும் போது தமது இரு கைகளையும் உயர்த்துவார்கள். அவ்விரு கைகளையும் தோள் புஜத்திற்கு நேராக வைத்துப் பிறகு அதே நிலையில் தக்பீர் சொல்வார்கள். பிறகு ருகூவு செய்வார்கள். ருகூவிலிருந்து தலையை உயர்த்த விரும்பினால் கைகளை புஜங்களுக்கு நேராக அமைகின்ற வரை உயர்த்திபிறகு ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று சொல்வார்கள். பிறகு ஸஜ்தா செய்வார்கள். சுஜூதின் போது தமது கைகளை உயர்த்த மாட்டார்கள். தமது தொழுகை முடிகின்ற வரை ருகூவுக்கு முன்னால் சொல்கின்ற ஒவ்வொரு தக்பீரின் போதும் கைகளை உயர்த்துவரர்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ” إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ رَفَعَ يَدَيْهِ حَتَّى إِذَا كَانَتَا حَذْوَ مَنْكِبَيْهِ , ثُمَّ كَبَّرَ وَهُمَا كَذَلِكَ وَرَكَعَ , وَإِذَا أَرَادَ أَنْ يَرْفَعَ رَفَعَهُمَا حَتَّى يَكُونَا حَذْوَ مَنْكِبَيْهِ , ثُمَّ قَالَ: ” سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ ” , ثُمَّ يَسْجُدُ وَلَا يَرْفَعُ يَدَيْهِ فِي السُّجُودِ، وَيَرْفَعُهُمَا فِي كُلِّ تَكْبِيرَةٍ يُكَبِّرُهَا قَبْلَ الرُّكُوعِ حَتَّى تَنْقَضِيَ صَلَاتُهُ


Tirmidhi-998

ஹதீஸின் தரம்: Pending

998. ஜஃபர் பின் அபூதாலிப் (ரலி) அவர்களின் மரணசெய்தி வந்தபோது, ஜஃபரின் வீட்டினருக்கு கவலை தரும் செய்தி வந்து விட்டதால் அவரது குடும்பத்தாருக்காக உணவு செய்து கொடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி)


لَمَّا جَاءَ نَعْيُ جَعْفَرٍ، قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اصْنَعُوا لِأَهْلِ جَعْفَرٍ طَعَامًا، فَإِنَّهُ قَدْ جَاءَهُمْ مَا يَشْغَلُهُمْ»


Musnad-Ahmad-20300

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

20300. பகரா (2-வது) அத்தியாயம் குர்ஆனில் உயர்ந்ததும், சிறந்ததும் ஆகும். அதனின் ஒவ்வொரு வசனத்துடனும் 80 வானவர்கள் இறங்கினர். ‘அல்லாஹு லாஇலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம்’ என்னும் வாசகம் அர்ஷின் அடியிலிருந்து எடுக்கப்பட்டு பகரா அத்தியாயத்துடன் சேர்க்கப்பட்டதாகும்.

யாஸீன் (36-வது) அத்தியாயம்) குர்ஆனின் இதயமாகும். அல்லாஹ்வையும், மறுமையையும் நாடி அதை ஓதுபவர் மன்னிக்கப்படுவார். மேலும் நீங்கள் உங்களில் மரணவேளை நெருங்கியவர்களுக்கு அதை ஓதுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : மஃகில் பின் யஸார் (ரலி)


الْبَقَرَةُ سَنَامُ الْقُرْآنِ وَذُرْوَتُهُ، نَزَلَ مَعَ كُلِّ آيَةٍ مِنْهَا ثَمَانُونَ مَلَكًا، وَاسْتُخْرِجَتْ {اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ} [البقرة: 255] مِنْ تَحْتِ الْعَرْشِ، فَوُصِلَتْ بِهَا، أَوْ فَوُصِلَتْ بِسُورَةِ الْبَقَرَةِ، وَيس قَلْبُ الْقُرْآنِ، لَا يَقْرَؤُهَا رَجُلٌ يُرِيدُ اللَّهَ والدَّارَ الْآخِرَةَ إِلَّا غُفِرَ لَهُ، وَاقْرَءُوهَا عَلَى مَوْتَاكُمْ


Abu-Dawood-3121

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3121. உங்களில் மரண வேளை நெருங்கியவர்களுக்கு யாஸீன் (36-வது) அத்தியாயத்தை ஓதுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : மஃகில் பின் யஸார் (ரலி)


«اقْرَءُوا يس عَلَى مَوْتَاكُمْ»


Tirmidhi-109

ஹதீஸின் தரம்: More Info

109. பெண்ணுறுப்பை ஆணுறுப்பு கடந்து விட்டால் குளிப்பு கடமையாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்…

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


«إِذَا جَاوَزَ الخِتَانُ الخِتَانَ وَجَبَ الغُسْلُ»


Nasaayi-887

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

887. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் நின்றால் தமது வலது கையைஇடது கையின் மீது வைத்து பிடித்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர் : வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)


«رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ قَائِمًا فِي الصَّلَاةِ قَبَضَ بِيَمِينِهِ عَلَى شِمَالِهِ»


Musnad-Ahmad-10492

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

10492. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் நின்றால் கைகளைஉயர்த்துவார்கள். பிறகு ஓதுவதை ஆரம்பிப்பதற்கு முன்பாக சிறிது நேரம்மௌனமாக இருப்பார்கள்…

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


تَرَكَ النَّاسُ ثَلَاثَةً مِمَّا كَانَ يَعْمَلُ بِهِنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ رَفَعَ يَدَيْهِ مَدًّا، ثُمَّ سَكَتَ قَبْلَ الْقِرَاءَةِ هُنَيَّةً يَسْأَلُ اللَّهَ مِنْ فَضْلِهِ، فَيُكَبِّرُ كُلَّمَا خَفَضَ وَرَفَعَ»


« Previous Page