ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் (லுஹ்ர் தொழுகைக்கு வரும் நேரத்தில்) கடுமையான வெயிலை தாங்கமுடியவில்லை என்று முறையிட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வேறு பதிலை அளிக்காமல், லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் (பொருள் : அல்லாஹ்வின் உதவியில்லாமல் பாவங்களிலிருந்து விலகிச் செல்லவோ (நல்லறங்கள்) புரிய ஆற்றல் பெறவோ மனிதனால் முடியாது) என்பதை அதிகமாக கூறுங்கள்.
இந்த பிரார்த்தனை தொண்ணூற்று ஒன்பது வகையான கஷ்டங்களை நீக்கும். அவற்றில் குறைந்த பட்சம் கவலை என்னும் கஷ்டமாகும்.
(almujam-alawsat-3541: 3541)
حَدَّثَنَا الْحَكَمُ بْنُ مَعْبَدٍ الْخُزَاعِيُّ الْأَصْبَهَانِيُّ قَالَ: نا مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ الْعَدَنِيُّ قَالَ: نا عَبْدُ الْمَجِيدِ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي رَوَّادٍ قَالَ: نَا بَلْهَطُ بْنُ عَبَّادٍ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ:
شَكَوْنَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّمْضَاءَ فَلَمْ يُشْكِنَا وَقَالَ: «أَكْثِرُوا مِنْ قَوْلِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، فَإِنَّهَا تَدْفَعُ تِسْعَةً وَتِسْعِينَ بَابًا مِنَ الضُّرِّ، أَدْنَاهَا الْهَمُّ»
لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، إِلَّا بَلْهَطُ، وَلَا عَنْ بَلْهَطٌ، إِلَّا عَبْدُ الْمَجِيدِ، تَفَرَّدَ بِهِ: مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ، وَلَا يُرْوَى عَنْ جَابِرٍ إِلَّا بِهَذَا الْإِسْنَادِ، وَلَمْ يُسْنِدْ بَلْهَطٌ غَيْرَ هَذَا الْحَدِيثَ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-3541.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-3658.
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் பல்ஹத் பின் அப்பாத் பற்றி உகைலி அவர்களும், தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்களும் இவர் அறியப்படாதவர் என்றும் இவரின் இந்த செய்தி நிராகரிக்கப்படவேண்டிய செய்தி என்றும் கூறியுள்ளனர்.
الخبر منكر
لسان الميزان: (2 / 363)
2 . இந்தக் கருத்தில் ஜாபிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-3541 , அல்முஃஜமுஸ் ஸகீர்-,
மேலும் பார்க்க: ராஹவைஹி-541 .
சமீப விமர்சனங்கள்