தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6051

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 45 நெட்டையானவர், குட்டையானவர் என்றெல்லாம் (ஒருவரைப் புனைபெயரில்) மக்கள் அறிமுகப்படுத்துவது. ‘ ‘இரு கைக்காரர்’ என்ன சொல்கிறார்?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.65 ஒரு மனிதரைக் கொச்சைப்படுத்தும் நோக்கமில்லாமல் கூறப்படும் எந்தப் (புனை) பெயரும் அனுமதிக்கப்பட்டதே.

 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

(ஒரு நாள்) நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு (நான்கு ரக்அத் தொழுகையான) லுஹ்ர் தொழுகையை (மறந்து) இரண்டு ரக்அத்களாகத் தொழுகை நடத்திவிட்டு சலாம் கொடுத்துவிட்டார்கள்.

பிறகு எழுந்து பள்ளிவாசலின் தாழ்வாரத்திலிருந்த (பேரீச்சங்) கட்டையினை நோக்கிச் சென்று அதன் மீது தம் கையை வைத்து (நின்று) கொண்டார்கள். அன்று (பள்ளிவாசலில் இருந்த) மக்களில் அபூ பக்ர்(ரலி) அவர்களும் உமர்(ரலி) அவர்களும் இருந்தனர். ஆனால், அவர்கள் இருவரும் நபி(ஸல்) அவர்களிடம் (அது குறித்துப்) பேச அஞ்சினர். மக்களில் சிலர் வேகமாக வெளியேறிச் செல்லலாயினர். அப்போது அவர்கள் ‘(தொழுகை(யின் ரக்அத்) குறைந்துவிட்டதா?’ என்று பேசிக்கொண்டனர். மக்களில் (‘ம்ர்பாக்’ எனும் இயற்பெயருடைய) ஒருவரும் இருந்தார். அவரை நபி(ஸல்) அவர்கள் ‘இரண்டு கைக்காரர்’ (துல் யதைன்) என்று அழைப்பது வழக்கம். அவர், ‘அல்லாஹ்வின் நபியே! தாங்கள் மறந்து விட்டீர்களா? அல்லது தொழுகை(யின் ரக்அத்) குறைந்துவிட்டதா?’ என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘(என் எண்ணப் படி) நான் மறக்கவுமில்லை. தொழுகை குறைந்துவிடவுமில்லை’ என்று கூறினார்கள். அவர், ‘இல்லை; தாங்கள் மறந்துவிட்டீர்கள், இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறினார். ‘இரண்டு கைக்காரர் (துல்யதைன்) சொல்வது உண்மையா?’ என (மக்களிடம்) நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். (மக்களும் உண்மையே என்று தெரிவித்தனர்.) பிறகு நபி(ஸல்) அவர்கள் எழுந்து இன்னும் இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தி ‘சலாம்’ கொடுத்தார்கள். பிறகு தக்பீர் (‘அல்லாஹு அக்பர் -அல்லாஹ் மிகப் பெரியவன்’ எனக்) கூறி ‘முன்பு செய்ததைப் போன்று’ அல்லது ‘அதை விடவும் நீண்ட’ (மறதிக்கான) சிரவணக்கம் (சஜ்தா) செய்தார்கள். பின்னர் (சிரவணக்கத்திலிருந்து) எழுந்து ‘தக்பீர்’ கூறினார்கள். பின்னர் மீண்டும் ‘முன்பு செய்ததைப் போன்று’ அல்லது ‘அதைவிட நீளமாக’ சிரவணக்கம் செய்தார்கள். பின்னர் தலையை உயர்த்தி ‘தக்பீர்’ கூறினார்கள். 66

Book : 78

(புகாரி: 6051)

بَابُ مَا يَجُوزُ مِنْ ذِكْرِ النَّاسِ، نَحْوَ قَوْلِهِمْ: الطَّوِيلُ وَالقَصِيرُ

وَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا يَقُولُ ذُو اليَدَيْنِ» وَمَا لاَ يُرَادُ بِهِ شَيْنُ الرَّجُلِ

حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا مُحَمَّدٌ، عَنْ أَبِي هُرَيْرَةَ

صَلَّى بِنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الظُّهْرَ رَكْعَتَيْنِ ثُمَّ سَلَّمَ، ثُمَّ قَامَ إِلَى خَشَبَةٍ فِي مُقَدَّمِ المَسْجِدِ، وَوَضَعَ يَدَهُ عَلَيْهَا، وَفِي القَوْمِ يَوْمَئِذٍ أَبُو بَكْرٍ وَعُمَرُ، فَهَابَا أَنْ يُكَلِّمَاهُ، وَخَرَجَ سَرَعَانُ النَّاسِ، فَقَالُوا: قَصُرَتِ الصَّلاَةُ. وَفِي القَوْمِ رَجُلٌ، كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُوهُ ذَا اليَدَيْنِ، فَقَالَ: يَا نَبِيَّ اللَّهِ، أَنَسِيتَ أَمْ قَصُرَتْ؟ فَقَالَ: «لَمْ أَنْسَ وَلَمْ تَقْصُرْ» قَالُوا: بَلْ نَسِيتَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «صَدَقَ ذُو اليَدَيْنِ» فَقَامَ فَصَلَّى رَكْعَتَيْنِ ثُمَّ سَلَّمَ، ثُمَّ كَبَّرَ فَسَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ وَكَبَّرَ، ثُمَّ وَضَعَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ وَكَبَّرَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.