தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-1612

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் அன்றும் நோன்புப் பெருநாள் அன்றும் (திடலுக்குப்) புறப்பட்டுச் சென்று, முதலில் தொழுகையை நிறைவேற்றுவார்கள். தொழுகையை முடித்து சலாம் கொடுத்ததும் மக்களை முன்னோக்கி (உரை நிகழ்த்தியபடி) நிற்பார்கள். மக்கள் தொழுத இடத்தில் அப்படியே அமர்ந்திருப்பார்கள். ஏதேனும் படைப் பிரிவை அனுப்ப வேண்டிய தேவையிருந்தால் அதை மக்களிடம் அறிவிப்பார்கள். அல்லது வேறு தேவை ஏதேனும் இருந்தால், அதற்கான உத்தரவைப் பிறப்பிப்பார்கள். (அன்றைய தினம்) அவர்கள் “தர்மம் செய்யுங்கள்; தர்மம் செய்யுங்கள்; தர்மம் செய்யுங்கள்” என்று (திரும்பத் திரும்பக்) கூறுவார்கள். மக்களில் அதிகமாகத் தர்மம் செய்வோர் பெண்களாக இருந்தார்கள். பிறகு திரும்பிச் செல்வார்கள்.

(மதீனாவின் ஆளுநராக) மர்வான் பின் அல்ஹகம் வரும்வரை (முதலில் தொழுகை, பிறகு உரை எனும்) இந்நிலையே நீடித்தது. (மர்வான் ஆட்சிப் பொறுப்பேற்று) அவரும் நானும் ஒருவர் மற்றவரின் இடுப்பில் கைவைத்து அணைத்தவர்களாக (அல்லது கை கோத்தவர் களாக) தொழும் திடலுக்கு வந்தபோது, கஸீர் பின் அஸ்ஸல்த் என்பவர் களிமண்ணாலும் செங்கல்லாலும் கட்டியிருந்த ஒரு சொற்பொழிவு மேடை அங்கு (புதிதாக) காணப்பட்டது. அப்போது மர்வான் என்னை சொற்பொழிவு மேடை நோக்கி இழுக்க, நான் அவரைத் தொழுகைக்காக இழுக்க அவர் என்னிடமிருந்து தனது கையை விடுவித்துக் கொண்டார். (தொழுகைக்கு முன்பே உரை நிகழ்த்திட நின்றார்.) அவரிடம் இந்த நிலையைக் கண்ட நான் “எங்கே, முதலில் தொழுகைதானே நடைபெற வேண்டும்?”என்று கேட்டேன். அதற்கு மர்வான் “இல்லை அபூ சயீதே! நீங்கள் அறிந்திருக்கும் அந்த நடைமுறை கைவிடப்பட்டது” என்று கூறினார். அதற்கு நான் “இல்லை, என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நான் அறிந்திருக்கும் (நபிகளாரின்) இந்த நடைமுறையைவிடச் சிறந்த ஒன்றை உங்களால் கொண்டுவர முடியாது” என்று கூறினேன். (இவ்வாறு மூன்று முறை கூறிவிட்டு, அபூசயீத் (ரலி) அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டார்கள்.)

இதை இயாள் பின் அப்தில்லாஹ் பின் சஅத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 8

(முஸ்லிம்: 1612)

حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَابْنُ حُجْرٍ، قَالُوا: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ دَاوُدَ بْنِ قَيْسٍ، عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللهِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ

أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ يَخْرُجُ يَوْمَ الْأَضْحَى، وَيَوْمَ الْفِطْرِ، فَيَبْدَأُ بِالصَّلَاةِ، فَإِذَا صَلَّى صَلَاتَهُ وَسَلَّمَ، قَامَ فَأَقْبَلَ عَلَى النَّاسِ، وَهُمْ جُلُوسٌ فِي مُصَلَّاهُمْ، فَإِنْ كَانَ لَهُ حَاجَةٌ بِبَعْثٍ، ذَكَرَهُ لِلنَّاسِ، أَوْ كَانَتْ لَهُ حَاجَةٌ بِغَيْرِ ذَلِكَ، أَمَرَهُمْ بِهَا، وَكَانَ يَقُولُ: «تَصَدَّقُوا، تَصَدَّقُوا، تَصَدَّقُوا»، وَكَانَ أَكْثَرَ مَنْ يَتَصَدَّقُ النِّسَاءُ، ثُمَّ يَنْصَرِفُ، فَلَمْ يَزَلْ كَذَلِكَ حَتَّى كَانَ مَرْوَانُ بْنُ الْحَكَمِ، فَخَرَجْتُ مُخَاصِرًا مَرْوَانَ حَتَّى أَتَيْنَا الْمُصَلَّى، فَإِذَا كَثِيرُ بْنُ الصَّلْتِ قَدْ بَنَى مِنْبَرًا مِنْ طِينٍ وَلَبِنٍ، فَإِذَا مَرْوَانُ يُنَازِعُنِي يَدَهُ، كَأَنَّهُ يَجُرُّنِي نَحْوَ الْمِنْبَرِ، وَأَنَا أَجُرُّهُ نَحْوَ الصَّلَاةِ، فَلَمَّا رَأَيْتُ ذَلِكَ مِنْهُ، قُلْتُ: أَيْنَ الِابْتِدَاءُ بِالصَّلَاةِ؟ فَقَالَ: لَا، يَا أَبَا سَعِيدٍ قَدْ تُرِكَ مَا تَعْلَمُ، قُلْتُ: كَلَّا، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا تَأْتُونَ بِخَيْرٍ مِمَّا أَعْلَمُ، ثَلَاثَ مِرَارٍ ثُمَّ انْصَرَفَ


Tamil-1612
Shamila-889
JawamiulKalim-1478




மேலும் பார்க்க: புகாரி-956 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.