பாடம் : 113 (போரிலிருந்து திரும்பிச் செல்லவோ, போரில் கலந்து கொள்ளாமலிருக்கவோ) ஒருவர் தலைவரிடம் அனுமதி கேட்பது. ஏனெனில், அல்லாஹ் கூறுகிறான்:
அல்லாஹ்வையும் அவனது திருத் தூதரையும் (மனப்பூர்வமாக) நம்பி, ஒரு பொதுப்பணிக்காக இறைத்தூதருடன் இருக்கும் போது அவரிடம் அனுமதி பெறாத வரை (அவரைப் பிரிந்து) செல்லாமலிருப்பவர்களே உண்மையான இறை நம்பிக்கையாளர்கள்.
நபியே! உங்களிடம் அனுமதி கேட்பவர்கள் தாம், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் உண்மையாக ஏற்றுக் கொண்டவர்கள். எனவே,அவர்கள் தமது தேவை எதற்காவது உங்களிடம் அனுமதி கேட்டால் அவர்களில் நீங்கள் விரும்பியவருக்கு அனுமதியளியுங்கள்! மேலும், அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பும் கோருங்கள்! நிச்சயமாக, அல்லாஹ் மிகவும் மன்னிக்கக் கூடியவனாகவும் கிருபை நிறைந்தவனாகவும் இருக்கின்றான். (24:62)
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் புனிதப் போருக்குச் சென்றேன். நான், களைப்படைந்து நடக்க முடியாமல் போய்க்கொண்டிருந்த, நீர் சுமக்கும் ஒட்டகம் ஒன்றின் மீது அமர்ந்து சென்று கொண்டிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னை (வழியில்) வந்தடைந்தார்கள். அப்போது என்னிடம், ‘உன் ஒட்டகத்திற்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள். நான், ‘அது களைப்படைந்துவிட்டது’ என்று பதிலளித்தேன்.
அதைக் கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சற்றுப் பின்தங்கி அதை அதட்டி அதற்காக பிரார்த்தித்தார்கள். உடனே அது தனக்கு முன் சென்று கொண்டிருந்த ஒட்டகங்களை முந்திக் கொண்டு செல்லத் தொடங்கியது. நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ‘உன் ஒட்டகத்தை இப்போது எப்படிக் காண்கிறாய்?’ என்று கேட்டார்கள். நான், ‘நல்ல முறையில் காண்கிறேன். அது தங்களின் பரக்கத்தைப் பெற்றது’ என்று சொன்னேன்.
உடனே அவர்கள், ‘நீ அதை எனக்கு விற்று விடுகிறாயா?’ என்று கேட்டார்கள். நான் (பதில் சொல்ல) வெட்கப்பட்டேன். (ஏனெனில்,) எங்களிடம் அதைத் தவிர நீர் சுமக்கும் ஒட்டகம் வேறெதுவும் இருக்கவில்லை. ஆயினும் நான், ‘சரி (விற்று விடுகிறேன்)’ என்று பதிலளித்தேன்.
நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியாயின் அதை எனக்கு விற்று விடு’ என்று கூற, நான் அதன் மீது சவாரி செய்து மதீனாவைச் சென்றடைய என்னை அனுமதிக்க வேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் அவர்களுக்கு அந்த ஒட்டகத்தை விற்று விட்டேன். நான் அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! நான் புது மாப்பிள்ளை’ என்று சொல்லி ஊருக்கு விரைவாகச் செல்ல அனுமதி கேட்டேன். அவர்கள் எனக்கு அனுமதியளித்தார்கள். எனவே, நான் மற்ற மக்களை விட முன்னதாகச் சென்று மதீனாவை விட முன்னதாகச் சென்று மதீனாவை அடைந்து விட்டேன்.
அப்போது என்னை என் தாய்மாமன் (ஜத்து இப்னு கைஸ்) சந்தித்து ஒட்டகத்தைப் பற்றிக் கேட்டார். நான் அதை விற்றுவிட்டதை அவருக்குத் தெரிவித்தேன். அதற்காக அவர் என்னைக் குறை கூறினார். நான் நபி(ஸல்) அவர்களிடம் மதீனாவுக்கு சீக்கிரமாகச் செல்ல அனுமதி கேட்டபோது அவர்கள் என்னிடம், ‘நீ கன்னிப் பெண்ணை மணந்துகொண்டாயா? வாழ்ந்த அனுபவமுள்ள பெண்ணை மணந்து கொண்டாயா?’ என்று கேட்டிருந்தார்கள்.
அதற்கு நான், ‘வாழ்ந்த அனுபவமுள்ள ஒரு பெண்ணைத் தான் மணமுடித்துக் கொண்டேன்’ என்று பதில் கூறினேன். அதற்கு அவர்கள், ‘கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா? நீ அவளுடனும் அவள் உன்னுடனும் விளையாடலாமே’ என்று கூறினார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! எனக்குச் சிறு வயது சகோதரிகள் பலர் இருக்கும் நிலையில் என் தந்தை (உஹுதுப் போரில்) மரணித்துவிட்டார்கள். அல்லது கொல்லப்பட்டுவிட்டார்கள். எனவே, அவர்களுக்கு ஒழுக்கம் கற்பிக்கவோ, அவர்களைப் பராமரிக்கவோ இயலாத அவர்களைப் போன்றே (அனுபவமற்ற சிறுவயதுப் பெண்) ஒருத்தியை நான் மணந்து கொள்ள விரும்பவில்லை.
எனவே, அவர்களைப் பராமரிப்பதற்காகவும் அவர்களுக்கு ஒழுக்கம் கற்பிப்பதற்காகவும் வாழ்ந்த அனுபவமுள்ள ஒரு பெண்ணையே மணந்தேன்’ என்று பதிலளித்தேன்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்து சேர்ந்தபோது காலையில் ஒட்டகத்துடன் அவர்கள் அவர்களிடம் சென்றேன். எனக்கு அதன் விலையைக் கொடுத்தார்கள். பிறகு அந்த ஒட்டகத்தையும் என்னிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள்.
‘(‘மதீனா வரை சவாரி செய்ய அனுமதிக்க வேண்டும்’ என்பது போன்ற) இத்தகைய நிபந்தனையுடன் விற்பது நம்முடைய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது; இதில் தவறேதும் இருப்பதாக நான் கருதவில்லை’ என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான அறிஞர் முஃகீரா(ரஹ்) கூறினார்.
Book : 56
بَابُ اسْتِئْذَانِ الرَّجُلِ الإِمَامَ
لِقَوْلِهِ: {إِنَّمَا المُؤْمِنُونَ الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَإِذَا كَانُوا مَعَهُ عَلَى أَمْرٍ جَامِعٍ لَمْ يَذْهَبُوا حَتَّى يَسْتَأْذِنُوهُ إِنَّ الَّذِينَ يَسْتَأْذِنُونَكَ} [النور: 62] إِلَى آخِرِ الآيَةِ
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنِ المُغِيرَةِ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ
غَزَوْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: فَتَلاَحَقَ بِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَنَا عَلَى نَاضِحٍ لَنَا، قَدْ أَعْيَا فَلاَ يَكَادُ يَسِيرُ، فَقَالَ لِي: «مَا لِبَعِيرِكَ؟»، قَالَ: قُلْتُ: عَيِيَ، قَالَ: فَتَخَلَّفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَزَجَرَهُ، وَدَعَا لَهُ، فَمَا زَالَ بَيْنَ يَدَيِ الإِبِلِ قُدَّامَهَا يَسِيرُ، فَقَالَ لِي: «كَيْفَ تَرَى بَعِيرَكَ؟»، قَالَ: قُلْتُ: بِخَيْرٍ، قَدْ أَصَابَتْهُ بَرَكَتُكَ، قَالَ: «أَفَتَبِيعُنِيهِ؟» قَالَ: فَاسْتَحْيَيْتُ وَلَمْ يَكُنْ لَنَا نَاضِحٌ غَيْرُهُ، قَالَ: فَقُلْتُ: نَعَمْ، قَالَ: فَبِعْنِيهِ، فَبِعْتُهُ إِيَّاهُ عَلَى أَنَّ لِي فَقَارَ ظَهْرهِ، حَتَّى أَبْلُغَ المَدِينَةَ قَالَ : فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي عَرُوسٌ، فَاسْتَأْذَنْتُهُ، فَأَذِنَ لِي، فَتَقَدَّمْتُ النَّاسَ إِلَى المَدِينَةِ حَتَّى أَتَيْتُ المَدِينَةَ، فَلَقِيَنِي خَالِي، فَسَأَلَنِي عَنِ البَعِيرِ، فَأَخْبَرْتُهُ بِمَا صَنَعْتُ فِيهِ، فَلاَمَنِي قَالَ: وَقَدْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ لِي حِينَ اسْتَأْذَنْتُهُ: «هَلْ تَزَوَّجْتَ بِكْرًا أَمْ ثَيِّبًا؟»، فَقُلْتُ: تَزَوَّجْتُ ثَيِّبًا، فَقَالَ: «هَلَّا تَزَوَّجْتَ بِكْرًا تُلاَعِبُهَا وَتُلاَعِبُكَ»، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، تُوُفِّيَ وَالِدِي أَوِ اسْتُشْهِدَ وَلِي أَخَوَاتٌ صِغَارٌ فَكَرِهْتُ أَنْ أَتَزَوَّجَ مِثْلَهُنَّ، فَلاَ تُؤَدِّبُهُنَّ، وَلاَ تَقُومُ عَلَيْهِنَّ، فَتَزَوَّجْتُ ثَيِّبًا لِتَقُومَ عَلَيْهِنَّ وَتُؤَدِّبَهُنَّ، قَالَ: فَلَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المَدِينَةَ غَدَوْتُ عَلَيْهِ بِالْبَعِيرِ، فَأَعْطَانِي ثَمَنَهُ وَرَدَّهُ عَلَيَّ قَالَ المُغِيرَةُ هَذَا فِي قَضَائِنَا حَسَنٌ لاَ نَرَى بِهِ بَأْسًا
சமீப விமர்சனங்கள்