பாடம் : 213
இருவரில் ஒருவர் இன்னொருவருக்கு தொழுவிக்கும் போது அவ்விருவரும் எப்படி நிற்க வேண்டும் ?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) யிடம் வந்தபோது நெய், பேரீத்தம்பழம் ஆகியவற்றைக் கொடுத்தனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் பேரீத்தம் பழத்தை அதன் பாத்திரத்தில் வையுங்கள், தேனை அதன் பையிலேயே வையுங்கள். ஏனெனில் நான் நோன்பு நோற்றிருக்கின்றேன் என்று சொன்னார்கள். பிறகு எழுந்து எங்களுக்கு நபிலான தொழுகையின் இரு ரக்அத்களை தொழுவித்தார்கள். உம்மு ஸுலைம், உம்மு ஹராம் ஆகிய இருவரும் எழுந்து எங்கள் பின்னால் நின்று தொழுதார்கள் என அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.
என்னை நபி (ஸல்) அவர்கள் விரிப்பில் தனது வலது பக்கத்தில் நிறுத்தினார்கள் என்று அனஸ் (ரலி) அறிவித்தார் என்றே எனக்கு நினைவில் உள்ளது என அனஸ் (ரலி) யிடமிருந்து அறிவிக்கும் சாபித் அறிவிக்கின்றார்.
(அபூதாவூத்: 608)213- بَابُ الرَّجُلَيْنِ يَؤُمُّ أَحَدُهُمَا صَاحِبَهُ كَيْفَ يَقُومَانِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنَا ثَابِتٌ، عَنْ أَنَسٍ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ” دَخَلَ عَلَى أُمِّ حَرَامٍ فَأَتَوْهُ بِسَمْنٍ وَتَمْرٍ، فَقَالَ: « رُدُّوا هَذَا فِي وِعَائِهِ، وَهَذَا فِي سِقَائِهِ، فَإِنِّي صَائِمٌ»، ثُمَّ قَامَ فَصَلَّى بِنَا رَكْعَتَيْنِ تَطَوُّعًا فَقَامَتْ أُمُّ سُلَيْمٍ وَأُمُّ حَرَامٍ خَلْفَنَا، قَالَ ثَابِتٌ: وَلَا أَعْلَمُهُ إِلَّا قَالَ: أَقَامَنِي عَنْ يَمِينِهِ عَلَى بِسَاطٍ
AbuDawood-Tamil-608.
AbuDawood-Shamila-608.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்