தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2861

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 49 புனிதப் போரில் (கலந்து கொண்ட) அடுத்தவரின் வாகனப் பிராணியை அடி(த்து இயங்க வை)ப்பது.

 ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் அல்அன்சாரீ(ரலி) அறிவித்தார்.

நான் ஒரு பயணத்தில் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தேன்.. அறிவிப்பாளர் அபூ அகீல்(ரஹ்), ‘அது போருக்கான பயணமா, உம்ராவுக்கான பயணமாக என்று எனக்குத் தெரியாது’ என்று கூறுகிறார்… (திரும்பி வரும் நேரத்தில்) நாங்கள் முன்னேறிச் சென்றபோது நபி(ஸல்) அவர்கள், ‘தன் வீட்டாரிடம் சீக்கிரமாகச் செல்ல விரும்புபவர் சீக்கிரம் செல்லட்டும்’ என்று கூறினார்கள்.

நான் எனக்குச் சொந்தமான – குறை ஏதுமற்ற, கருஞ்சிவப்பு நிறமுள்ள ஒட்டகம் ஒன்றின் மீது அமர்ந்து (சவாரி செய்து) கொண்டிருக்க, நாங்கள் முன்னேறிச் சென்றோம். (மற்ற) மக்கள் என் பின்னால் வந்து கொண்டிருந்தார்கள். நான் அவ்வாறு சென்று கொண்டிருக்கையில், திடீரென என் ஒட்டகம் (களைப்பினால்) நின்றுவிட்டது. நபி(ஸல்) அவர்கள் என்னைப் பார்த்து, ‘ஜாபிரே! காத்திரு’ என்று கூறிவிட்டு, தம் சாட்டையால் அதை அடித்தார்கள்.

உடனே, ஒட்டகம் தன் இடத்திலிருந்து வேகமாக ஓடியது. நபி(ஸல்) அவர்கள், ‘ஒட்டகத்தை நீ விற்பாயா?’ என்று கேட்க, நான், ‘ஆம் (விற்பேன்)’ என்று பதிலளித்தேன். நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது நபி(ஸல்) அவர்கள், தம் தோழர்கள் புடைய சூழ பள்ளிவாசலுக்குள் நுழைந்தார்கள். நான் அவர்களிடம் சென்றேன். ஒட்டகத்தை (கற்கள் பரப்பப்பட்ட) பள்ளிவாசலின் நடைபாதையில் கட்டிவிட்டு, ‘இது தங்களின் ஒட்டகம்’ என்று கூறினேன்.

நபி(ஸல்) அவர்கள் வெளியே வந்து ஒட்டகத்தை (ஆராயும் வகையில்) சுற்றிவரத் தொடங்கினார்கள். (பிறகு) ‘இந்த ஒட்டகம் நம்முடைய ஒட்டகம்’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் (ஐந்து) ஊக்கியாக்கள் தங்கத்தைக் கொடுத்து அனுப்பி வைத்து, ‘இதை ஜாபிரிடம் கொடுங்கள்’ என்று கூறினார்கள். பிறகு, ‘(ஒட்டகத்தின்) விலை முழுவதையும் பெற்றுக் கொண்டாயா?’ என்று (என்னிடம்) கேட்டார்கள். நான், ‘ஆம் (பெற்றுக் கொண்டேன்)’ என்று பதிலளித்தேன். நபி(ஸல்) அவர்கள், ‘விலையும், ஒட்டகமும் உனக்கே உரியவை (இரண்டையும் நீயே வைத்துக் கொள்)’ என்று கூறினார்கள்.
Book : 56

(புகாரி: 2861)

بَابُ مَنْ ضَرَبَ دَابَّةَ غَيْرِهِ فِي الغَزْوِ

حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا أَبُو عَقِيلٍ، حَدَّثَنَا أَبُو المُتَوَكِّلِ النَّاجِيُّ، قَالَ

أَتَيْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيَّ، فَقُلْتُ لَهُ: حَدِّثْنِي بِمَا سَمِعْتَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: سَافَرْتُ مَعَهُ فِي بَعْضِ أَسْفَارِهِ – قَالَ أَبُو عَقِيلٍ: لاَ أَدْرِي غَزْوَةً أَوْ عُمْرَةً – فَلَمَّا أَنْ أَقْبَلْنَا قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَحَبَّ أَنْ يَتَعَجَّلَ إِلَى أَهْلِهِ فَلْيُعَجِّلْ»، قَالَ جَابِرٌ: فَأَقْبَلْنَا وَأَنَا عَلَى جَمَلٍ لِي أَرْمَكَ لَيْسَ فِيهِ شِيَةٌ، وَالنَّاسُ خَلْفِي، فَبَيْنَا أَنَا كَذَلِكَ إِذْ قَامَ عَلَيَّ، فَقَالَ لِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا جَابِرُ اسْتَمْسِكْ»، فَضَرَبَهُ بِسَوْطِهِ ضَرْبَةً، فَوَثَبَ البَعِيرُ مَكَانَهُ، فَقَالَ: «أَتَبِيعُ الجَمَلَ؟»، قُلْتُ: نَعَمْ، فَلَمَّا قَدِمْنَا المَدِينَةَ وَدَخَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المَسْجِدَ فِي طَوَائِفِ أَصْحَابِهِ، فَدَخَلْتُ إِلَيْهِ وَعَقَلْتُ الجَمَلَ فِي نَاحِيَةِ البَلاَطِ، فَقُلْتُ لَهُ: هَذَا جَمَلُكَ، فَخَرَجَ، فَجَعَلَ يُطِيفُ بِالْجَمَلِ وَيَقُولُ: «الجَمَلُ جَمَلُنَا»، فَبَعَثَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوَاقٍ مِنْ ذَهَبٍ، فَقَالَ: «أَعْطُوهَا جَابِرًا» ثُمَّ قَالَ: «اسْتَوْفَيْتَ الثَّمَنَ؟» قُلْتُ: نَعَمْ، قَالَ: «الثَّمَنُ وَالجَمَلُ لَكَ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.