தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6992

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 9 சிறைக் கைதிகள், குழப்பவாதிகள் மற்றும் இணைவைப்போர் காணும் கனவு. அல்லாஹ் கூறுகின்றான்: (நம் தூதர்) யூசுஃபுடன் இரு இளைஞர் களும் சிறைக்குள் நுழைந்தனர். அவ்விருவரில் ஒருவர், நான் திராட்சை மது பிழிவதாக ஒரு கனவு கண்டேன் என்று கூறினார். மற்றவர், நான் என் தலைமீது ரொட்டியைச் சுமப்ப தாகவும், அதிலிருந்து பறவைகள் தின்று கொண்டிருப்பதாகவும் கனவு கண்டேன்என்று கூறினார். (பின் இருவரும் யூசுஃபே!) எங்களுக்கு இவற்றின் விளக்கத்தை அறிவிப்பீ ராக;மெய்யாக நாங்கள் உம்மை (ஞானமிக்க) நல்ல மனிதர்களில் ஒருவராகக் காண்கிறோம் (என்று கூறினார்கள்). அதற்கு அவர் கூறினார்: (இங்கு) உங்களிருவருக்கும் வழங்கப்படும் உணவு உங்களிடம் வ(ந்து சே)ருவதற்கு முன்பே உங்களது கனவின் விளக்கத்தை உங்களுக்கு அறிவித்துவிடுவேன். என் இறைவன் எனக்குக் கற்றுக்கொடுத்துள்ள அறிவுகளில் இதுவும் ஒன்றாகும். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களும், மறுமையை நிராகரிப்ப வர்களுமான சமூகத்தாரின் மார்க்கத்தை நான் நிச்சயமாக விட்டுவிட்டேன். நான் என் மூதாதையர்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன். அல்லாஹ்வுக்கு எதையும் நாங்கள் இணைவைப்பது எங்களுக்குத் தகுமானதன்று. இது எங்கள் மீதும் (இதர) மக்கள் மீதும் அல்லாஹ் புரிந்த அருளாகும். எனினும்,மனிதர்களில் பெரும்பாலோர் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதில்லை. என்னுடைய சிறைத் தோழர்களே! வெவ்வேறான பல தெய்வங்கள் சிறந்தவையா? அல்லது (யாவரையும்) அடக்கி ஆளுகின்ற ஏக இறைவனாகிய அல்லாஹ் சிறந்தவனா? அவனையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டி ருப்பவை யாவும் நீங்களும் உங்கள் மூதாதையரும் வைத்துக் கொண்ட (வெறும் கற்பனைப்) பெயர்களேயன்றி வேறில்லை. அவற்றுக்கு அல்லாஹ் யாதொரு ஆதாரத்தையும் இறக்கிவைக்கவில்லை. (ஆட்சி செலுத்தும்) அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. அவனையன்றி (வேறு எவரையும்) நீங்கள் வணங்கக் கூடாது என்று அவன் (உங்களுக்குக்) கட்டளை யிட்டிருக்கின்றான். இதுவே நேரான மார்க்கமாகும். ஆனால், மனிதர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்துகொள்வ தில்லை. என்னுடைய சிறைத் தோழர்களே! (உங்கள் கனவுகளுக்கான விளக்கம் இது தான் 🙂 உங்களில் ஒருவர் தம் எசமானுக்கு (எகிப்து அரசனுக்கு மறுபடியும்) திராட்சை மதுவைப் புகட்டிக் கொண்டிருப்பார்;மற்றவரோ சிலுவையில் அறையப்பட்டு, அவர் தலையிலிருந்து பறவைகள் கொத்தித் தின்னும். நீங்கள் எந்த விஷயம் குறித்து விளக்கம் கேட்டீர் களோ அந்த விஷயம் தீர்மானிக்கப்பட்டு விட்டது. அவ்விருவரில் யார் விடுதலை அடைவார் என்று யூசுஃப் கருதினாரோ அவரிடம், என்னைப் பற்றி உம் எசமானிடம் (எகிப்து அரசனிடம்) கூறுவீராக! என்று சொன்னார். ஆனால், (சிறையிலிருந்து விடுதலையாகிய) அவர் தம் எசமானிடம் (யூசுஃபைப் பற்றிக்) கூறவிடாமல் ஷைத்தான் அவரை மறதியிலாழ்த்திவிட்டான். ஆகவே, யூசுஃப் சிறைக்கூடத்தில் (பின்னும்) சில ஆண்டுகள் இருக்க வேண்டியவரானார். (இந்நிலையில் ஒருநாள் எகிப்து) அரசன், நான் (கனவில்) ஏழு கொழுத்த பசுக்களை, ஏழு மெலிந்த பசுக்கள் தின்று கொண்டி ருப்பதையும், ஏழு பசுமையான கதிர்களையும், வேறு (ஏழு) காய்ந்து (சாவியாகிவிட்ட) கதிர்களையும் கண்டேன். பிரதானிகளே! நீங்கள் கனவுக்கு விளக்கம் கூறக்கூடியவர் களாக இருந்தால், என்னுடைய (இக்)கனவின் பலனை எனக்கு அறிவியுங்கள் என்று கூறினார். (இவை) குழப்பமான கனவுகளாகும். இத்தகைய கனவுகளுக்கான விளக்கங்களை நாங்கள் அறிந்தவர்கள் அல்லர் என்று அவர்கள் கூறினார்கள். அவ்விருவரில் (சிறையிலிருந்து) விடுதலை யடைந்திருந்தவர், நீண்ட காலத்திற்குப் பின்னர், (யூசுஃபை) நினைவு கூர்ந்து இக்கனவின் விளக்கத்தை நான் உங்களுக்கு அறிவிப்பேன்; என்னை (யூசுஃபிடம்) அனுப்பி வையுங்கள் என்று சொன்னார். (சிறையில் யூசுஃபைக் கண்ட) அவர், யூசுஃபே! உண்மையாளரே! ஏழு கொழுத்த பசுக்களை, ஏழு மெ-ந்த பசுக்கள் தின்று கொண்டி ருப்பதையும் பசுமையான ஏழு கதிர்களையும் வேறு (ஏழு) காய்ந்த கதிர்களையும் (கனவில் கண்டால் அக்கனவுக்குப் பலன் என்ன என்பதை) எங்களுக்கு அறிவிப்பீராக. மக்கள் அறிந்துகொள்வதற்காக அவர்களிடம் நான் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கிறது (என்று கூறினார்). அதற்கு யூசுஃப் கூறினார்: நீங்கள் தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்கு (அமோக மாக) விவசாயம் செய்வீர்கள். பிறகு நீங்கள் அறுவடை செய்வதில் நீங்கள் உண்பதற்கு வேண்டிய ஒரு சிறிய அளவைத் தவிர, மீதியை அதற்குரிய கதிர்களிலேயே விட்டுவையுங்கள். பின்னர் அதற்கப்பால் கடினமான ஏழு (பஞ்ச) ஆண்டுகள் வரும். அந்தப் பஞ்சமான ஆண்டு களுக்காக நீங்கள் முன்பே பத்திரப்படுத்தி வைத்துள்ளதில் சொற்பமானதைத் தவிர மற்றதை அந்தப் பஞ்ச ஆண்டுகள் தின்றுவிடும். பின்னர் அதற்கப்பால் ஓராண்டு வரும். அதில் மக்களுக்கு நல்ல மழை பெய்யும்; அதில் (விளையும் கனிகளிலிருந்து) அவர்கள் பழரசங்கள் பிழி(ந்து உட் கொண்டு சுகமாக வாழ்)வார்கள். (இவ்விவரம் அரசருக்கு அறிவிக்கப்பட் டதும்) அவரை என்னிடம் அழைத்து வாருங்கள் என்று அரசர் கூறினார். (அவருடைய) தூதர் யூசுஃபிடம் வந்த போது அவர், நீர் உம் எசமானிடம் திரும்பிச் சென்று, தம் கைகளை வெட்டிக் கொண்ட பெண்களின் உண்மை நிலை என்ன? என்று அவரிடம் கேளும். நிச்சயமாக என் இறைவன் அப்பெண்களின் சதியை நன்கு அறிந்தவனாக இருக்கிறான் என்று கூறினார். (12:36-50) (12:45ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) இத்தகர’ எனும் சொல் ஃதகர்த்து (நினைவுகூர்ந்தேன்) எனும் சொல்லின் இஃப்தஅல்’ வாய்பாட்டில் அமைந்ததாகும். உம்மத்’ எனும் சொல்லுக்கு பல்லாண்டு’ என்று பொருள். இதே சொல் மற்றோர் ஓதும் முறையில் அமஹ்’ என்றும் ஓதப்பட்டுள்ளது. (இதன்படி) இதற்கு மறதி’ என்று பொருள் வரும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறு கின்றார்கள்: (12:49ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) யஉஸிரூன்’என்பதற்கு ஒ-வம், திராட்சை முத-யவற்றின் ரசத்தை அவர்கள் பிழிந்து கொண்டு (சுகவாழ்வில்) இருப்பார்கள் என்றுபொருள். (12:48ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) துஹ்ஸினூன்’ எனும் சொல்லுக்குப் பத்திரப்படுத்தி பாதுகாத்துவைப்பார்கள்’ என்று பொருள்.

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

(இறைத்தூதர்) யூசுஃப்(அலை) அவர்கள் (சிறையில்) கழித்த காலம் அளவிற்கு நான் சிறையில் காலம் கழித்திருந்து, பிறகு (அவரிடம் வந்ததைப் போன்றே) என்னை (விடுதலை செய்ய) அழைப்பவர் என்னிடம் வந்திருந்தால் நான் அதை ஏற்றுக்கொண்டிருப்பேன்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.7

Book : 91

(புகாரி: 6992)

بَابُ رُؤْيَا أَهْلِ السُّجُونِ وَالفَسَادِ وَالشِّرْكِ

لِقَوْلِهِ تَعَالَى: {وَدَخَلَ مَعَهُ السِّجْنَ فَتَيَانِ قَالَ أَحَدُهُمَا إِنِّي أَرَانِي أَعْصِرُ خَمْرًا وَقَالَ الآخَرُ إِنِّي أَرَانِي أَحْمِلُ فَوْقَ رَأْسِي خُبْزًا تَأْكُلُ الطَّيْرُ مِنْهُ نَبِّئْنَا بِتَأْوِيلِهِ إِنَّا نَرَاكَ مِنَ المُحْسِنِينَ. قَالَ لاَ يَأْتِيكُمَا طَعَامٌ تُرْزَقَانِهِ إِلَّا نَبَّأْتُكُمَا بِتَأْوِيلِهِ قَبْلَ أَنْ يَأْتِيَكُمَا ذَلِكُمَا مِمَّا عَلَّمَنِي رَبِّي إِنِّي تَرَكْتُ مِلَّةَ قَوْمٍ لاَ يُؤْمِنُونَ بِاللَّهِ وَهُمْ بِالْآخِرَةِ هُمْ كَافِرُونَ وَاتَّبَعْتُ مِلَّةَ آبَائِي إِبْرَاهِيمَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ مَا كَانَ لَنَا أَنْ نُشْرِكَ بِاللَّهِ مِنْ شَيْءٍ ذَلِكَ مِنْ فَضْلِ اللَّهِ عَلَيْنَا وَعَلَى النَّاسِ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لاَ يَشْكُرُونَ يَا صَاحِبَيِ السِّجْنِ أَأَرْبَابٌ مُتَفَرِّقُونَ} وَقَالَ الفُضَيْلُ: عِنْدَ قَوْلِهِ {يَا صَاحِبَيِ السِّجْنِ أَأَرْبَابٌ مُتَفَرِّقُونَ خَيْرٌ أَمِ اللَّهُ الوَاحِدُ القَهَّارُ. مَا تَعْبُدُونَ مِنْ دُونِهِ إِلَّا أَسْمَاءً سَمَّيْتُمُوهَا أَنْتُمْ وَآبَاؤُكُمْ مَا أَنْزَلَ اللَّهُ بِهَا مِنْ سُلْطَانٍ إِنِ الحُكْمُ إِلَّا لِلَّهِ أَمَرَ أَنْ لاَ تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ ذَلِكَ الدِّينُ القَيِّمُ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لاَ يَعْلَمُونَ. يَا صَاحِبَيِ السِّجْنِ أَمَّا أَحَدُكُمَا فَيَسْقِي رَبَّهُ خَمْرًا وَأَمَّا الآخَرُ فَيُصْلَبُ فَتَأْكُلُ الطَّيْرُ مِنْ رَأْسِهِ قُضِيَ الأَمْرُ الَّذِي فِيهِ تَسْتَفْتِيَانِ. وَقَالَ لِلَّذِي ظَنَّ أَنَّهُ نَاجٍ مِنْهُمَا اذْكُرْنِي عِنْدَ رَبِّكَ فَأَنْسَاهُ الشَّيْطَانُ ذِكْرَ رَبِّهِ فَلَبِثَ فِي السِّجْنِ بِضْعَ سِنِينَ. وَقَالَ المَلِكُ إِنِّي أَرَى سَبْعَ بَقَرَاتٍ سِمَانٍ يَأْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌ وَسَبْعَ سُنْبُلاَتٍ خُضْرٍ وَأُخَرَ يَابِسَاتٍ يَا أَيُّهَا المَلَأُ أَفْتُونِي فِي رُؤْيَايَ إِنْ كُنْتُمْ لِلرُّؤْيَا تَعْبُرُونَ قَالُوا أَضْغَاثُ أَحْلاَمٍ وَمَا نَحْنُ بِتَأْوِيلِ الأَحْلاَمِ بِعَالِمِينَ وَقَالَ الَّذِي نَجَا مِنْهُمَا وَادَّكَرَ بَعْدَ أُمَّةٍ أَنَا أُنَبِّئُكُمْ بِتَأْوِيلِهِ فَأَرْسِلُونِ يُوسُفُ أَيُّهَا الصِّدِّيقُ أَفْتِنَا فِي سَبْعِ بَقَرَاتٍ سِمَانٍ يَأْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌ وَسَبْعِ سُنْبُلاَتٍ خُضْرٍ وَأُخَرَ يَابِسَاتٍ لَعَلِّي أَرْجِعُ إِلَى النَّاسِ لَعَلَّهُمْ يَعْلَمُونَ} (قَالَ تَزْرَعُونَ سَبْعَ سِنِينَ دَأْبًا فَمَا حَصَدْتُمْ فَذَرُوهُ فِي سُنْبُلِهِ إِلَّا قَلِيلًا مِمَّا تَأْكُلُونَ) {ثُمَّ يَأْتِي مِنْ بَعْدِ ذَلِكَ سَبْعٌ شِدَادٌ يَأْكُلْنَ مَا قَدَّمْتُمْ لَهُنَّ إِلَّا قَلِيلًا مِمَّا تُحْصِنُونَ ثُمَّ يَأْتِي مِنْ بَعْدِ ذَلِكَ عَامٌ فِيهِ يُغَاثُ النَّاسُ وَفِيهِ يَعْصِرُونَ وَقَالَ المَلِكُ ائْتُونِي بِهِ فَلَمَّا جَاءَهُ الرَّسُولُ قَالَ ارْجِعْ إِلَى رَبِّكَ} [يوسف: 49] وَادَّكَرَ: افْتَعَلَ مِنْ ذَكَرَ، أُمَّةٍ: قَرْنٍ، وَتُقْرَأُ: أَمَهٍ: نِسْيَانٍ وَقَالَ ابْنُ عَبَّاسٍ: ” يَعْصِرُونَ: الأَعْنَابَ وَالدُّهْنَ، تُحْصِنُونَ: تَحْرُسُونَ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ مَالِكٍ، عَنِ  الزُّهْرِيِّ، أَنَّ سَعِيدَ بْنَ المُسَيِّبِ، وَأَبَا عُبَيْدٍ، أَخْبَرَاهُ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«لَوْ لَبِثْتُ فِي السِّجْنِ مَا لَبِثَ يُوسُفُ، ثُمَّ أَتَانِي الدَّاعِي لَأَجَبْتُهُ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.