தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-11988

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அனஸ் பின் மாலிக்  (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி  (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த நேரத்தில் அபூ தல்ஹா(ரலி) என் கையைப் பிடித்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதரிடம் அழைத்துச் சென்று, ‘இறைத்தூதர் அவர்களே! அனஸ் புத்திசாலியான சிறுவன். அவன் தங்களுக்கு ஊழியம் செய்யட்டும்’ என்று கூறினார்கள்.

எனவே, நான் நபி(ஸல்) அவர்களுக்குப் பயணத்திலும் ஊரிலிருக்கும் போதும் பணிவிடைகள் செய்து வந்தேன். நான் செய்த எச்செய்கைக்காகவும், ‘இதை ஏன் இப்படிச் செய்தாய்?’ என்றோ, நான் செய்யாத எந்த விஷயத்திற்காகவும், ‘ஏன் இதை நீ இப்படிச் செய்யவில்லை?’ என்றோ என்னிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டதேயில்லை.

(முஸ்னது அஹ்மத்: 11988)

حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ:

لَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْمَدِينَةِ، أَخَذَ أَبُو طَلْحَةَ بِيَدِي، فَانْطَلَقَ بِي إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أَنَسًا غُلَامٌ كَيِّسٌ فَلْيَخْدُمْكَ. قَالَ: ” فَخَدَمْتُهُ فِي السَّفَرِ وَالْحَضَرِ وَاللَّهِ مَا قَالَ لِي لِشَيْءٍ صَنَعْتُهُ: لِمَ صَنَعْتَ هَذَا هَكَذَا؟ وَلَا لِشَيْءٍ لَمْ أَصْنَعْهُ: لِمَ لَمْ تَصْنَعْ هَذَا هَكَذَا؟


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-11988.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-11768.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.