தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2756

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 13 ஒருவர் ஒரு பொருளை வக்ஃபு செய்தால் அதை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் முன்பே கூட அது செல்லும். ஏனெனில், உமர் (ரலி) அவர்கள் வக்ஃபு செய்த போது, அதற்கு (நிர்வாகப்) பொறுப்பேற்பவர் அதிலிருந்து சிறிது உண்பதால் அவர் மீது குற்றமில்லை என்று கூறினார்கள். அதற்கு நான் பொறுப்பேற்றால் என்றோ பிறர் பொறுப்பேற்றால் என்றோ அப்போது குறிப்பிட்டுக் கூறவில்லை.

நபி (ஸல்) அவர்கள் அபூதல்ஹா (ரலி) அவர்களிடம், நீ அதை (உன் தோட்டத்தை) உன் நெருங்கிய உறவினர்களிடையே பங்கிட்டு விடுவதை நான் உசிதமாகக் கருதுகிறேன் என்று கூறினார்கள். உடனே அபூதல்ஹா (ரலி) அவர்கள், அவ்வாறே செய்கிறேன், அல்லாஹ்வின் தூதரே! என்று கூறிவிட்டு, அதைத் தமது உறவினர் களிடையேயும் தம் தந்தையின் உடன் பிறந்தாருடைய மக்களிடையேயும் பங்கிட்டு விட்டார்கள்.

பாடம் : 14 ஒருவர் என் வீடு அல்லாஹ்வுக்காக தர்மமாகும் என்று கூறி, அது ஏழைகளுக்குச் சேர வேண்டிய தர்மமா? அல்லது மற்றவர்களுக்குச் சேர வேண்டிய தர்மமா? என்று விளக்காமல் விட்டுவிட்டாலும் அது செல்லும். அதை அவர் தம் உறவினர்களுக்கோ அல்லது அவர் விரும்பியவர்களுக்கோ தரலாம்.

அபூதல்ஹா (ரலி) அவர்கள், என் செல்வங்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானது பைருஹா(என்னும் தோட்டம்) தான்; அதை நான் அல்லாஹ்வுக்காக தர்மம் செய்து விடுகின்றேன் என்று கூறிய போது (இன்னாருக்கு தர்மம் செய்கிறேன் என்று அவர் விளக்கிக் கூறாத நிலையிலும்) நபி (ஸல்) அவர்கள் அதை அனுமதித்தார்கள். அந்த தர்மம் யாருக்குச் சேர வேண்டும் என்று விளக்காதவரை அது செல்லாது என்று சிலர் கூறினர். ஆனால், முந்திய கருத்தே மிகச் சரியானதாகும்.

பாடம் : 15 என்னுடைய நிலம் அல்லது தோட்டம் என் தாயார் சார்பாக அல்லாஹ்வுக்காக தர்மமாகும் என்று ஒருவர் சொன்னால் அது செல்லும்; அந்த தர்மம் யாருக்குச் சேர வேண்டும் என்று தெளிவுபடுத்தா விட்டாலும் சரி.

 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

ஸஅத் இப்னு உபாதா அவர்கள் வெளியே சென்றிருந்தபோது அவரின் தாயார் இறந்துவிட்டார். அப்போது அவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! என் தாயார் நான் வெளியே சென்றிருந்தபோது மரணமடைந்துவிட்டார். நான் அவர் சார்பாக தர்மம் ஏதும் செய்தால் அது அவருக்குப் பயனளிக்குமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம் (பயனளிக்கும்)’ என்று பதிலளித்தார்கள். இதைக் கேட்ட ஸஅத்(ரலி), ‘நான் என்னுடைய மிக்ராஃப் எனும் தோட்டத்தை என் தாயார் சார்பாக தர்மம் செய்து விட்டேன். அதற்கு தங்களை சாட்சியாக்குகிறேன்’ என்று கூறினார்கள்.
Book : 55

(புகாரி: 2756)

بَابُ إِذَا وَقَفَ شَيْئًا قَبْلَ أَنْ يَدْفَعَهُ إِلَى غَيْرِهِ فَهُوَ جَائِزٌ

لِأَنَّ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَوْقَفَ، وَقَالَ: «لاَ جُنَاحَ عَلَى مَنْ وَلِيَهُ أَنْ يَأْكُلَ، وَلَمْ يَخُصَّ إِنْ وَلِيَهُ عُمَرُ أَوْ غَيْرُهُ» قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَبِي طَلْحَةَ: «أَرَى أَنْ تَجْعَلَهَا فِي الأَقْرَبِينَ» فَقَالَ: أَفْعَلُ، فَقَسَمَهَا فِي أَقَارِبِهِ وَبَنِي عَمِّهِ

بَابُ إِذَا قَالَ: دَارِي صَدَقَةٌ لِلَّهِ، وَلَمْ يُبَيِّنْ لِلْفُقَرَاءِ أَوْ غَيْرِهِمْ، فَهُوَ جَائِزٌ، وَيَضَعُهَا فِي الأَقْرَبِينَ أَوْ حَيْثُ أَرَادَ

قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَبِي طَلْحَةَ حِينَ قَالَ: أَحَبُّ أَمْوَالِي إِلَيَّ بَيْرُحَاءَ، وَإِنَّهَا صَدَقَةٌ لِلَّهِ، فَأَجَازَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَلِكَ وَقَالَ بَعْضُهُمْ: «لاَ يَجُوزُ حَتَّى يُبَيِّنَ لِمَنْ وَالأَوَّلُ أَصَحُّ»

بَابُ إِذَا قَالَ: أَرْضِي أَوْ بُسْتَانِي صَدَقَةٌ لِلَّهِ عَنْ أُمِّي فَهُوَ جَائِزٌ، وَإِنْ لَمْ يُبَيِّنْ لِمَنْ ذَلِكَ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا مَخْلَدُ بْنُ يَزِيدَ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي يَعْلَى، أَنَّهُ سَمِعَ عِكْرِمَةَ، يَقُولُ: أَنْبَأَنَا ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا

أَنَّ سَعْدَ بْنَ عُبَادَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ تُوُفِّيَتْ أُمُّهُ وَهُوَ غَائِبٌ عَنْهَا، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي تُوُفِّيَتْ وَأَنَا غَائِبٌ عَنْهَا، أَيَنْفَعُهَا شَيْءٌ إِنْ تَصَدَّقْتُ بِهِ عَنْهَا؟ قَالَ: «نَعَمْ»، قَالَ: فَإِنِّي أُشْهِدُكَ أَنَّ حَائِطِيَ المِخْرَافَ صَدَقَةٌ عَلَيْهَا





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.