தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-117

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அலீ‏ ‏பின்‏ ‏அபூதாலிப்‏ (‏ரலி‏) ‏அவர்கள்‏ ‏என்னிடம்‏ ‏வந்து‏ ‏சிறுநீர்‏ ‏கழித்து‏ ‏விட்டு‏ ‏உலூச்‏ ‏செய்ய‏ ‏தண்ணீர்‏ ‏கொண்டு‏ ‏வரும்படிச்‏ ‏சொன்னார்கள்‏. ‏நாங்கள்‏ ‏தண்ணீர்‏ ‏நிரம்பிய‏ ‏பாத்திரத்தைக்‏ ‏கொண்டு‏ ‏வந்து‏ ‏அவர்கள்‏ ‏முன்னால்‏ ‏வைத்தோம்‏. ‏அப்போது‏ ‏அவர்கள், இப்னு‏ ‏அப்பாஸே‏! ‏அல்லாஹ்வின்‏ ‏தூதர்‏(‏ஸல்‏) ‏அவர்கள்‏ ‏எப்படி‏ ‏உலூச்‏ ‏செய்தார்கள்‏ ‏என்று‏ ‏உமக்கு‏ ‏நான்‏ ‏செய்து‏ ‏காண்பிக்கவா? என்று‏ ‏கேட்க‏ ‏நான்‏ ‏ஆம்‏ ‏என்றேன்‏. ‏அப்போது‏ ‏அவர்கள்‏ ‏பாத்திரத்தை‏ ‏தனது‏ ‏கையில்‏ ‏சாய்த்து‏ ‏அதைக்‏ ‏கழுவினார்கள்‏. ‏பிறகு‏ (‏கழுவிய‏) ‏தமது‏ ‏வலது‏ ‏கையைப்‏ ‏பாத்திரத்தில்‏ ‏விட்டு‏ ‏அதைக்‏ ‏கொண்டு‏ ‏மற்றொரு‏ ‏கையில்‏ ‏நீர்‏ ‏ஊற்றி‏ ‏பின்‏ ‏தமது‏ ‏இரு‏ ‏முன்னங்‏ ‏கைகளையும்‏ ‏கழுவினார்கள்‏. ‏பின்னர்‏ ‏வாய்‏ ‏கொப்பளித்து‏ ‏மூக்கையும்‏ ‏சுத்தப்‏ ‏படுத்தினார்கள்‏. ‏பின்‏ ‏இரு‏ ‏கைகளையும்‏ ‏இணைத்து‏ ‏பாத்திரத்தில்‏ ‏செலுத்தி‏ ‏அவ்விரு‏ ‏கைகளினாலும்‏ ‏நீர்‏ ‏அள்ளி‏ ‏அதைக்‏ ‏தமது‏ ‏முகத்தில்‏ ‏அடித்து‏ ‏தனது‏ ‏இரு‏ ‏பெருவிரல்களையும்‏ ‏தனது‏ ‏இரு‏ ‏காதுகளின்‏ ‏முற்பகுதியில்‏ ‏திணித்தார்கள்‏. ‏இது‏ ‏போன்று‏ ‏இரண்டாவது‏ ‏முறையும், பின்னர்‏ ‏மூன்றாவது‏ ‏முறையும்‏ ‏செய்தார்கள்‏. ‏தனது‏ ‏வலது‏ ‏கையினால்‏ ‏ஒரு‏ ‏கையளவு‏ ‏தண்ணீர்‏ ‏எடுத்து‏ ‏தனது‏ ‏முகத்தில்‏ ‏வழியவிட்டார்‏ ‏கள்‏. ‏பிறகு‏ ‏தனது‏ ‏இரு‏ ‏முழங்கைகளையும்‏ ‏முட்டுக்கை‏ ‏உட்பட‏ ‏மும்முறை‏ ‏கழுவினார்கள்‏. ‏பிறகு‏ ‏தனது‏ ‏தலையையும்‏ ‏தம்மிரு‏ ‏காதுகளின்‏ ‏பின்புறத்தையும்‏ ‏மஸஹ்‏ ‏செய்தார்கள்‏. ‏பிறகு‏ ‏தன்‏ ‏இரு‏ ‏கைகளையும்‏ ‏சேர்த்து‏ ‏பாத்திரத்தில்‏ ‏நுழைத்து‏ ‏இரு‏ ‏கையளவு‏ ‏நீரெடுத்து‏ ‏அதை‏ ‏செருப்புடன்‏ ‏கூடிய‏ ‏தமது‏ ‏காலில்‏ ‏அடித்து‏ ‏தண்ணீரில்‏ (‏நனையும்‏ ‏படி‏ ‏அனத்து‏) ‏திருகி‏ ‏விட்டார்கள்‏. ‏இதைப்போன்றே‏ ‏மற்றொரு‏ ‏காலிலும்‏ ‏செய்தார்கள்‏ ‏என்று‏ ‏இப்னு‏ ‏அப்பாஸ்‏ ‏‏(‏ரலி‏) ‏கூற‏ ‏நான்‏ ‏செருப்புடன்‏ ‏இருக்கும்போதா? என்று‏ ‏கேட்க‏ ‏செருப்பு‏ ‏அணிந்திருக்கும்‏ ‏போது‏ ‏தான்‏ ‏என்று‏ ‏பதில்‏ ‏அளித்தார்கள்‏. ‏செருப்பு‏ ‏அணிந்திருக்கும்‏ ‏போதுதானா? என்று‏ ‏நான்‏ ‏மீண்டும்‏ ‏கேட்க‏ ‏செருப்பு‏ ‏அணிந்து‏ ‏இருக்கும்போது‏ ‏தான்‏ ‏என்றார்கள்‏. ‏செருப்பு‏ ‏அணிந்திருக்கும்‏ ‏போதா‏ ‏என்று‏ ‏நான்‏ ‏மீண்டும்‏ ‏கேட்க‏ ‏செருப்பு‏ ‏அணிந்திருக்கும்‏ ‏போது‏ ‏தான்‏ ‏என்று‏ ‏கூறினார்கள்‏ ‏என‏ ‏உபைதுல்லாஹ்‏ ‏அல்‏ ‏கவ்லானி‏ ‏அவர்கள்‏ ‏இப்னு‏ ‏அப்பாஸ்‏ (‏ரலி‏) ‏கூறியதாக‏ ‏அறிவிக்கிறார்கள்‏.‏

இமாம்‏ ‏அபூதாவூத்‏ ‏குறிப்பிடுகின்றார்‏ ‏கள், அதாவது‏ ‏ஷைபா‏ ‏அவர்களிடமிருந்து‏ ‏இப்னு‏ ‏ஜுரைஜ்‏ ‏அவர்கள்‏ ‏அறிவிக்கின்ற‏ (‏இந்த‏) ‏ஹதீஸ்‏ ‏அலி‏ (‏ரலி‏) ‏அவர்களின்‏ ‏ஹதீஸிற்கு‏ ‏ஒத்து‏ ‏இருக்கிறது‏. ‏ஏனெனில்‏ ‏இப்னு‏ ‏ஜுரைஜ்‏ ‏அவர்களிடமிருந்து‏ ‏ஹஜ்ஜாஜ்‏ ‏பின்‏ ‏முஹம்மது‏ ‏அறிவிக்கின்ற‏ ‏ஹதீஸில்‏ ‏அலி‏(‏ரலி‏) ‏அவர்கள்‏ ‏தமது‏ ‏தலைக்கு‏ ‏ஒரு‏ ‏தடவைதான்‏ ‏மஸஹ்‏ ‏செய்தார்கள்‏ ‏என்று‏ ‏அறிவிக்கின்றார்‏. ‏அதே‏ ‏இப்னு‏ ‏ஜுரைஜ்‏ ‏அவர்களிடம்‏ ‏இருந்து‏ ‏இப்னு‏ ‏வஹ்ப்‏ ‏அறிவிக்கின்றபோது‏ ‏தமது‏ ‏தலைக்கு‏ ‏மூன்று‏ ‏தடவை‏ ‏மஸஹ்‏ ‏செய்தார்கள்‏ ‏என‏ ‏அறிவிக்கிறார்கள்‏.‏

‎(குறிப்பு‏ : ‏இப்னு‏ ‏ஹிப்பானிலும், பஸ்ஸாரிலும்‏ ‏இது‏ ‏இடம்‏ ‏பெற்றுள்ளது‏.)‏

(அபூதாவூத்: 117)

حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ يَحْيَى الْحَرَّانِيُّ، حَدَّثَنَا مُحَمَّدٌ يَعْنِي ابْنَ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ طَلْحَةَ بْنِ يَزِيدَ بْنِ رُكَانَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ الْخَوْلَانِيُّ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ

دَخَلَ عَلَيَّ عَلِيٌّ يَعْنِي ابْنَ أَبِي طَالِبٍ، وَقَدْ أَهْرَاقَ الْمَاءَ فَدَعَا بِوَضُوءٍ، فَأَتَيْنَاهُ بِتَوْرٍ فِيهِ مَاءٌ، حَتَّى وَضَعْنَاهُ بَيْنَ يَدَيْهِ، فَقَالَ: يَا ابْنَ عَبَّاسٍ، أَلَا أُرِيكَ كَيْفَ كَانَ يَتَوَضَّأُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قُلْتُ: بَلَى، قَالَ: «فَأَصْغَى الْإِنَاءَ عَلَى يَدِهِ فَغَسَلَهَا، ثُمَّ أَدْخَلَ يَدَهُ الْيُمْنَى فَأَفْرَغَ بِهَا عَلَى الْأُخْرَى، ثُمَّ غَسَلَ كَفَّيْهِ، ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْثَرَ، ثُمَّ أَدْخَلَ يَدَيْهِ فِي الْإِنَاءِ جَمِيعًا، فَأَخَذَ بِهِمَا حَفْنَةً مِنْ مَاءٍ فَضَرَبَ بِهَا عَلَى وَجْهِهِ، ثُمَّ أَلْقَمَ إِبْهَامَيْهِ مَا أَقْبَلَ مِنْ أُذُنَيْهِ، ثُمَّ الثَّانِيَةَ، ثُمَّ الثَّالِثَةَ مِثْلَ ذَلِكَ، ثُمَّ أَخَذَ بِكَفِّهِ الْيُمْنَى قَبْضَةً مِنْ مَاءٍ، فَصَبَّهَا عَلَى نَاصِيَتِهِ فَتَرَكَهَا تَسْتَنُّ عَلَى وَجْهِهِ، ثُمَّ غَسَلَ ذِرَاعَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ ثَلَاثًا ثَلَاثًا، ثُمَّ مَسَحَ رَأْسَهُ وَظُهُورَ أُذُنَيْهِ، ثُمَّ أَدْخَلَ يَدَيْهِ جَمِيعًا فَأَخَذَ حَفْنَةً مِنْ مَاءٍ فَضَرَبَ بِهَا عَلَى رِجْلِهِ، وَفِيهَا النَّعْلُ فَفَتَلَهَا بِهَا، ثُمَّ الْأُخْرَى مِثْلَ ذَلِكَ» قَالَ: قُلْتُ: وَفِي النَّعْلَيْنِ؟ قَالَ: وَفِي النَّعْلَيْنِ، قَالَ: قُلْتُ: وَفِي النَّعْلَيْنِ؟ قَالَ: وَفِي النَّعْلَيْنِ، قَالَ: قُلْتُ: وَفِي النَّعْلَيْنِ؟ قَالَ: وَفِي النَّعْلَيْنِ،

قَالَ أَبُو دَاوُدَ: ” وَحَدِيثُ ابْنِ جُرَيْجٍ، عَنْ شَيْبَةَ، يُشْبِهُ حَدِيثَ عَلِيٍّ، لِأَنَّهُ قَالَ فِيهِ حَجَّاجُ بْنُ مُحَمَّدِ بْنِ جُرَيْجٍ: وَمَسَحَ بِرَأْسِهِ مَرَّةً وَاحِدَةً، وَقَالَ ابْنُ وَهْبٍ فِيهِ، عَنِ ابْنِ جُرَيْجٍ، وَمَسَحَ بِرَأْسِهِ ثَلَاثًا


AbuDawood-Tamil-117.
AbuDawood-Shamila-117.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.