பாடம் : 26
பல் துலக்கும் முறை.
நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் எங்களுக்கு வாகன வசதி ஏற்படுத்தி தருமாறு கேட்டு வந்த போது அவர்கள் தமது நாக்கை (பற்குச்சியால்) துலக்கக் கண்டேன் என்று அபூமூஸா அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி) அறிவிப்பதாக முஸத்தத் குறிப்பிடுகிறார்கள்.
நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன் அப்போது அவர்கள் தமது நாவின் ஓரத்தில் பற்குச்சியை வைத்துக் கொண்டு உஹ், உஹ் என்று சப்தமிட்டவாறு பல் துலக்கிக் கொண்டிருக்கக் கண்டேன் என அபூமூஸா அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி) கூறுவதாக சுலைமான் குறிப்பிடுகின்றார் என இமாம் அபூதாவூத் குறிப்பிடுகிறார்.
அபூபுர்தா (ரலி) அவர்கள் தமது தந்தை அபூமூஸா அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி) மூலம் அறிவிக்கிறார்கள். அது ஒரு நீண்ட ஹதீஸாக இருந்தது. அதை நான் சுருக்கி விட்டேன் என முஸத்தத் கூறுவதாக அபூதாவூது குறிப்பிடுகிறார்கள்.
அறிவிப்பவர் : அபூபுர்தா(ரலி)
(அபூதாவூத்: 49)26- بَابُ كَيْفَ يَسْتَاكُ
حَدَّثَنَا مُسَدَّدٌ، وَسُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْعَتَكِيُّ، قَالَا: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ غَيْلَانَ بْنِ جَرِيرٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ قَالَ: مُسَدَّدٌ قَالَ
«أَتَيْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَسْتَحْمِلُهُ فَرَأَيْتُهُ يَسْتَاكُ عَلَى لِسَانِهِ»
قَالَ أَبُو دَاوُدَ: وَقَالَ سُلَيْمَانُ: قَالَ: دَخَلْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَسْتَاكُ، وَقَدْ وَضَعَ السِّوَاكَ عَلَى طَرَفِ لِسَانِهِ، وَهُوَ يَقُولُ: «إِهْ إِهْ» يَعْنِي يَتَهَوَّعُ. قَالَ أَبُو دَاوُدَ: قَالَ مُسَدَّدٌ: فَكَانَ حَدِيثًا طَوِيلًا وَلَكِنِّي اخْتَصَرْتُهُ
AbuDawood-Tamil-49.
AbuDawood-Shamila-49.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்