தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2586

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 12 பிள்ளைக்கு அன்பளிப்புச் செய்வது.

ஒருவர் தன் பிள்ளைகளில் சிலருக்கு மட்டும் அன்பளிப்புச் செய்தால் அவர்களிடையே நீதி செலுத்தி மற்ற பிள்ளைகளுக்கும் அதே போன்று கொடுக்கும் வரை அது செல்லாது. அது வரை (யாரும்) அதற்கு சாட்சியாக இருக்கவும் கூடாது.

நபி (ஸல்) அவர்கள், அன்பளிப்புச் செய்யும் விஷயத்தில் உங்கள் பிள்ளைகளிடையே நீதியாக நடந்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

தந்தை, தான் செய்த அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாமா? மேலும் தந்தை, தன் பிள்ளையின் செல்வத்திலிருந்து வரம்பு மீறாமல் நியாயமான அளவு உண்பது அனு மதிக்கப்பட்டதா?

நபி (ஸல்) அவர்கள், உமர் (ரலி) அவர்களிடமிருந்து ஓர் ஒட்டகத்தை வாங்கி இப்னு உமர் (ரலி) அவர்களுக்கு (அன்பளிப்பாகக்) கொடுத்து விட்டார்கள். மேலும், இதை நீ விரும்பியவாறு செய்து கொள் என்று கூறினார்கள்.

 நுஃமான் பின் பஷிர் அவர்கள் கூறியதாவது:

என்னை என் தந்தையார் (பஷீர் பின் சஅத் (ரலி) அவர்கள்) அல்லாஹ்வின் தூதரிடம் கொண்டு சென்று, நான் எனது இந்த மகனுக்கு ஓர் அடிமையை அன்பளிப்புச் செய்திருக்கின்றேன் என்று சொன்னார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்கள் பிள்ளைகள் அத்தனை பேருக்கும் இதைப் போன்றே அன்பளிப்புச் செய்துள்ளீரா? என்று கேட்டார்கள். என் தந்தை, இல்லை என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், அப்படியென்றால் அதை (உங்கள் அன்பளிப்பைத்) திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
Book : 50

(புகாரி: 2586)

بَابُ الهِبَةِ لِلْوَلَدِ، وَإِذَا أَعْطَى بَعْضَ وَلَدِهِ شَيْئًا لَمْ يَجُزْ، حَتَّى يَعْدِلَ بَيْنَهُمْ وَيُعْطِيَ الآخَرِينَ مِثْلَهُ، وَلاَ يُشْهَدُ عَلَيْهِ

وَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اعْدِلُوا بَيْنَ أَوْلاَدِكُمْ فِي العَطِيَّةِ» وَهَلْ لِلْوَالِدِ أَنْ يَرْجِعَ فِي عَطِيَّتِهِ وَمَا يَأْكُلُ مِنْ مَالِ وَلَدِهِ بِالْمَعْرُوفِ، وَلاَ يَتَعَدَّى ” وَاشْتَرَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ عُمَرَ بَعِيرًا ثُمَّ أَعْطَاهُ ابْنَ عُمَرَ، وَقَالَ: «اصْنَعْ بِهِ مَا شِئْتَ»

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، وَمُحَمَّدِ بْنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، أَنَّهُمَا حَدَّثَاهُ عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ

أَنَّ أَبَاهُ أَتَى بِهِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنِّي نَحَلْتُ ابْنِي هَذَا غُلاَمًا، فَقَالَ: «أَكُلَّ وَلَدِكَ نَحَلْتَ مِثْلَهُ»، قَالَ: لاَ، قَالَ  «فَارْجِعْهُ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.