ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நான் பரீராவை வாங்கினேன். அப்போது அவரின் எஜமானர்கள் ‘அவருக்கு வாரிசாகும் உரிமை தமக்கே உரியதாக இருக்கவேண்டும்’ என்று நிபந்தனையிட்டார்கள். நான் இதை நபி(ஸல்) அவர்களிடம் சொன்னேன். அவர்கள், ‘அவளை விடுதலை செய்து விடு! ஏனெனில், ‘வலா’ – விலையைக் கொடுப்பவருக்கே (விடுதலை செய்பவருக்கே) உரியதாகும்’ என்று கூறினார்கள்.
நான் அவரை விடுதலை செய்துவிட்டேன். நபி(ஸல்) அவர்கள் பரீராவை அழைத்து, அவரின் கணவர் விஷயத்தில் (அவருடன் வாழ்வது, அல்லது பிரிந்து விடுவது இரண்டில்) எதையும் தேர்ந்தெடுத்துக் கொள்ள உரிமை வழங்கினார்கள். அதற்கு பரீரா, ‘அவர் எனக்கு எவ்வளவுதான் கொடுத்தாலும் அவரிடம் நான் இருக்க மாட்டேன்’ என்று கூறி (கணவனைப் பிரிந்து) தனித்து வாழ்வதையே தேர்ந்தெடுத்தார்.
Book :49
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ
اشْتَرَيْتُ بَرِيرَةَ، فَاشْتَرَطَ أَهْلُهَا وَلاَءَهَا، فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَعْتِقِيهَا، فَإِنَّ الوَلاَءَ لِمَنْ أَعْطَى الوَرِقَ»، فَأَعْتَقْتُهَا، فَدَعَاهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَخَيَّرَهَا مِنْ زَوْجِهَا، فَقَالَتْ: لَوْ أَعْطَانِي كَذَا وَكَذَا مَا ثَبَتُّ عِنْدَهُ، فَاخْتَارَتْ نَفْسَهَا
சமீப விமர்சனங்கள்