தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1693

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 நாஃபிவு அறிவித்தார்.

அப்துல்லாஹ், தம் தந்தை இப்னு உமர்(ரலி) அவர்களிடம், ‘நீங்கள் (ஹஜ்ஜுக்குப் போகாமல்) இங்கே இருங்கள். ஏனெனில் பைத்துல்லாஹ்வை நெருங்க விடாமல் நீங்கள் தடுக்கப்படுவீர்கள் என்ற அச்சம் எனக்கு ஏற்படுகிறது’ எனக் கூறினார். அதற்கு இப்னு உமர்(ரலி), ‘அப்படியாயின் நான் நபி(ஸல்) அவர்கள் செய்ததைப் போன்றே செய்வேன். மேலும் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உள்ளது என அல்லாஹ் கூறியுள்ளான்.

எனவே, நான் என் மீது உம்ராவைக் கடமையாக்கிக் கொண்டேன் என்பதற்கு உங்களையே நான் சாட்சியாக்குகிறேன்’ எனக் கூறிவிட்டு, உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தார்கள். பிறகு அங்கிருந்து புறப்பட்டு பைதா என்னுமிடத்தை அடைந்ததும் ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் சேர்த்து தல்பியா கூறினார்கள்.

பிறகு அவர்கள் ‘ஹஜ்ஜும் உம்ராவும் ஒரே மாதிரியானவையே!’ எனக் கூறிவிட்டு, குதைத் என்னுமிடத்தில் குர்பானிப் பிராணியை விலைக்கு வாங்கிக் கொண்டு இறையில்லம் கஅபாவுக்கு வந்து, அவ்விரண்டிற்காகவும் (ஹஜ்ஜுக்காகவும் உம்ராவிற்காகவும்) ஒரேயொரு வலம்வந்தார்கள். ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்றும் வரை அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை.
Book :25

(புகாரி: 1693)

بَابُ مَنِ اشْتَرَى الهَدْيَ مِنَ الطَّرِيقِ

حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، قَالَ

قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمْ لِأَبِيهِ: أَقِمْ، فَإِنِّي لاَ آمَنُهَا أَنْ سَتُصَدُّ عَنِ البَيْتِ، قَالَ: «إِذًا أَفْعَلُ كَمَا فَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَدْ قَالَ اللَّهُ»: {لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ} [الأحزاب: 21]، «فَأَنَا أُشْهِدُكُمْ أَنِّي قَدْ أَوْجَبْتُ عَلَى نَفْسِي العُمْرَةَ»، فَأَهَلَّ بِالعُمْرَةِ مِنَ الدَّارِ، قَالَ: ثُمَّ خَرَجَ حَتَّى إِذَا كَانَ بِالْبَيْدَاءِ أَهَلَّ بِالحَجِّ وَالعُمْرَةِ، وَقَالَ: «مَا شَأْنُ الحَجِّ وَالعُمْرَةِ إِلَّا وَاحِدٌ»، ثُمَّ اشْتَرَى الهَدْيَ مِنْ قُدَيْدٍ، ثُمَّ قَدِمَ فَطَافَ لَهُمَا طَوَافًا وَاحِدًا، فَلَمْ يَحِلَّ حَتَّى حَلَّ مِنْهُمَا جَمِيعًا





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.