தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1792

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதவாது:

நபி (ஸல்) அவர்கள் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினார்கள். நாங்களும் அவர்களுடன் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினோம். அவர்கள் மக்காவில் நுழைந்ததும் தவாஃப் செய்தார்கள். நாங்களும் அவர்களுடன் தவாஃப் செய்தோம். அவர்கள் ஸஃபா-மர்வாவுக்கு வந்ததும் நாங்களும் அவர்களுடன் அங்கு வந்தோம். மேலும் மக்காவாசிகள் நபி (ஸல்) அவர்களைத் தாக்கிவிடக் கூடாது என்பதற்காக நாங்கள் அவர்களை மறைத்துக்கொண்டு (அவர்களுக்குத் தடுப்பாக) நின்றோம்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இஸ்மாயீல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

என் நண்பர் ஒருவர் இப்னு அபீஅவ்ஃபா (ரலி) அவர்களிடம் ,,நபி (ஸல்) அவர்கள் கஅபாவின் உள்ளே சென்றார்களா,, எனக் கேட்டதற்கு அவர்கள் இல்லை! என்றார்கள். பிறகு அவர் நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களைப் பற்றி என்ன கூறினார்கள் என்பதை எங்களுக்கு அறிவியுங்களேன்!,, எனக் கேட்டதற்கு அவர்கள் கதீஜாவுக்கு நற்செய்தி கூறுங்கள் அவருக்கு சொர்க்கத்தில் முத்தாலான ஒரு மாளிகை உள்ளது! அதில் வீண் கூச்சலோ எந்த சிரமமோ இருக்காது! என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகச் சொன்னார்கள்.
Book :26

(புகாரி: 1792)

قَالَ: فَحَدِّثْنَا مَا قَالَ لِخَدِيجَةَ؟ قَالَ

«بَشِّرُوا خَدِيجَةَ بِبَيْتٍ مِنَ الجَنَّةِ مِنْ قَصَبٍ، لاَ صَخَبَ فِيهِ، وَلاَ نَصَبَ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.