Month: December 2020

Abu-Dawood-2363

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2363. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும். உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் நாளில் அருவருப்பாக (ஆபாசமாக)ப் பேசவேண்டாம்; மூடத்தனமான காரியங்களில் ஈடுபடவேண்டாம்; யாரேனும் அவரை ஏசினால் அல்லது வம்புக்கிழுத்தால் “நான் நோன்பு நோற்றிருக்கிறேன்; நான் நோன்பு நோற்றிருக்கிறேன்” என்று அவர் கூறிவிடட்டும்!

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


الصِّيَامُ جُنَّةٌ إِذَا كَانَ أَحَدُكُمْ صَائِمًا فَلَا يَرْفُثْ، وَلَا يَجْهَلْ، فَإِنْ امْرُؤٌ قَاتَلَهُ، أَوْ شَاتَمَهُ، فَلْيَقُلْ: إِنِّي صَائِمٌ، إِنِّي صَائِمٌ


Tirmidhi-764

ஹதீஸின் தரம்: More Info

764. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒவ்வொரு நன்மையும் அதுபோன்ற பத்து மடங்கு முதல் எழுநூறு மடங்குகளுக்கு நிகரானது. நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி வழங்குவேன். நோன்பு நரகிலிருந்து காக்கும் கேடயமாகும். என்று உங்கள் இறைவன் கூறுகின்றான்.

நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட விருப்பமானதாகும். உங்களில் ஒருவர் நோன்பு நோற்று யாரேனும் அவருடன் சண்டையிட்டால் ‘நான் நோன்பாளி!’ என்று அவர் சொல்லட்டும்!

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


إِنَّ رَبَّكُمْ يَقُولُ: كُلُّ حَسَنَةٍ بِعَشْرِ أَمْثَالِهَا إِلَى سَبْعِ مِائَةِ ضِعْفٍ، وَالصَّوْمُ لِي وَأَنَا أَجْزِي بِهِ، وَالصَّوْمُ جُنَّةٌ مِنَ النَّارِ

«وَلَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ المِسْكِ، وَإِنْ جَهِلَ عَلَى أَحَدِكُمْ جَاهِلٌ وَهُوَ صَائِمٌ فَلْيَقُلْ إِنِّي صَائِمٌ»

 


Almujam-Alkabir-3277

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3277. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “மறுமை நாளின் துயரங்களிலிருந்து பாதுகாப்புபெற வேண்டுமென விரும்புகின்றவர், (கடனை அடைக்க முடியாமல்) சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிக்கட்டும். அல்லது கடனைத் தள்ளுபடி செய்துவிடட்டும்” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என அபூகதாதா (ரலி) அறிவித்தார்.


«مَنْ سَرَّهُ أَنْ يَأْمَنَ مِنْ غَمِّ يَوْمِ الْقِيَامَةِ فَلْيَنْظُرْ مُعْسِرًا أَوْ لِيَضَعْ عَنْهُ»


Almujam-Alawsat-7920

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7920. “யார் கடன் பட்டவருக்காக அவகாசம் அளிக்கின்றாரோ, கஷ்டப்படுவோருக்காக உதவு செய்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் மறுமை நாளில் தன் அர்ஷின் நிழலில் நிழல் தருகின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்…

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


أَشْهَدُ عَلَى حِبِّي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَسَمِعْتُهُ، يَقُولُ: «يَظَلُّ اللَّهُ فِي ظِلِّ عَرْشِهِ يَوْمَ الْقِيَامَةِ مَنْ أَنْظَرَ مُعْسِرًا، أَوْ أَعَانَ أَخْرَقَ»


Almujam-Alawsat-4592

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4592. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“மறுமை நாளின் துயரங்களிலிருந்து அல்லாஹ் தம்மைக் காப்பாற்ற வேண்டுமென விரும்புகின்றவர், அல்லாஹ் தன் அர்ஷின் நிழலில் நிழல் தரவேண்டுமென விரும்புகின்றவர்  (கடன் வாங்கி) சிரமப்படுவோருக்கு அவகாசம் அளிக்கட்டும்.

அறிவிப்பவர்கள் : அபூகதாதா (ரலி) , ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


«مَنْ سَرَّهُ أَنْ يُنْجِيَهُ اللَّهُ مِنْ كَرِبِ يَوْمِ الْقِيَامَةِ، وَأَنْ يُظِلَّهُ تَحْتَ عَرْشِهِ فَلْيُنْظِرْ مُعْسِرًا»


Musannaf-Ibn-Abi-Shaybah-22174

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

22174. “யார் கடன் பட்டவருக்காக அவகாசம் அளிக்கின்றாரோ அல்லது தள்ளுபடி செய்கின்றாரோ அவர் இறுதி நாளில் அர்ஷின் நிழலில் இருப்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி)


«مَنْ نَفَّسَ عَنْ غَرِيمٍ أَوْ مَجَاعَتِهِ عَنْهُ كَانَ فِي ظِلِّ الْعَرْشِ يَوْمَ الْقِيَامَةِ»


Shuabul-Iman-10746

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

10746. “யார் கடன் பட்டவருக்காக அவகாசம் அளிக்கின்றாரோ அல்லது தள்ளுபடி செய்கின்றாரோ அவர் இறுதி நாளில் அர்ஷின் நிழலில் இருப்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி)


مَنْ نَفَّسَ عَنْ غَرِيمٍ أَوْ مَحَى عَنْهُ كَانَ فِي ظِلِّ الْعَرْشِ يَوْمَ الْقِيَامَةِ


Darimi-2631

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2631. “யார் கடன் பட்டவருக்காக அவகாசம் அளிக்கின்றாரோ அல்லது தள்ளுபடி செய்கின்றாரோ அவர் இறுதி நாளில் அர்ஷின் நிழலில் இருப்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி)


«مَنْ نَفَّسَ عَنْ غَرِيمِهِ، أَوْ مَحَا عَنْهُ، كَانَ فِي ظِلِّ الْعَرْشِ يَوْمَ الْقِيَامَةِ»


Musnad-Ahmad-22559

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

22559. “யார் கடன் பட்டவருக்காக அவகாசம் அளிக்கின்றாரோ அல்லது தள்ளுபடி செய்கின்றாரோ அவர் இறுதி நாளில் அர்ஷின் நிழலில் இருப்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி)


«مَنْ نَفَّسَ عَنْ غَرِيمِهِ أَوْ مَحَا عَنْهُ كَانَ فِي ظِلِّ الْعَرْشِ يَوْمَ الْقِيَامَةِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-23017

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

23017.  “யார் கடன் பட்டவருக்காக அவகாசம் அளிக்கின்றாரோ அல்லது தள்ளுபடி செய்கின்றாரோ அவர் இறுதி நாளில் அர்ஷின் நிழலில் இருப்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி)


«مَنْ نَفَّسَ، عَنْ غَرِيمِهِ أَوْ مَحَا عَنْهُ كَانَ فِي ظِلِّ الْعَرْشِ يَوْمَ الْقِيَامَةِ»


Next Page » « Previous Page