ஹதீஸின் தரம்: விபரம் கீழே
8379.
காரிஜா பின் அஸ்ஸல்த் அல்புர்ஜுமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் (பின் மஸ்ஊத்) அவர்களுடன் பள்ளிவாசலில் நுழைந்தேன். அப்போது மக்கள் தொழுதுகொண்டிருந்தார்கள். எனவே அவரும் தொழுகச் சென்றார்.
அச்சமயத்தில் ஒரு மனிதர் கடந்து சென்றபோது அப்துல்லாஹ்வுக்கு முகமன் கூறினார். அப்போது அப்துல்லாஹ், “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையே உரைத்தனர்” என்று கூறினார். பிறகு (தொழுகை) அணியை அடைந்(து தொழுது முடித்)தார். அவர் தொழுது முடித்தபோது, “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையே உரைத்தனர்” என்று அவர் கூறியது குறித்து நான் கேட்டேன்.
அப்போது அவர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாகத் தெரிவித்ததாவது:
பள்ளிவாசல்கள் பாதைகளாக ஆக்கப்படும் வரை, ஒரு மனிதர் தாம் அறிந்த மனிதருக்கு (மட்டும்) முகமன் சொல்லும் வரை, கணவனோடு சேர்ந்து மனைவியும் வியாபாரம் செய்யும் வரை, குதிரைகளும் பெண்களும் விலையுயர்ந்து, பின்னர் அவற்றின் மதிப்பு குறைந்து போகும் வரை மறுமை நாள் ஏற்படாது. (பின்னர்) மறுமை நாள் வரை அவர்களின் மதிப்பு உயராது.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ( ரலி )
دَخَلْتُ مَعَ عَبْدِ اللَّهِ يَوْمًا الْمَسْجِدَ، فَإِذَا الْقَوْمُ رُكُوعٌ، فَمَرَّ رَجُلٌ فَسَلَّمَ عَلَيْهِ، فَقَالَ: صَدَقَ اللَّهُ وَرَسُولُهُ صَدَقَ اللَّهُ وَرَسُولُهُ، فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ، فَقَالَ: «إِنَّهُ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تُتَّخَذَ الْمَسَاجِدُ طُرُقًا، وَحَتَّى يُسَلِّمَ الرَّجُلُ عَلَى الرَّجُلِ بِالْمَعْرِفَةِ، وَحَتَّى تَتْجَرَ الْمَرْأَةُ وَزَوْجُهَا، وَحَتَّى تَغْلُو الْخَيْلُ وَالنِّسَاءُ، ثُمَّ تَرْخُصَ فَلَا تَغْلُو إِلَى يَوْمِ الْقِيَامَةِ»
சமீப விமர்சனங்கள்