Month: December 2020

Tirmidhi-3465

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3465. சுப்ஹானல்லாஹில் அழீமி, வபிஹம்திஹி (கண்ணிய மிக்க அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று சொல்லக் கூடியவருக்கு அவர் புகழ்ந்ததன் காரணமாக சுவனத்தில் அவருக்காக ஒரு பேரீச்ச மரம் நடப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)


مَنْ قَالَ: سُبْحَانَ اللَّهِ العَظِيمِ وَبِحَمْدِهِ غُرِسَتْ لَهُ نَخْلَةٌ فِي الجَنَّةِ


Tirmidhi-3464

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3464. சுப்ஹானல்லாஹில் அழீமி, வபிஹம்திஹி (கண்ணிய மிக்க அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று சொல்லக் கூடியவருக்கு அவர் புகழ்ந்ததன் காரணமாக சுவனத்தில் அவருக்காக ஒரு பேரீச்ச மரம் நடப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)


مَنْ قَالَ: سُبْحَانَ اللَّهِ العَظِيمِ وَبِحَمْدِهِ، غُرِسَتْ لَهُ نَخْلَةٌ فِي الجَنَّةِ


Abu-Dawood-1532

ஹதீஸின் தரம்: More Info

1532. ”நீங்கள் உங்களுக்கு எதிராகப் பிரார்த்திக்காதீர்கள். உங்களுடைய குழந்தைகளுக்கு எதிராகப் பிரார்த்திக்காதீர்கள். உங்களுடைய பணியாளர்களுக்கு எதிராகப் பிரார்த்திக்காதீர்கள். உங்களுடைய பொருளாதாரங்களுக்கு எதிராகப் பிரார்த்திக்காதீர்கள். அல்லாஹ்விடம் (பிரார்த்தனை) ஒப்புக் கொள்ளப்படும் நேரம் ஒன்று உள்ளது. அவ்வாறு ஒப்புக் கொள்ளப்படும் நேரத்தில் நீங்கள் ஏதுவாகப் பிரார்த்தித்து, அதை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளக் காரணமாகி விடாதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)


«لَا تَدْعُوا عَلَى أَنْفُسِكُمْ، وَلَا تَدْعُوا عَلَى أَوْلَادِكُمْ، وَلَا تَدْعُوا عَلَى خَدَمِكُمْ، وَلَا تَدْعُوا عَلَى أَمْوَالِكُمْ، لَا تُوَافِقُوا مِنَ اللَّهِ تَبَارَكَ وَتَعَالَى سَاعَةَ نَيْلٍ فِيهَا عَطَاءٌ، فَيَسْتَجِيبَ لَكُمْ»


Musnad-Ahmad-15589

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

15589. …நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பிய ஒரு படையினர் சிறுவர்களையும் கொன்று விட்டனர். இதைக் கேள்விப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விசாரணை நடத்திய போது, அவர்களும் இணை வைப்பவர்களின் வழித் தோன்றல்கள் தானே என்று நபித்தோழர்கள் கூறினார்கள்.

இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “கொலை செய்வதில் இவர்கள் வரம்பு மீறி விட்டனர். சிறுவர்களைக் கொல்லாதீர்கள்! சிறுவர்களைக் கொல்லாதீர்கள்! பிறக்கும் குழந்தைகள் யாவும் (இஸ்லாம் எனும்) இயற்கை மார்க்கத்திலேயே பிறக்கின்றன. அவர்கள் உணர்ந்து கொள்ளும் வரை அதிலேயே உள்ளனர். அவர்களின் பெற்றோர்கள் தான் அவர்களை யூதராகவோ அல்லது கிருஸ்துவராகவோ மாற்றி விடுகின்றனர்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அஸ்வத் பின் ஸரீஃ (ரலி)


أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَغَزَوْتُ مَعَهُ فَأَصَبْتُ ظَهْرًا، فَقَتَلَ النَّاسُ يَوْمَئِذٍ حَتَّى قَتَلُوا الْوِلْدَانَ – وَقَالَ مَرَّةً: الذُّرِّيَّةَ – فَبَلَغَ ذَلِكَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «مَا بَالُ أَقْوَامٍ جَاوَزَهُمُ الْقَتْلُ الْيَوْمَ حَتَّى قَتَلُوا الذُّرِّيَّةَ» فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّمَا هُمْ أَوْلَادُ الْمُشْرِكِينَ، فَقَالَ: «أَلَا إِنَّ خِيَارَكُمْ أَبْنَاءُ الْمُشْرِكِينَ» ثُمَّ قَالَ: «أَلَا لَا تَقْتُلُوا ذُرِّيَّةً، أَلَا لَا تَقْتُلُوا ذُرِّيَّةً» قَالَ: «كُلُّ نَسَمَةٍ تُولَدُ عَلَى الْفِطْرَةِ، حَتَّى يُعْرِبَ عَنْهَا لِسَانُهَا، فَأَبَوَاهَا يُهَوِّدَانِهَا وَيُنَصِّرَانِهَا»


Musnad-Ahmad-11498

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

11498. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்களில் ஒருவர் சத்தியத்தைக் கண்டால் அல்லது அதைச் செவியுற்றால் மக்களின் பயம் அதைக் கூறவிடாமல் அவரைத் தடுக்க வேண்டாம்.

அறிவிப்பவர் : அபூ சயீத் (ரலி)


«لَا يَمْنَعَنَّ أَحَدَكُمْ هَيْبَةُ النَّاسِ، أَنْ يَتَكَلَّمَ بِحَقٍّ إِذَا رَآهُ أَوْ شَهِدَهُ أَوْ سَمِعَهُ»


Musnad-Ahmad-11017

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

11017. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்களில் ஒருவர் சத்தியத்தைக் கண்டால் அல்லது அதைச் செவியுற்றால் மக்களின் பயம் அதைக் கூறவிடாமல் அவரைத் தடுக்க வேண்டாம்.

அறிவிப்பவர் : அபூ சயீத் (ரலி)


«لَا يَمْنَعَنَّ أَحَدَكُمْ هَيْبَةُ النَّاسِ أَنْ يَقُولَ فِي حَقٍّ إِذَا رَآهُ، أَوْ شَهِدَهُ أَوْ سَمِعَهُ»


Nasaayi-5144

ஹதீஸின் தரம்: More Info

5144. நபி (ஸல்) அவர்கள் பட்டை தனது வலக்கரத்திலும் தங்கத்தை தனது இடக்கரத்திலும் பிடித்து இவ்விரண்டும் எனது சமுதாயத்தில் ஆண்களுக்கு தடைசெய்யப்பட்டதாகும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அலீ பின் அபீ தாலிப்  (ரலி)


إِنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَ حَرِيرًا، فَجَعَلَهُ فِي يَمِينِهِ، وَأَخَذَ ذَهَبًا فَجَعَلَهُ فِي شِمَالِهِ، ثُمَّ قَالَ: «إِنَّ هَذَيْنِ حَرَامٌ عَلَى ذُكُورِ أُمَّتِي»


Musnad-Ahmad-15012

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

15012. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கடல் நீர் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் “கடல் நீர் தூய்மை செய்யத்தக்கதாகும். அதில் உள்ளவை செத்தாலும் ஹலாலாக (உண்ண அனுமதிக்கப்பட்டதாக) ஆகும்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


قَالَ فِي الْبَحْرِ: «هُوَ الطَّهُورُ مَاؤُهُ الْحِلُّ مَيْتَتُهُ»


Nasaayi-5351

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5351. நான் விருந்து ஏற்பாடு செய்து நபி (ஸல்) அவர்களை அழைத்தேன். அவர்கள் வந்து என் வீட்டில் உருவங்கள் உள்ள அலங்காரத் திரையைப் பார்த்தவுடன் வெளியெறி விட்டார்கள். (அப்போது) உருவங்கள் உள்ள வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள் என நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : அலீ (ரலி)


صَنَعْتُ طَعَامًا، فَدَعَوْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَاءَ، فَدَخَلَ فَرَأَى سِتْرًا فِيهِ تَصَاوِيرُ فَخَرَجَ وَقَالَ: «إِنَّ الْمَلَائِكَةَ لَا تَدْخُلُ بَيْتًا فِيهِ تَصَاوِيرُ»


Musnad-Ahmad-14495

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

14495. …அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது, நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதராகிய நானும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துவிட்டனர்!’ என்று கூறினார்கள்.

அப்போது அவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன. தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகிறது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; எனவே, அதைப் பற்றிக் கூறுங்கள்!’ எனக் கேட்கப்பட்டது.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் யூதர்களை சபிப்பானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பை ஹராமாக்கியபோது, அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தை சாப்பிட்டார்கள்!’ என்று கூறினார்கள்…

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)


سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ عَامَ الْفَتْحِ: «إِنَّ اللَّهَ وَرَسُولَهُ حَرَّمَ بَيْعَ الْخَنَازِيرِ، وَبَيْعَ الْمَيْتَةِ، وَبَيْعَ الْخَمْرِ، وَبَيْعَ الْأَصْنَامِ» وَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، مَا تَرَى فِي شُحُومِ الْمَيْتَةِ، فَإِنَّهَا يُدْهَنُ بِهَا السُّفُنُ وَالْجُلُودُ، وَيُسْتَصْبَحُ بِهَا؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَاتَلَ اللَّهُ يَهُودَ، إِنَّ اللَّهَ لَمَّا حَرَّمَ شُحُومَهَا، أَخَذُوهُ فَجَمَّلُوهُ، ثُمَّ بَاعُوهُ، فَأَكَلُوا ثَمَنَهُ»


Next Page » « Previous Page