ஹதீஸின் தரம்: விபரம் கீழே
549. விறகு கட்டுகளை திரட்டும்படி எனது இளைஞர்களுக்கு உத்தரவிட்டு எவ்வித காரணமும் இல்லாமல் வீடுகளில் தொழுகின்ற கூட்டத்தினரிடம் சென்று அவர்களுடைய வீடுகளை கொளுத்தி விட விரும்புகின்றேன் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன் என்று அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும்) யசீத் பின் அல் அஸம்மிடம் அபூஅவ்பே! நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆவை கருத்தில் கொண்டு சொன்னார்களா? அல்லது வேறு எதையும் கருத்தில் கொண்டு சொன்னார்களா? என்று நான் கேட்ட போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்ற ஹதீஸை (நான் மேலே அறிவித்த மாதிரி) செவியுறவில்லையெனில், எனது இரு காதுகளும் செவிடாகப் போகட்டும்! நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ அல்லது வேறெதையும் குறிப்பிடவில்லை என அவர் பதிலளித்தார் என யசீத் பின் யசீத் அறிவித்தார்.
சுருக்கமாக இந்த ஹதீஸ் முஸ்லிம், திர்மிதீ ஆகிய நூல்களில் இடம் பெறுகின்றது.
«لَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ فِتْيَتِي فَيَجْمَعُوا حُزَمًا مِنْ حَطَبٍ، ثُمَّ آتِيَ قَوْمًا يُصَلُّونَ فِي بُيُوتِهِمْ لَيْسَتْ بِهِمْ عِلَّةٌ فَأُحَرِّقَهَا عَلَيْهِمْ»،
قُلْتُ لِيَزِيدَ بْنِ الْأَصَمِّ: يَا أَبَا عَوْفٍ الْجُمُعَةَ عَنَى أَوْ غَيْرَهَا؟ قَالَ: صُمَّتَا أُذُنَايَ إِنْ لَمْ أَكُنْ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَأْثُرُهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا ذَكَرَ جُمُعَةً وَلَا غَيْرَهَا
சமீப விமர்சனங்கள்