தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5807

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 16

(தலையையும், முகத்தின் பெரும் பகுதியையும் மறைக்கும்) முக்காடு அணிதல்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள் (நோய்வாய்ப் பட்டிருந்தபோது வீட்டிலிருந்து பள்ளிவாசலுக்குப்) புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் மீது ஒரு கறுப்புக் கட்டு (தலையில்) இருந்தது.26

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள் தமது தலையில் ஒரு சால்வையின் ஓரத்தைக் கட்டியிருந்தார்கள்.27

 ஆயிஷா (ரலி) அறிவித்தார்:

(மக்காவிலிருந்த) முஸ்லிம்களில் சிலர் அபிசீனியாவுக்கு நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றார்கள். (என் தந்தை) அபூ பக்ர் (ரலி) (மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செய்ய ஆயத்தமானார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘சற்று பொறுங்கள். ஏனெனில், எனக்கு (இறைவனிடமிருந்து) அனுமதி வழங்கப்படுவதை எதிர்பார்க்கிறேன்’ என்று கூறினார்கள்.

அதற்கு அபூ பக்ர் (ரலி), ‘என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அனுமதியை(த் தான்) எதிர்பார்க்கிறீர்களா?’ என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள் ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள். எனவே, அபூ பக்ர் (ரலி) நபி(ஸல்) அவர்களுடன் சேர்ந்து ஹிஜ்ரத் செய்ய வேண்டுமென்பதற்காகத் தம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டார்கள். மேலும், (இந்தப் பயணத்திற்காகவே) தம்மிடம் இருந்த இரண்டு வாகன (ஒட்டக)ங்களுக்கு நான்கு மாதம் கருவேலந் தழையைத் தீனியாகப் போட்டு (வளர்த்து) வந்தார்கள்.

(தொடர்ந்து) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நாங்கள் ஒருமுறை நண்பகல் நேரத்தின் மத்தியில் எங்கள் வீட்டில் அமர்ந்து கொண்டிருந்தபோது அபூ பக்ர் (ரலி) அவர்களிடம், ‘இதோ! இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தலையில் முக்காடிட்டபடி நம்மை நோக்கி – நம்மிடம் வருகை தந்திராத நேரத்தில் – வந்து கொண்டிருக்கிறார்கள்’ என்று ஒருவர் கூறினார். அப்போது அபூ பக்ர் (ரலி), ‘(இறைத்தூதர் அவர்களே!) தங்களுக்கு என் தந்தையும் தாயும் அர்ப்பணமாகட்டும்! அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களை ஏதோ ஒரு (முக்கியமான) விஷயம் தான் இந்த நேரத்தில் இங்கே வரச் செய்திருக்க வேண்டும்’ என்று கூறினார்கள். அதற்குள் நபி (ஸல்) அவர்கள் வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டார்கள்.

அபூ பக்ர் (ரலி) அவர்கள், நபி(ஸல்) அவர்களுக்கு அனுமதி வழங்க அவர்களும் உள்ளே வந்தார்கள். உள்ளே நுழையும்போது நபி (ஸல்) அவர்கள் அபூ பக்ர் (ரலி) அவர்களிடம், ‘உங்களிடம் இருப்பவர்களை வெளியே அனுப்புங்கள்’ என்று சொல்ல, அபூ பக்ர் (ரலி), ‘இங்கிருப்பவர்கள் உங்கள் (துணைவியாருடைய) குடும்பத்தினர் தாம். என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும், இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள், ‘எனக்கு (ஹிஜ்ரத்) புறப்பட அனுமதியளிக்கப்பட்டுவிட்டது’ என்று கூறினார்கள். அபூ பக்ர் (ரலி), ‘அப்படியென்றால் தங்களுடன் நானும் வர விரும்புகிறேன். என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்; இறைத்தூதர் அவர்களே!’ என்று சொல்லி, நபி (ஸல்) அவர்கள், ‘சரி’ என்று கூறினார்கள். உடனே அபூ பக்ர் (ரலி), ‘என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். இந்த என் இரண்டு வாகன (ஒட்டக)ங்களில் ஒன்றைத் தாங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘விலைக்கு வாங்கிக் கொள்கிறேன்’ என்று கூறினார்கள்.

ஆயிஷா (ரலி) கூறினார்:

அவர்கள் இருவருக்காகவும் வேண்டிப் பயண ஏற்பாடுகளைத் துரிதமாகச் செய்து முடித்தோம். இருவருக்கும் ஒரு தோல் பையில் பயண உணவை வைத்தோம். (என் சகோதரி) அஸ்மா பின்த் அபீ பக்ர் தன் இடுப்புச் கச்சிலிருந்து ஒரு துண்டைக் கிழித்து அந்தத் தோல் பையின் வாயில் வைத்துக் காட்டினார். இதனால் தான் ‘இரண்டு கச்சுடையாள்’ (‘தாத்துந் நிதாக்கைன்’) என்று அவர் பெயர் சூட்டப்பட்டார்.

பிறகு நபி (ஸல்) அவர்களும் அபூ பக்ர் (ரலி) அவர்களும் ‘ஸவ்ர்’ எனும் மலையிலுள்ள ஒரு குகையை அடைந்தார்கள். அங்கு நபி (ஸல்) அவர்கள் மூன்று இரவுகள் தங்கினார்கள். அவர்களுடன் (என் சகோதரர்) அப்துல்லாஹ் இப்னு அபீ பக்ரும் இரவில் தங்கியிருப்பார். அப்துல்லாஹ் சமயோசித அறிவு படைத்த, புத்திக் கூர்மையுள்ள இளைஞராக இருந்தார். அவர் அவ்விருவரிடமிருந்தும் (வைகறைக்கு முந்திய) ‘ஸஹ்ர்’ நேரத்தில் (விடை பெற்றுப்) புறப்பட்டு விடுவார். இரவு (மக்காவில்) தங்கியிருந்த வரைப் போன்று குறைஷிகளுடன் காலையில் இருப்பார். அவர்கள் இருவருக்கெதிரான (குறைஷியரின்) சூழ்ச்சிகள் எதுவாயினும் அதைக் கேட்டு நினைவில் இருத்திக்கொண்டு இருள் கலக்கும் நேரத்தில் அவர்களிடம் அதைக்கொண்டு செல்வார்.

அவர்கள் இருவருக்காகவும் பாலை அன்பளிப்பாகக் கறந்து கொள்ள இரவல் கொடுக்கப்பட்ட ஆடொன்றை அபூ பக்ர் (ரலி) அவர்களின் (முன்னாள்) அடிமையான ஆமிர் இப்னு ஃபுஹைரா அவர்கள் மேய்த்து வந்தார்கள். அவர் இரவின் சிறிது நேரம் கழிந்தவுடன் அதனை அவர்கள் இருவரிடமும் ஓட்டி வருவார். அந்தப் பாலிலேயே இருவரும் இரவைக் கழிப்பார்கள். அந்த ஆட்டை ஆமிர் இப்னு ஃபுஹைரா இரவின் இருள் இருக்கும் போதே விரட்டிச் சென்றுவிடுவார். இதை (அவ்விருவரும் அக்குகையில் தங்கியிருந்த) மூன்று இரவுகளில் ஒவ்வோர் இரவிலும் அவர் செய்து வந்தார். 28

Book : 77

(புகாரி: 5807)

بَابُ التَّقَنُّعِ

وَقَالَ ابْنُ عَبَّاسٍ: «خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ عِصَابَةٌ دَسْمَاءُ» وَقَالَ أَنَسٌ: «عَصَبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رَأْسِهِ حَاشِيَةَ بُرْدٍ»

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ

هَاجَرَ نَاسٌ إِلَى الحَبَشَةِ مِنَ المُسْلِمِينَ، وَتَجَهَّزَ أَبُو بَكْرٍ مُهَاجِرًا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَى رِسْلِكَ، فَإِنِّي أَرْجُو أَنْ يُؤْذَنَ لِي» فَقَالَ أَبُو بَكْرٍ: أَوَتَرْجُوهُ بِأَبِي أَنْتَ؟ قَالَ: «نَعَمْ» فَحَبَسَ أَبُو بَكْرٍ نَفْسَهُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِصُحْبَتِهِ، وَعَلَفَ رَاحِلَتَيْنِ كَانَتَا عِنْدَهُ وَرَقَ السَّمُرِ أَرْبَعَةَ أَشْهُرٍ.

قَالَ عُرْوَةُ: قَالَتْ عَائِشَةُ: فَبَيْنَا نَحْنُ يَوْمًا جُلُوسٌ فِي بَيْتِنَا فِي نَحْرِ الظَّهِيرَةِ، فَقَالَ قَائِلٌ لِأَبِي بَكْرٍ: هَذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُقْبِلًا مُتَقَنِّعًا، فِي سَاعَةٍ لَمْ يَكُنْ يَأْتِينَا فِيهَا، قَالَ أَبُو بَكْرٍ: فِدًا لَكَ أَبِي وَأُمِّي، وَاللَّهِ إِنْ جَاءَ بِهِ فِي هَذِهِ السَّاعَةِ إِلَّا لِأَمْرٍ، فَجَاءَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاسْتَأْذَنَ فَأَذِنَ لَهُ فَدَخَلَ، فَقَالَ حِينَ دَخَلَ لِأَبِي بَكْرٍ: «أَخْرِجْ مَنْ عِنْدَكَ» قَالَ: إِنَّمَا هُمْ أَهْلُكَ بِأَبِي أَنْتَ يَا رَسُولَ اللَّهِ. قَالَ: «فَإِنِّي قَدْ أُذِنَ لِي فِي الخُرُوجِ» قَالَ: فَالصُّحْبَةُ بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «نَعَمْ» قَالَ: فَخُذْ بِأَبِي أَنْتَ يَا رَسُولَ اللَّهِ إِحْدَى رَاحِلَتَيَّ هَاتَيْنِ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بِالثَّمَنِ»

قَالَتْ: فَجَهَّزْنَاهُمَا أَحَثَّ الجِهَازِ، وَضَعْنَا لَهُمَا سُفْرَةً فِي جِرَابٍ، فَقَطَعَتْ أَسْمَاءُ بِنْتُ أَبِي بَكْرٍ قِطْعَةً مِنْ نِطَاقِهَا، فَأَوْكَأَتْ بِهِ الجِرَابَ، وَلِذَلِكَ كَانَتْ تُسَمَّى ذَاتَ النِّطَاقِ. ثُمَّ لَحِقَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو بَكْرٍ بِغَارٍ فِي جَبَلٍ يُقَالُ لَهُ ثَوْرٌ، فَمَكُثَ فِيهِ ثَلاَثَ لَيَالٍ، يَبِيتُ عِنْدَهُمَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ، وَهُوَ غُلاَمٌ شَابٌّ لَقِنٌ ثَقِفٌ، فَيَرْحَلُ مِنْ عِنْدِهِمَا سَحَرًا، فَيُصْبِحُ مَعَ قُرَيْشٍ بِمَكَّةَ كَبَائِتٍ، فَلاَ يَسْمَعُ أَمْرًا يُكَادَانِ بِهِ إِلَّا وَعَاهُ، حَتَّى يَأْتِيَهُمَا بِخَبَرِ ذَلِكَ حِينَ  يَخْتَلِطُ الظَّلاَمُ، وَيَرْعَى عَلَيْهِمَا عَامِرُ بْنُ فُهَيْرَةَ مَوْلَى أَبِي بَكْرٍ مِنْحَةً مِنْ غَنَمٍ، فَيُرِيحُهَا عَلَيْهِمَا حِينَ تَذْهَبُ سَاعَةٌ مِنَ العِشَاءِ، فَيَبِيتَانِ فِي رِسْلِهِمَا حَتَّى يَنْعِقَ بِهَا عَامِرُ بْنُ فُهَيْرَةَ بِغَلَسٍ، يَفْعَلُ ذَلِكَ كُلَّ لَيْلَةٍ مِنْ تِلْكَ اللَّيَالِي الثَّلاَثِ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.