தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-2553

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

(ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது அதனைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரினார்கள். அப்போது தம் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். ( இப்படி மூன்று முறை செய்தார்கள்)

பிறகு, ‘பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டைத் தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதுவும் இல்லையானால் இன் சொல்லைக் கொண்டாவது (காப்பாற்றிக் கொள்ளுங்கள்)’ என்றார்கள்.

அறிவிப்பவர் : அதீ பின் ஹாத்திம் (ரலி)

(அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்)  அவர்கள் கூறியதாவது:

(நபியவர்கள் நரகத்தைப் பற்றி) மூன்று முறை கூறி, மூன்று முறை அதனைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரி மூன்று முறை தம் முகத்தை திருப்பிக்கொண்டார்கள்)

(நஸாயி: 2553)

أَنْبَأَنَا إِسْمَعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، أَنَّ عَمْرَو بْنَ مُرَّةَ، حَدَّثَهُمْ عَنْ خَيْثَمَةَ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ:

ذَكَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّارَ فَأَشَاحَ بِوَجْهِهِ وَتَعَوَّذَ مِنْهَا – ذَكَرَ شُعْبَةُ أَنَّهُ فَعَلَهُ ثَلَاثَ مَرَّاتٍ – ثُمَّ قَالَ: «اتَّقُوا النَّارَ، وَلَوْ بِشِقِّ التَّمْرَةِ، فَإِنْ لَمْ تَجِدُوا، فَبِكَلِمَةٍ طَيِّبَةٍ»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-2553.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-2517.




மேலும் பார்க்க: புகாரி-6023 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.