மேற்கண்ட ஹதீஸே அம்மார்பின் யாஸிர் (ரலி) வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தாடியை வளர விடுதல் என்பதற்கு பதிலாக கத்னா செய்தல் என்ற வாசகமும், தண்ணீரால் செய்தல் என்பதற்கு பதிலாக தண்ணீர் தெளித்தல் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
மேற்கண்ட ஹதீஸ் போன்று இப்னு அப்பாஸ் மூலமும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஐந்து செயல்கள் குறிப்பிட்டு அவையனைத்தும் தலையைச் சார்ந்தவை எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் தாடியை (வளர) விடுதல் என்பதை குறிப்பிட்டால். தாடி முடியை வகிடு எடுத்து சீவுதல் குறிப்பிடப் பட்டுள்ளது என இமாம் அபூதாவூது கூறுகின்றார்கள்.
மேலும் இமாம் அபூதாவூது (ரஹ்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளனர்:
அதாவது தல்க் பின் ஹபீப் முஜிரஹித் ஆகியோரிடமிருந்து பக்ர் பின் அப்துல்லாஹ் அல் முஸ்னீ ஆகியோரிட மிருந்து ஹம்மாத் அறிவிக்கும் ஹதீஸ் போலவே வேறு சிலராலும் அறிவிக்கப் பட்டுள்ளது. அதில் தாடியை (வளர) விடுவது பற்றி கூறப்படவில்லை. நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அபூ ஸலமா வாயிலாக அறிவிக்கும் ஹதீஸில் தாடியை விட்டு விடுதல் என்றுள்ளது. இப்றாஹீம் அன்னகயீ என்பாரிடமிருந்து இதே போன்ற ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தாடியை விட்டு விடுதல் கத்னா செய்தல் ஆகியன கூறப்பட்டுள்ளன.
குறிப்பு : இது இப்னுமாஜாவிலும் இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் ஸலமா பின் முஹமது யாரென அறியப்படாதவர் என இப்னுல் கையும் (ரஹ்) குறிப்பிடுகிறார்கள். இவர் தனது பாட்டனார் மூலம் அறிவிப்பவை முர்ஸலான ஹதீஸாகும். அதாவது இவர் தனது பாட்டனாரைச் சந்திக்கவில்லை. இப்னு ஹிப்பான் அவர்கள் இவரது ஹதீஸை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது எனக் குறிப்பிடுகிறார்கள்.
(அபூதாவூத்: 54)حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ ، وَدَاوُدُ بْنُ شَبِيبٍ ، قَالَا : نَا حَمَّادٌ ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ ، عَنْ سَلَمَةَ بْنِ مُحَمَّدِ بْنِ عَمَّارِ بْنِ يَاسِرٍ ، قَالَ مُوسَى : عَنْ أَبِيهِ ، وَقَالَ دَاوُدُ : عَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : إِنَّ مِنَ الْفِطْرَةِ الْمَضْمَضَةَ وَالِاسْتِنْشَاقَ . فَذَكَرَ نَحْوَهُ وَلَمْ يَذْكُرْ إِعْفَاءَ اللِّحْيَةِ ، وَزَادَ : وَالْخِتَانَ ، قَالَ : وَالِانْتِضَاحَ ، وَلَمْ يَذْكُرِ انْتِقَاصَ الْمَاءِ ، يَعْنِي الِاسْتِنْجَاءَ .
قَالَ أَبُو دَاوُدَ : وَرُوِيَ نَحْوُهُ عَنِ ابْنِ عَبَّاسٍ ، وَقَالَ : خَمْسٌ كُلُّهَا فِي الرَّأْسِ ، وَذَكَرَ فِيهِ الْفَرْقَ وَلَمْ يَذْكُرْ إِعْفَاءَ اللِّحْيَةِ .
قَالَ أَبُو دَاوُدَ : وَرُوِيَ نَحْوُ حَدِيثِ حَمَّادٍ ، عَنْ طَلْقِ بْنِ حَبِيبٍ ، وَمُجَاهِدٍ ، وَعَنْ بَكْرِ بْنِ عَبْدِ اللهِ الْمُزَنِيِّ قَوْلُهُمْ ، وَلَمْ يَذْكُرُوا إِعْفَاءَ اللِّحْيَةِ .
وَفِي حَدِيثِ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللهِ بْنِ أَبِي مَرْيَمَ ، عَنْ أَبِي سَلَمَةَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهِ : وَإِعْفَاءُ اللِّحْيَةِ ، وَعَنْ إِبْرَاهِيمَ النَّخَعِيِّ نَحْوُهُ ، وَذَكَرَ إِعْفَاءَ اللِّحْيَةِ وَالْخِتَانَ .
AbuDawood-Tamil-54.
AbuDawood-Shamila-54.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்