தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4783

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 3 அவர்களில் சிலர் (தாம் வீரமரணம் அடையவேண்டும் என்ற) தம் நோக்கத்தை அடைந்து விட்டார்கள். இன்னும் அவர்களில் சிலர் (தமக்குரிய வாய்ப்பை) எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். தம் வாக்குறுதியை ஒரு போதும் அவர்கள் மாற்றிக் கொள்ளவில்லை (எனும் 33:23ஆவது வசனத் தொடர்). (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) நஹ்பஹு எனும் சொல்லுக்குத் தம் வாக்குறுதி என்று பொருள். (இதற்கு இலட்சியம், நோக்கம், நேர்ச்சை ஆகிய பொருள்களும் உண்டு.) (33:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அக்தாரிஹா எனும் சொல்லுக்கு அதன் பல பாகங்கள் என்று பொருள். அல்ஃபித் னத்த லஆத்தவ்ஹா எனும் சொற்றொடருக்கு குழப்பத்தைத் தந்திருப்பார்கள் என்று பொருள்.

 அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்

‘இறைநம்பிக்கையாளர்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்விடம் தாம் அளித்த வாக்குறுதியில் உண்மையாக நடந்துகொண்டார்கள்’ என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 33:23 வது) வசனம், அனஸ் இப்னு நள்ர்(ரலி) விஷயத்தில் அருளப்பெற்றதென்றே நாங்கள் கருதுகிறோம்.

Book : 65

(புகாரி: 4783)

بَابُ {فَمِنْهُمْ مَنْ قَضَى نَحْبَهُ وَمِنْهُمْ مَنْ يَنْتَظِرُ وَمَا بَدَّلُوا تَبْدِيلًا} [الأحزاب: 23]

نَحْبَهُ: عَهْدَهُ، {أَقْطَارِهَا} [الأحزاب: 14]: جَوَانِبُهَا، {الفِتْنَةَ لَآتَوْهَا} [الأحزاب: 14]: لَأَعْطَوْهَا

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ ثُمَامَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

نُرَى هَذِهِ الآيَةَ نَزَلَتْ فِي أَنَسِ بْنِ النَّضْرِ: {مِنَ المُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا اللَّهَ عَلَيْهِ} [الأحزاب: 23]





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.