எனக்கு மிக மிக அதிகமாக உதிரப்போக்கு ஏற்படுகின்ற காரணத்தால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக்கோரி தெரிவிக்க வந்தேன். அவர்களை என்னுடைய சகோதரி ஜைனப் பின்த் ஜஹ்ஷ் வீட்டில் (இருக்க) கண்டேன். அல்லாஹ்வின் தூதரே! நான் மிக அதிகமான உதிரப்போக்குள்ள ஒரு பெண். அது என்னை தொழுவதை விட்டும் நோன்பு நோற்பதை விட்டும் தடுத்து விட்டது. அது தொடர்பாக நீங்கள் என்ன (தீர்ப்பு வழங்க) நினைக்கிறீர்கள்? என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் பஞ்சு ஒன்று (வைத்துக் கொள்ளும்படி) தெரிவிக்கின்றேன். நிச்சயமாக அது இரத்தத்தை உறிஞ்சி (போக்கி) விடும் என்று சொன்னார்கள். அதற்கு நான் இரத்தம் பஞ்சையும் மிஞ்சியதாகும் என்றேன். அதற்கு அவர்கள் ஒரு துணியை வைத்துக் கொள் என்று சொன்னார்கள். நான் அதையும் மிகைக்கக் கூடியது என்றேன். எனக்கு இரத்தம் கொட்டிக் கொண்டிருக்கின்றது என்றேன். நான் உனக்கு இரண்டு காரியங்களை கட்டளையிடுகின்றேன். அவ்விருகாரியங்களில் நீ எதைச் செய்தாலும் ஒன்று இன்னொன்றுக்கு பரிகாரமாக அமைந்துவிடும். அவ்விரண்டில் நீ (எதை) பயன்படுத்த முடியும் என்பதை நீதான் நன்கு அறிந்தவள் என்று சொன்னார்கள். (மேலும்) இது ஷைத்தானின் தாக்குதல்களில் இது ஒரு (வகையான) தாக்குதலாகும். நீ ஆறு நாட்கள் அல்லது ஏழு நாட்கள் அவனுடைய ஞானத்தில் உள்ள கூற்று பிரகாரம் நீ மாதவிடாய்க் காரி(யாக தீர்மானித்துக் கொண்டு) குளித்துவிடு! நீ நன்கு துப்புரவாகி விட்டாய் என்று கருதியதும் முப்பத்தி மூன்று அல்லது முப்பத்தி நான்கு இரவு பகல்களில் தொழுதுகொள். (நோன்பு கடமையெனில்) நோன்பு நோற்றுக்கொள். இது உனக்கு போதுமானதாகும்.
ஒவ்வொரு மாதமும் மற்ற பெண்கள் மாதவிடாய் காலத்தில் துப்புரவாகுவது போல் நீயும் துப்புரவாகிக் கொள் (இது ஒரு காரியமாகும். இன்னொரு காரியம் என்னவெனில்) நீ முடிந்தால் ழுஹரை பிற்படுத்தி அஸரை முற்படுத்தி (இரு தொழுகைகளுக்காகவும்) நீ குளித்து லுஹர், அஸர் ஆகிய இரு தொழுகைகளையும் சேர்த்து (தொழுது) விடுக! மக்ரிபை பிற்படுத்தி இஷாவை முற்படுத்தி (இவ்விரு தொழுகைகளுக்காகவும்) நீ குளித்து, இவ்விரு தொழுகைகளையும் சேர்த்து தொழுதுவிடு. பஜ்ர் தொழுகையின் போது குளித்து தொழுதுவிடு. இதற்கு (ஒவ்வொரு நாளும் குளித்து சேர்த்து தொழுவதற்கு) நீ சக்தி பெற்றிருந்தால் நோன்பும் நோற்றுக்கொள். இவ்விரண்டு காரியங்களில் இதுவே எனக்கு பிடித்தமான காரியமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இப்னு அகீல் வழியாக அம்ர் பின் சாபித் இந்த ஹதீஸை அறிவிக்கும் போது இவ்விரு காரியங்களில் இது எனக்கு பிடித்தமானதாகும் என்று ஹம்னா பின்த் ஜஹ்ஷ் தெரிவிப்பதாகவே அறிவிக்கின்றார். இந்த சொல்லை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கூற்றாக்காமல் ஹம்னாவின் கூற்றாக வேகூறுகின்றார்.
அம்ர் பின் சாபித்ராபிளி ஆவார் என யஹ்யா பின் முயீன் கூறியதாக இமாம் அபூதாவூத் தெரிவிக்கின்றார்.
இப்னு அகீல் அறிவிக்கும் ஹதீஸில் ஏதோ கோளாறு உள்ளதாக என் மனதில் படுகின்றது என்று அஹ்மத் பின் ஹன்பல் கூறியதாக நான் செவியுற்றேன் என்றும் இமாம் அபூதாவூத் கூறுகின்றார்கள்.
குளிப்பு : இந்த ஹதீஸ் திர்மிதி, இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இடம் பெறுகின்றது.
ஒவ்வொரு தொழுகைக்கும் குளிக்கவேண்டும் என்ற அறிவிப்புகள்.
(அபூதாவூத்: 287)حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَغَيْرُهُ قَالَا: حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ طَلْحَةَ، عَنْ عَمِّهِ عِمْرَانَ بْنِ طَلْحَةَ، عَنْ أُمِّهِ حَمْنَةَ بِنْتِ جَحْشٍ قَالَتْ
كُنْتُ أُسْتَحَاضُ حَيْضَةً كَثِيرَةً شَدِيدَةً، فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسْتَفْتِيهِ وَأُخْبِرُهُ، فَوَجَدْتُهُ فِي بَيْتِ أُخْتِي زَيْنَبَ بِنْتِ جَحْشٍ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي امْرَأَةٌ أُسْتَحَاضُ حَيْضَةً كَثِيرَةً شَدِيدَةً، فَمَا تَرَى فِيهَا قَدْ مَنَعَتْنِي الصَّلَاةَ وَالصَّوْمَ. فَقَالَ: «أَنْعَتُ لَكِ الْكُرْسُفَ، فَإِنَّهُ يُذْهِبُ الدَّمَ». قَالَتْ: هُوَ أَكْثَرُ مِنْ ذَلِكَ. قَالَ: «فَاتَّخِذِي ثَوْبًا». فَقَالَتْ: هُوَ أَكْثَرُ مِنْ ذَلِكَ إِنَّمَا أَثُجُّ ثَجًّا. قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَآمُرُكِ بِأَمْرَيْنِ أَيَّهُمَا فَعَلْتِ أَجْزَأَ عَنْكِ مِنَ الْآخَرِ، وَإِنْ قَوِيتِ عَلَيْهِمَا فَأَنْتِ أَعْلَمُ». قَالَ لَهَا: «إِنَّمَا هَذِهِ رَكْضَةٌ مِنْ رَكَضَاتِ الشَّيْطَانِ فَتَحَيَّضِي سِتَّةَ أَيَّامٍ أَوْ سَبْعَةَ أَيَّامٍ فِي عِلْمِ اللَّهِ، ثُمَّ اغْتَسِلِي حَتَّى إِذَا رَأَيْتِ أَنَّكِ قَدْ طَهُرْتِ، وَاسْتَنْقَأْتِ فَصَلِّي ثَلَاثًا وَعِشْرِينَ لَيْلَةً أَوْ أَرْبَعًا وَعِشْرِينَ لَيْلَةً وَأَيَّامَهَا وَصُومِي، فَإِنَّ ذَلِكَ يَجْزِيكِ، وَكَذَلِكَ فَافْعَلِي فِي كُلِّ شَهْرٍ كَمَا تَحِيضُ النِّسَاءُ، وَكَمَا يَطْهُرْنَ مِيقَاتُ حَيْضِهِنَّ وَطُهْرِهِنَّ، وَإِنْ قَوِيتِ عَلَى أَنْ تُؤَخِّرِي الظُّهْرَ وَتُعَجِّلِي الْعَصْرَ فَتَغْتَسِلِينَ وَتَجْمَعِينَ بَيْنَ الصَّلَاتَيْنِ الظُّهْرِ وَالْعَصْرِ، وَتُؤَخِّرِينَ الْمَغْرِبَ وَتُعَجِّلِينَ الْعِشَاءَ، ثُمَّ تَغْتَسِلِينَ وَتَجْمَعِينَ بَيْنَ الصَّلَاتَيْنِ فَافْعَلِي، وَتَغْتَسِلِينَ مَعَ الْفَجْرِ فَافْعَلِي، وَصُومِي إِنْ قَدِرْتِ عَلَى ذَلِكَ». قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَهَذَا أَعْجَبُ الْأَمْرَيْنِ إِلَيَّ»
قَالَ أَبُو دَاوُدَ: وَرَوَاهُ عَمْرُو بْنُ ثَابِتٍ، عَنِ ابْنِ عَقِيلٍ قَالَ: فَقَالَتْ: حَمْنَةُ فَقُلْتُ: «هَذَا أَعْجَبُ الْأَمْرَيْنِ إِلَيَّ» لَمْ يَجْعَلْهُ مِنْ قَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَعَلَهُ كَلَامَ حَمْنَةَ قَالَ أَبُو دَاوُدَ: وَعَمْرُو بْنُ ثَابِتٍ رَافِضِيٌّ رَجُلُ سُوءٍ وَلَكِنَّهُ كَانَ صَدُوقًا فِي الْحَدِيثِ وَثَابِتُ بْنُ الْمِقْدَامِ رَجُلٌ ثِقَةٌ وَذَكَرَهُ، عَنْ يَحْيَى بْنِ مَعِينٍ قَالَ أَبُو دَاوُدَ: سَمِعْت أَحْمَدَ يَقُولُ: حَدِيثُ ابْنِ عَقِيلٍ فِي نَفْسِي مِنْهُ شَيْءٌ
AbuDawood-Tamil-287.
AbuDawood-Shamila-287.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்