தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-81

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 40

ஆண்களும் பெண்களும் சேர்ந்து உளூச் செய்யத் தடை.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டது போல் ‎நான்காண்டுகள் நபி (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்ட ஒருவரை நான் ‎சந்தித்தேன். அவர் ஆண் குளித்து விட்டு எஞ்சிய தண்ணீரில் பெண் குளிப்பதையும் ‎அல்லது பெண் குளித்து விட்டு எஞ்சிய தண்ணீரில் ஆண் குளிப்பதையும் ‎அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்று அறிவித்தார் என ‎ஹுமைத் அல் ஹிம்யரி தெரிவிக்கிறார்கள்.‎

முஸத்தத் அவர்கள் தமது அறிவிப்பில் ஆணும் பெண்ணும் ஒன்றாக சேர்ந்து நீர் ‎அள்ளட்டும் என்ற வாசகத்தை அதிகமாக அறிவித்துள்ளார்.‎

‎(குறிப்பு: நஸயீ, அஹ்மத் ஆகியவற்றிலும் இது இடம் பெற்றுள்ளது.)‎

(அபூதாவூத்: 81)

40- بَابُ النَّهْيِ عَنْ ذَلِكَ

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ دَاوُدَ بْنِ عَبْدِ اللَّهِ، ح وَحَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ دَاوُدَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ حُمَيْدٍ الْحِمْيَرِيِّ، قَالَ: لَقِيتُ رَجُلًا صَحِبَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعَ سِنِينَ، كَمَا صَحِبَهُ أَبُو هُرَيْرَةَ، قَالَ

«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تَغْتَسِلَ الْمَرْأَةُ بِفَضْلِ الرَّجُلِ، أَوْ يَغْتَسِلَ الرَّجُلُ بِفَضْلِ الْمَرْأَةِ»، زَادَ مُسَدَّدٌ: «وَلْيَغْتَرِفَا جَمِيعًا»


AbuDawood-Tamil-81.
AbuDawood-Shamila-81.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.