பாடம் : 73 வியாபாரத்தின் போது அனுமதிக்கப்படாத நிபந்தனைகளை விதித்தால்…?
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(அடிமைப் பெண்ணாயிருந்த) பரீரா என்னிடம் வந்து, ‘என்னுடைய எஜமானர்கள் ஆண்டிற்கு ஓர் ஊக்கியா வீதம் ஒன்பது ஊக்கியாக்கள் செலுத்திய பின் என்னை விடுதலை செய்து விடுவதாக எழுதித் தந்துள்ளனர்; அதற்கு நீங்கள் உதவ வேண்டும்! என்றார்.
நான் ‘உன் மரணத்திற்குப் பின் உனக்கு வாரிசு தாரராகும் உரிமை எனக்கு இருக்க வேண்டும் என்பதை உன் எஜமானர்கள் ஒப்புக்கொண்டால் அவர்களுக்காக அந்தத் தொகையை நான் ஏற்பாடு செய்து தருகிறேன்!’ எனக் கூறினேன். உடனே, பரீரா தம் எஜமானர்களிடம் சென்றார். அவர்களிடம் அவர் இதைக் கூறியபோது, அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.
நபி(ஸல்) அவர்கள் அமர்ந்திருக்கும்போது பரீரா, தம் எஜமானர்களிடமிருந்து திரும்பி வந்து, ‘விஷயத்தை எஜமானர்களிடம் கூறினேன்; அவர்கள் ‘வாரிசுரிமை தமக்கே இருக்க வேண்டும்’ எனக் கூறி, (நீங்கள் கேட்டதை) நிராகரித்துவிட்டனர்!’ என்று கூறினார். இதை நபி(ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். நானும் நபி(ஸல்) அவர்களிடம் விபரத்தைக் கூறினேன். நபி(ஸல்) அவர்கள். ‘பரீராவை நீ வாங்கிக் கொள்! ‘வாரிசுரிமை உனக்கே உரியது’ என்று அவர்களிடம் உறுதியாகத் தெரிவித்துவிடு! ஏனெனில் (அடிமை இறந்த பின் அவனுக்கு) விடுதலை செய்தவருக்கே உரியது!’ எனக் கூறினார்கள். நானும் அவ்வாறே செய்தேன்.
பின்னர், நபி(ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து, அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து, அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனையும் வீணானதே; அவை நூறு நிபந்தனைகளானாலும் சரியே! அல்லாஹ்வின் தீர்ப்பே நிறைவேற்றத்தக்கது! அல்லாஹ்வின் நிபந்தனையே உறுதியானது! (கட்டுப்படுத்தும் வலிமையுடையது!) நிச்சயமாக அடிமைகளுக்கு வாரிசாகும் உரிமை, விடுதலை செய்தவருக்குத் தான்!’ எனக் கூறினார்கள்.
Book : 34
بَابُ إِذَا اشْتَرَطَ شُرُوطًا فِي البَيْعِ لاَ تَحِلُّ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ
جَاءَتْنِي بَرِيرَةُ فَقَالَتْ: كَاتَبْتُ أَهْلِي عَلَى تِسْعِ أَوَاقٍ، فِي كُلِّ عَامٍ وَقِيَّةٌ، فَأَعِينِينِي، فَقُلْتُ: إِنْ أَحَبَّ أَهْلُكِ أَنْ أَعُدَّهَا لَهُمْ، وَيَكُونَ وَلاَؤُكِ لِي فَعَلْتُ، فَذَهَبَتْ بَرِيرَةُ إِلَى أَهْلِهَا، فَقَالَتْ لَهُمْ فَأَبَوْا ذَلِكَ عَلَيْهَا، فَجَاءَتْ مِنْ عِنْدِهِمْ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسٌ، فَقَالَتْ: إِنِّي قَدْ عَرَضْتُ ذَلِكَ عَلَيْهِمْ فَأَبَوْا إِلَّا أَنْ يَكُونَ الوَلاَءُ لَهُمْ، فَسَمِعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرَتْ عَائِشَةُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «خُذِيهَا وَاشْتَرِطِي لَهُمُ الوَلاَءَ، فَإِنَّمَا الوَلاَءُ لِمَنْ أَعْتَقَ»، فَفَعَلَتْ عَائِشَةُ، ثُمَّ قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي النَّاسِ، فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ: «أَمَّا بَعْدُ، مَا بَالُ رِجَالٍ يَشْتَرِطُونَ شُرُوطًا لَيْسَتْ فِي كِتَابِ اللَّهِ، مَا كَانَ مِنْ شَرْطٍ لَيْسَ فِي كِتَابِ اللَّهِ فَهُوَ بَاطِلٌ، وَإِنْ كَانَ مِائَةَ شَرْطٍ، قَضَاءُ اللَّهِ أَحَقُّ، وَشَرْطُ اللَّهِ أَوْثَقُ، وَإِنَّمَا الوَلاَءُ لِمَنْ أَعْتَقَ»
சமீப விமர்சனங்கள்