நபி (ஸல்) அவர்களிடமிருந்த ஒருவர் வினவினார், அவருக்கு நபி (ஸல்) அவர்கள் பதிலளிக்காமல் பிலாலுக்கு இகாமத் சொல்ல உத்தரவிட்டார்கள். பஜ்ர் நேரம் தென்பட்டவுடன் அவர் இகாமத் சொன்னார். ஒருவர் தனது தோழரின் முகத்தை அடையாளங்காண முடியாத அல்லது தனது பக்கத்தில் உள்ளவர் யார் என்று இனங்கண்டு கொள்ள முடியாத நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் சுபுஹை தொழுதார்கள். பிறகு நபி (ஸல்) பிலாலுக்கு உத்தரவிட்டார்கள். சூரியன் உச்சி சாயும் நேரத்தில் பிலால் ழுஹருக்கு இகாமத் சொல்வார். நபி (ஸல்) அவர்கள் லுஹர் நேரத்தை நன்கு தெரிந்திருந்தும் நடு பகல் ஆகிவிட்டதே என்று ஒருவர் சொல்கின்ற வரை நபி (ஸல்) ழுஹருக்கு பாங்கு சொல்ல உத்தரவிடமாட்டார்கள்.
பிறகு பிலாலுக்கு உத்தரவிட்டதும் சூரியன் உச்சியில் உயர்ந்து வெண்மையாக இருக்கும்போது பிலால் அஸருக்கு இகாமத் சொல்வார். பிறகு பிலாலுக்கு உத்தரவிட்டதும் சூரியன் மறைந்ததும் மக்ரிப் தொழுகைக்கு இகாமத் சொல்வார்கள். மீண்டும் பிலாலுக்கு உத்தரவிடுவார்கள். செம்மேகம் மறைந்ததும் இஷாவுக்கு இகாமத் சொல்வார். மறுநாளானதும் பஜ்ர் தொழுது விட்டு திரும்பினார்கள். அப்போது நாங்கள் சூரியன் உதித்து விட்டதா? என்று பேசிக் கொண்டோம். முந்தைய நாளில் அஸர் தொழுத நேரத்தில் (இன்று) லுஹர் தொழுகையை நிறைவேற்றினார்கள். சூரியன் மஞ்சளாகியதும் அல்லது மாலையானதும் அஸரை தொழுதார்கள். செம்மேகம் மறைவதற்கு முன்பு மக்ரிபை தொழுதார்கள். இரவில் மூன்றில் ஒரு பகுதி கழியும் போது இஷா தொழுதார்கள். பிறகு தொழுகை பற்றி வினவியவர் எங்கே? என்று கேட்டு விட்டு இந்த இரு நேரங்களுக்கு இடைப்பட்ட நேரத்தில் தான் தொழுகை நேரம் அமைந்துள்ளது என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
மக்ரிப் தொழுகை தொடர்பாக இதே மாதிரியாக நபி (ஸல்), ஜாபிர், அதா வழியாக ஸுலைமான் பின் மூஸா அறிவிக்கின்றார். இரவில் மூன்றில் ஒரு பகுதி கழிந்ததும் இஷா தொழுதார்கள் என்று சிலரும், பாதி இரவு கழிந்ததும் இஷா தொழுதார்கள் என சிலரும் அறிவித்ததாக மேற்கண்ட அறிவிப்பில் இடம் பெறுகின்றது.
லுஹர் நேரம் அஸர் நேரம் வராத வரையிலுமாகும். அஸர் நேரம் சூரியன் மஞ்சள் நிறமாகாதவரையிலுமாகும். மக்ரிபின் நேரம் செம்மேகத்தின் எஞ்சிய சிவப்பு நிறம் மறையாத வரையிலுமாகும். இஷாவின் நேரம் நடு இரவு வரையிலுமாகும். பஜ்ரில் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் அறிவிக்கின்றார்கள்.
இந்த ஹதீஸ் அஹ்மத், முஸ்லிம், நஸயீ ஆகிய நூல்களில் இடம் பெறுகின்றது.
(அபூதாவூத்: 395)حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، حَدَّثَنَا بَدْرُ بْنُ عُثْمَانَ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي مُوسَى، عَنْ أَبِي مُوسَى
أَنَّ سَائِلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ يَرُدَّ عَلَيْهِ شَيْئًا حَتَّى أَمَرَ بِلَالًا فَأَقَامَ الْفَجْرَ حِينَ انْشَقَّ الْفَجْرُ، فَصَلَّى حِينَ كَانَ الرَّجُلُ لَا يَعْرِفُ وَجْهَ صَاحِبِهِ – أَوْ أَنَّ الرَّجُلَ لَا يَعْرِفُ مَنْ إِلَى جَنْبِهِ – ثُمَّ أَمَرَ بِلَالًا فَأَقَامَ الظُّهْرَ حِينَ زَالَتِ الشَّمْسُ حَتَّى قَالَ: الْقَائِلُ انْتَصَفَ النَّهَارُ وَهُوَ أَعْلَمُ، ثُمَّ أَمَر بِلَالًا فَأَقَامَ الْعَصْرَ وَالشَّمْسُ بَيْضَاءُ مُرْتَفِعَةٌ، وَأَمَر بِلَالًا فَأَقَامَ الْمَغْرِبَ حِينَ غَابَتِ الشَّمْسُ، وَأَمَر بِلَالًا فَأَقَامَ الْعِشَاءَ حِينَ غَابَ الشَّفَقُ، فَلَمَّا كَانَ مِنَ الْغَدِ صَلَّى الْفَجْرَ وَانْصَرَفَ، فَقُلْنَا أَطَلَعَتِ الشَّمْسُ، فَأَقَامَ الظُّهْرَ فِي وَقْتِ الْعَصْرِ الَّذِي كَانَ قَبْلَهُ وَصَلَّى الْعَصْرَ، وَقَدِ اصْفَرَّتِ الشَّمْسُ – أَوْ قَالَ: أَمْسَى – وَصَلَّى الْمَغْرِبَ قَبْلَ أَنْ يَغِيبَ الشَّفَقُ، وَصَلَّى الْعِشَاءَ إِلَى ثُلُثِ اللَّيْلِ “، ثُمَّ قَالَ: «أَيْنَ السَّائِلُ عَنْ وَقْتِ الصَّلَاةِ الْوَقْتُ فِيمَا بَيْنَ هَذَيْنِ»
قَالَ أَبُو دَاوُدَ: رَوَى سُلَيْمَانُ بْنُ مُوسَى، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَغْرِبِ بِنَحْوِ هَذَا قَالَ: «ثُمَّ صَلَّى الْعِشَاءَ». قَالَ بَعْضُهُمْ: «إِلَى ثُلُثِ اللَّيْلِ». وَقَالَ بَعْضُهُمْ: «إِلَى شَطْرِهِ». وَكَذَلِكَ رَوَى ابْنُ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
AbuDawood-Tamil-395.
AbuDawood-Shamila-395.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்