பாடம் : 4 முகாத்தப் சம்மதித்தால் அவனை விற்று விடுதல்.
ஆயிஷா (ரலி) அவர்கள், முகாத்தப், (விடுதலைப் பத்திரத்தின்படி) தனது விலை முழுவதையும் செலுத்தாமல் இன்னும் பாக்கி வைத்திருக்கும் வரை அடிமையாகவே இருப்பான் என்று கூறினார்கள்.
ஸைத் பின் சாபித் (ரலி) அவர்கள், அவன் ஒரேயொரு திர்ஹம் பாக்கி வைத்திருந்தாலும் கூட அடிமையே ஆவான் என்று கூறினார்கள்.
அவன் சிறிது தொகை பாக்கி வைத்திருக்கும் வரை – அவன் வாழ்ந்தாலும் சரி, இறந்தாலும் சரி, அவன் குற்றம் புரிந்தாலும் சரி-அடிமையே என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
அம்ரா பின்த்து அப்திர் ரஹ்மான் கூறியதாவது.
பரீரா (ரலி) அவர்கள், இறை நம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் (தன் விடுதலைப் பத்திரத் தொகையைச் செலுத்தும் விஷயத்தில்) உதவி கேட்டு வந்தார். அவரிடம் ஆயிஷா (ரலி) அவர்கள், உன் எஜமானர்கள், நான் அவர்களுக்கு ஒரே தடவையில் உன் விலையைக் கொடுத்து, உன்னை விடுதலை செய்து விடுவதை (ஏற்றுக் கொண்டு) சம்மதித்தால் நான் அவ்வாறே (முழுத் தொகையையும்) ஒரே தடவையில் செலுத்தி விடுகின்றேன் என்று கூறினார்கள்.
அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் இந்த விருப்பத்தை பரீரா (ரலி) தன் எஜமானர்களிடம் கூறினார்கள். அதற்கு அவர்கள், (உனது) வாரிசுரிமை எங்களுக்கே உரியதாக இருந்தாலே தவிர, நாங்கள் இதற்குச் சம்மதிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர்.
ஆயிஷா (ரலி) அவர்கள் இந்தச் செய்தியை அல்லாஹ்வின் தூதரிடம் கூறினார்கள். அதற்கு அவர்கள், நீ அவளை வாங்கி விடுதலை செய்துவிடு. ஏனெனில், விடுதலை செய்பவருக்கே வாரிசுரிமை உரியதாகும் என்று கூறினார்கள்.
Book : 49
بَابُ بَيْعِ المُكَاتَبِ إِذَا رَضِيَ
وَقَالَتْ عَائِشَةُ: «هُوَ عَبْدٌ مَا بَقِيَ عَلَيْهِ شَيْءٌ» وَقَالَ زَيْدُ بْنُ ثَابِتٍ: «مَا بَقِيَ عَلَيْهِ دِرْهَمٌ» وَقَالَ ابْنُ عُمَرَ: «هُوَ عَبْدٌ إِنْ عَاشَ وَإِنْ مَاتَ وَإِنْ جَنَى مَا بَقِيَ عَلَيْهِ شَيْءٌ»
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ
أَنَّ بَرِيرَةَ جَاءَتْ تَسْتَعِينُ عَائِشَةَ أُمَّ المُؤْمِنِينَ رَضِيَ اللَّهُ عَنْهَا: فَقَالَتْ لَهَا: إِنْ أَحَبَّ أَهْلُكِ أَنْ أَصُبَّ لَهُمْ ثَمَنَكِ صَبَّةً وَاحِدَةً، فَأُعْتِقَكِ، فَعَلْتُ، فَذَكَرَتْ بَرِيرَةُ ذَلِكَ لِأَهْلِهَا، فَقَالُوا: لاَ إِلَّا أَنْ يَكُونَ وَلاَؤُكِ لَنَا، قَالَ مَالِكٌ: قَالَ يَحْيَى: فَزَعَمَتْ عَمْرَةُ أَنَّ عَائِشَةَ ذَكَرَتْ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «اشْتَرِيهَا وَأَعْتِقِيهَا، فَإِنَّمَا الوَلاَءُ لِمَنْ أَعْتَقَ»
சமீப விமர்சனங்கள்