தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4707

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 5 உறுதி உங்களிடம் வரும் வரை (நபியே!) நீங்கள் உங்கள் இறைவனை வணங்கி வாருங்கள் எனும் (15:99ஆவது) இறைவசனம். இவ்வசனத்திலுள்ள உறுதி (யகீன்) எனும் சொல் இறப்பைக் குறிக்கின்றது என்று சாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். (23:61ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) சாபிகூன் (ஒருவரையொருவர் முந்திக் கொள்பவர்கள்) என்பதற்கு (அல்லாஹ்விடமிருந்து) அவர்களுக்கு நற்கதி முந்திவிட்டிருக்கிறது. (எனவே, அவர்கள் நன்மையான காரியங்களில் போட்டியிட்டு ஒருவரையொருவர் முந்துகின்றனர்) என்று பொருள். (23:60ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) வஜிலத் குலூபுஹும் எனும் சொற்றொடருக்கு அஞ்சுபவர்கள்என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (23:36ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஹய்ஹாத்த, ஹய்ஹாத்த எனும் சொற்றொடருக்கு வெகுதூரம்,வெகுதூரம் (அசாத்தியம்) என்று பொருள். (23:113ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ஆத்தீன் (கணக்கு வைத்திருப்பவர்கள்) எனும் சொல்,வானவர்களைக் குறிக்கின்றது. (23:74ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ல நாக்கிபூன் எனும் சொல்லுக்குப் புறக்கணித்த வர்கள் என்று பொருள். (23:104ஆவது வசனத்திலுள்ள) முகம் விகாரமானவர்கள் எனும் பொருள் மூலத்திலுள்ள கா-ஹுன் எனும் சொல்லுக்குரியதாகும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அல்லாதோர் கூறுகின்றார்கள்: (23:12ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) சுலாலத் (சத்து) என்பதில் (மனிதனிலிருந்து பிரியும்) விந்தும், (அதிலிருந்து உருவாகும்) குழந்தையும் அடங்கும்.2 (23:25ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஜின்னத் எனும் சொல்லும், அல் ஜுனூன் எனும் சொல்லும் (பைத்தியம் எனும்) ஒரே பொருள் கொண்டவையாகும். (23:41ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஃகுஸாஃ எனும் சொல்லுக்கு வெள்ளத்தின் மேலே செல்லும் நுரை மற்றும் பயனற்ற குப்பை கூளங்கள் என்று பொருள். (23:65ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) யஜ்அரூன் எனும் சொல்லுக்கு மாடு போலக் கத்துவார்கள்என்று பொருள். (23:66ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அலா அஉகாபிக்கும் எனும் சொல்லுக்குப் புறங்காட்டி (வந்த வழியே) சென்றான் என்று பொருள். (23:67ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) சாமிர் (நிலவொளியில் இராக்கதை பேசுபவர்) எனும் சொல் சமர் எனும் வேர்ச் சொல்லிலிருந்து பிரிந்ததாகும். பன்மை: சும்மார். சாமிர் எனும் இச்சொல் இந்த வசனத்தில் பன்மையின் இடத்தில் ஆளப்பட்டுள்ளது. (23:89ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) துஸ்ஹரூன் எனும் சொல்லுக்கு அறிவை இழந்து விட்டிருக்கின்றீர்கள் என்று பொருள். இச்சொல் சிஹ்ர் (சூனியம்) எனும் மூலச் சொல்லிலிருந்து தோன்றியதாகும். ள24ன அந்நூர் அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…) (24:43ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) மின் கிலா-ஹி (அதற்கிடையிலிருந்து) என்பதற்கு அடுக்கடுக்கான மேகங்களுக்கிடையேயிருந்து என்று கருத்து. (இதே வசனத்தின் மூலத்திலுள்ள) சனா பர்கிஹி எனும் சொல்லுக்கு (மின்) ஒளி என்று பொருள். (24:49ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) முஃத்இனீன் எனும் சொல்லுக்குப் பணிந்தவர்களாக என்று பொருள். (24:61ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அஷ்த்தாத் எனும் சொல்லும் ஷத்தா, ஷதாத், ஷத்து எனும் சொற்களும் (தனித் தனியானவை எனும்) ஒரே பொருள் கொண்டவையாகும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (24:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) சூரத்துன் அன்ஸல்னாஹா எனும் சொற்றொடருக்கு நாமே இதனை (இறக்கி)த் தெளிவுபடுத்தினோம் என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அல்லாதோர் கூறுகின்றார்கள்: பல அத்தியாயங்கள் ஒன்று சேர்க்கப்பட்டிருப்பதனால்தான் குர்ஆனுக்கு குர்ஆன் (ஒன்று சேர்க்கப்பட்டது) என்று பெயர் சூட்டப்பட்டது. அத்தியாயத்திற்கு சூரா (பிரிக்கப்பட்டது) என்று பெயரிடப்படக் காரணம், ஓர் அத்தியாயத்திலிருந்து மற்றோர் அத்தியாயம் தனியாகப் பிரிக்கப்பட்டிருப்பதேயாகும். (தனித் தனியாகப் பிரிக்கப்பட்ட அத்தியாயங்களில்) ஒன்றை ஒன்றோடு சேர்த்த போது குர்ஆனுக்கு அல்குர்ஆன் (ஒன்று சேர்க்கப்பட்டது) என்று பெயர் வழங்கப்பட்டது. சஅத் பின் இயாள் அஸ்ஸுமாலீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:2 (24:35ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) மிஷ்காத் எனும் சொல்லுக்கு அபிசீனிய மொழியில் மாடம்என்று பொருள். (75:17ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) வ குர்ஆனஹு எனும் சொல்லுக்கு அதில் ஒன்றை மற்றொன்றுடன் சேர்ப்பது என்று பொருள். (75:18ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஃபஇதா கரஃனாஹுஎனும் சொற்றொடருக்கு, அதனை நாம் ஒருங்கிணைத்து ஒன்று சேர்த்தால் என்று பொருள். ஃபத்தபிஉ குர்ஆனஹு எனும் வாக்கியத்திற்கு அதில் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளதன்படி செயலாற்று; (அதாவது) அல்லாஹ் உனக்கிட்டுள்ள கட்டளைப்படி செயலாற்று; அவன் தடை விதித்துள்ளனவற்றைவிட்டும் விலகியிரு! என்று பொருள். அவனது கவிதையில் குர்ஆன் இல்லை என்றால், ஒருங்கிணைப்பு இல்லை என்று பொருள். சத்தியத்தையும் அசத்தியத்தையும் பாகுபடுத்திக்காட்டுவதனால்தான் (குர்ஆனுக்கு) ஃபுர்கான் (பாகுபடுத்தக்கூடியது) என்று பெயர் வந்தது. ஒரு பெண், தன் வயிற்றில் சிசுவை ஒன்று சேர்க்கவில்லை என்பதைக் குறிக்க மா கரஅத் எனும் சொல் ஆளப்படுவதுண்டு. (24:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ஃபரள்னாஹா என்னும் சொல் மற்றோர் ஓத-ல் ஃபர்ரள்னாஹாஎன்று ஓதப்பட்டுள்ளது. அந்த) ஃபர்ரள்னாஹா எனும் சொல்லுக்கு இதில் நாம் பல்வேறு விதமான விதிகளை அருளியுள்ளோம் என்று பொருள். (அதே சொல்லை) ஃபரள்னாஹா என்று ஓதியவர்கள்,உங்களுக்கும் விதியாக்கினோம்; உங்களுக்குப் பின்னால் வருபவர்களுக்கும் விதியாக்கினோம் என்று (பொருள்) கூறுகின்றார்கள். முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: (24:31ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அவித் திஃப்-ல்லஃதீன லம் யழ்ஹரூ அலா அவ்ராத்தின்னிஸாஎனும் சொற்றொடர், வயது சிறியதாயிருப்பதனால் பெண்களின் மறைவான உறுப்புகள் குறித்து அறிந்திராத சிறுவர்களைக் குறிக்கிறது. ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: (இதே வசனத்தின் மூலத்திலுள்ள) ஃகைரி உ-ல் இர்பத் எனும் சொல், பெண் தேவையற்ற (வயோதிகர்கள்,பாலுணர்வற்றவர்கள் போன்ற) ஆண்களைக் குறிக்கிறது. முஜாஹித் (ரஹ்) அவர்கள், தம் வயிற்றைக் குறித்த எண்ணத்தைத் தவிர (உணவைத் தவிர) வேறு எண்ணம் வராத (இவனால் பெண்களுக்குப் பா-யல் தொல்லை ஏதும் நேருமோ என்று) பெண்கள் விஷயத்தில் அஞ்சப்படாத ஆணைக் குறிக்கும் எனக் கூறுகின்றார்கள். தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: பெண் வேட்கையற்ற வெகுளியே ஃகைரு உ-ல் இர்பத் ஆவான். அர்ரஜ்ல் எனும் சொல்லுக்குக் காலாட் படை என்று பொருள். இதன் ஒருமை அர்ராஜில் என்பதாகும். இது ஸாஹிப் (நண்பன்), ஸஹ்ப் (நண்பர்கள்) என்பனவற்றையும், தாஜிர் (வியாபாரி), தஜ்ர் (வியாபாரிகள்) என்பனவற்றையும் போன்றதாகும். (17:68ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஹாஸிப் எனும் சொல்லுக்குக் கடுமையாக வீசும் புயல் காற்றுஎன்று பொருள். காற்று வாரியிறைக்கும் பொடிக் கற்களுக்கும் ஹாஸிப் என்பர். இதிலிருந்து வந்தது தான் ஹஸபு ஜஹன்னம் (நரகத்தின் எரிபொருள்) என்ற சொல்லும். நரகத்தில் வீசப்படும் பொருள்களையே இது குறிக்கிறது. பூமிக்குள் செல்வது ஹஸப எனப்படும். ஹஸப் எனும் சொல்,ஹஸ்பாஉ (பொடிக் கற்கள்) எனும் சொல்லிலிருந்து மருவியதாகும். (17:69ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) தாரத் எனும் சொல்லுக்கு மீண்டும் ஒரு முறை என்று பொருள். தியரத், தாராத் ஆகியன இதன் பன்மைகளாகும். (17:62ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ல அஹ்த்தனிக்கன்ன எனும் சொல்லுக்கு அவர்களை நான் (வழிகெடுத்து) வேரறுத்து விடுவேன் என்பது பொருளாகும். இஹ்தனக்க என்பதற்கு, ஒருவர் மற்றவரிடமிருந்து எல்லா அறிவையும் தமதாக்கிக் கொண்டார் என்று (மொழி வழக்கில்) பொருள்கொள்ளப்படும். (17:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) தாயிரஹு எனும் சொல்லுக்கு அவனுக்குரிய பங்கு என்று பொருள். (இச்சொல்லுக்கு செயல்கள் பற்றிய குறிப்பு, செயல், சகுனம் ஆகிய பொருள்களும் உண்டு.) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: குர்ஆனில் எங்கெல்லாம் சுல்த்தான் எனும் சொல் ஆளப்பட்டுள்ளதோ அங்கெல் லாம் ஆதாரம் (அல்லது அதிகாரம்) என்றே பொருள்கொள்ளப்படும்.3 (17:111ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) வ-ய்யும் மினஃத்துல்- என்பதன் கருத்தாவது: (இடர் ஏற்பட்டு,அதிலிருந்து தன்னைக் காக்க) அவன் யாரையும் நண்பராக்கிக் கொள்வதில்லை. (காரணம், இறைவனுக்கு இடர் ஏற்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை.) பாடம் : 3 அல்லாஹ் தூயவன். அவன் தன்னுடைய அடியாரை (க் கஅபாவாகிய) புனிதப் பள்ளி வாச-லிருந்து (வெகு தூரத்தில் இருக்கும் பைத்துல் மக்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான் எனும் (17:1ஆவது) வசனத் தொடர்.

 அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

‘(இறைவா!) நான் உன்னிடம் கஞ்சத் தனத்திலிருந்தும், சோம்பலிலிருந்தும், தள்ளாமையிலிருந்தும், மண்ணறையின் (கப்ரின்) வேதனையிலிருந்தும், தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்தும், வாழ்வு மற்றும் மரண வேளையின் சோதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பிரார்த்தனை புரிந்து வந்தார்கள்.

Book : 65

(புகாரி: 4707)

بَابُ قَوْلِهِ: {وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ اليَقِينُ} [الحجر: 99]

قَالَ سَالِمٌ: ” اليَقِينُ: المَوْتُ

سُورَةُ النَّحْلِ

{رُوحُ القُدُسِ} [النحل: 102]: «جِبْرِيلُ»، {نَزَلَ بِهِ الرُّوحُ الأَمِينُ} [الشعراء: 193]، {فِي ضَيْقٍ} [النحل: 127]: ” يُقَالُ: أَمْرٌ ضَيْقٌ وَضَيِّقٌ، مِثْلُ هَيْنٍ وَهَيِّنٍ، وَلَيْنٍ وَلَيِّنٍ، وَمَيْتٍ وَمَيِّتٍ ” قَالَ ابْنُ عَبَّاسٍ: (تَتَفَيَّأُ ظِلاَلُهُ): «تَتَهَيَّأُ»، {سُبُلَ رَبِّكِ ذُلُلًا} [النحل: 69]: «لاَ يَتَوَعَّرُ عَلَيْهَا مَكَانٌ سَلَكَتْهُ» وَقَالَ ابْنُ عَبَّاسٍ: {فِي تَقَلُّبِهِمْ} [النحل: 46]: «اخْتِلاَفِهِمْ» وَقَالَ مُجَاهِدٌ: {تَمِيدُ} [النحل: 15]: «تَكَفَّأُ»، {مُفْرَطُونَ} [النحل: 62]: «مَنْسِيُّونَ» وَقَالَ غَيْرُهُ: {فَإِذَا قَرَأْتَ القُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ} [النحل: 98]: «هَذَا مُقَدَّمٌ وَمُؤَخَّرٌ، وَذَلِكَ أَنَّ الِاسْتِعَاذَةَ قَبْلَ القِرَاءَةِ، وَمَعْنَاهَا الِاعْتِصَامُ بِاللَّهِ» وَقَالَ ابْنُ عَبَّاسٍ: {تُسِيمُونَ} [النحل: 10]: «تَرْعَوْنَ شَاكِلَتِهِ نَاحِيَتِهِ»، {قَصْدُ السَّبِيلِ} [النحل: 9]: «البَيَانُ الدِّفْءُ مَا اسْتَدْفَأْتَ»، {تُرِيحُونَ} [النحل: 6]: «بِالعَشِيِّ»، وَ {تَسْرَحُونَ} [النحل: 6]: «بِالْغَدَاةِ»، {بِشِقِّ} [النحل: 7]: «يَعْنِي المَشَقَّةَ»، {عَلَى تَخَوُّفٍ} [النحل: 47]: «تَنَقُّصٍ»، {الأَنْعَامِ لَعِبْرَةً} [النحل: 66]: ” وَهِيَ تُؤَنَّثُ وَتُذَكَّرُ، وَكَذَلِكَ: النَّعَمُ الأَنْعَامُ جَمَاعَةُ النَّعَمِ “، أَكْنَانٌ: «وَاحِدُهَا كِنٌّ مِثْلُ حِمْلٍ وَأَحْمَالٍ»، {سَرَابِيلَ} [النحل: 81]: «قُمُصٌ». {تَقِيكُمُ الحَرَّ} [النحل: 81] «وَأَمَّا» {سَرَابِيلَ تَقِيكُمْ بَأْسَكُمْ} [النحل: 81]: «فَإِنَّهَا الدُّرُوعُ»، {دَخَلًا بَيْنَكُمْ} [النحل: 92]: «كُلُّ شَيْءٍ لَمْ يَصِحَّ فَهُوَ دَخَلٌ» قَالَ ابْنُ عَبَّاسٍ: {حَفَدَةً} [النحل: 72]: «مَنْ وَلَدَ الرَّجُلُ، السَّكَرُ مَا حُرِّمَ مِنْ ثَمَرَتِهَا، وَالرِّزْقُ الحَسَنُ مَا أَحَلَّ اللَّهُ» وَقَالَ ابْنُ عُيَيْنَةَ، «عَنْ صَدَقَةَ»، {أَنْكَاثًا} [النحل: 92]: «هِيَ خَرْقَاءُ، كَانَتْ إِذَا أَبْرَمَتْ غَزْلَهَا نَقَضَتْهُ» وَقَالَ ابْنُ مَسْعُودٍ: «الأُمَّةُ مُعَلِّمُ الخَيْرِ، وَالقَانِتُ المُطِيعُ»

بَابُ قَوْلِهِ: {وَمِنْكُمْ مَنْ يُرَدُّ إِلَى أَرْذَلِ العُمُرِ} [النحل: 70]

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا هَارُونُ بْنُ مُوسَى أَبُو عَبْدِ اللَّهِ الأَعْوَرُ، عَنْ شُعَيْبٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو: «أَعُوذُ بِكَ مِنَ البُخْلِ وَالكَسَلِ، وَأَرْذَلِ العُمُرِ، وَعَذَابِ القَبْرِ، وَفِتْنَةِ الدَّجَّالِ، وَفِتْنَةِ المَحْيَا وَالمَمَاتِ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.