தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-6460

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

1. அல்லாஹ்வுடைய பாதையில் (போர்க்களத்தில்) அணி வகுத்து (எதிரிகளை) சந்திக்கும் போது.

2. மழை பொழியும் போது.

3. தொழுகைக்கு இகாமத் சொல்லும் போது

4. கஅபாவைக் காணும் போது போன்ற நான்கு இடங்களில் வானத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. துஆ ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி)

(பைஹகீ-குப்ரா: 6460)

أَخْبَرَنَا أَبُو نَصْرِ بْنُ قَتَادَةَ، أنبأ أَبُو مُحَمَّدٍ عَبْدُ اللهِ بْنُ أَحْمَدَ بْنِ سَعْدٍ الْحَافِظُ، ثنا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ الْبُوشَنْجِيُّ، ثنا الْهَيْثَمُ بْنُ خَارِجَةَ أَبُو أَحْمَدَ، ثنا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنْ عُفَيْرِ بْنِ مَعْدَانَ، ثنا سُلَيْمُ بْنُ عَامِرٍ، عَنْ أَبِي أُمَامَةَ سَمِعَهُ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

تُفْتَحُ أَبْوَابُ السَّمَاءِ، وَيُسْتَجَابُ الدُّعَاءُ فِي أَرْبَعَةِ مَوَاطِنَ: عِنْدَ الْتِقَاءِ الصُّفُوفِ، وَعِنْدَ نُزُولِ الْغَيْثِ، وَعِنْدَ إِقَامَةِ الصَّلَاةِ، وَعِنْدَ رُؤْيَةِ الْكَعْبَةِ


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-6252.
Kubra-Bayhaqi-Shamila-6460.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-5963.




  • இதில் வரும்  عفير بن معدان உஃபைர் பின் மஃதான் என்பவர்  பற்றி இப்னு அபீ ஹாத்திம் அவர்கள் இவர் பலவீனமானவர், இவர் சுலைம் பின் ஆமிர், அபூஉமாமா ஆகியோர் வழியாக மறுக்கப்படவேண்டிய அடிப்படையில்லாத செய்திகளை அறிவிப்பவர் என்று கூறியுள்ளார்கள். பார்க்க : தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.3/119

وقال ابن أبي حاتم : سألت أبي عن عفير بن معدان فقال : ضعيف الحديث ، يكثر الرواية عن سليم بن عامر ، عن أبي أمامة ، عن النبي صلى الله عليه وآله وسلم ما لا أصل له ، لا يشتغل بروايته

تهذيب التهذيب: (3 / 119)

قلت : وقال البخاري في ” تاريخه الأوسط ” : منكر الحديث

تهذيب التهذيب: (3 / 119)

மேலும் பார்க்க : அல்முஃஜமுல் கபீர்-7713 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.