Author: Farook

Kubra-Bayhaqi-20351

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

20351. அபுல்பக்தரீ (ஸயீத் பின் ஃபைரூஸ்-ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(தவ்பா அத்தியாயத்தின்) “அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர். ஒரே கடவுளை வணங்குமாறுதான் அவர்கள் கட்டளையிடப்பட்டனர். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் தூயவன். (அல்குர்ஆன் 9:31) எனும் வசனத்தின்படி யூத, கிருத்துவர்கள் தங்கள் மதபோதகர்களை வணங்கினார்களா? என்று ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “இல்லை; என்றாலும் (அல்லாஹ்வால் ஹராம் என்று) தடுக்கப்பட்டதை மதபோதகர்கள் அனுமதித்தபோது அதை அவர்கள் அனுமதிக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டார்கள்; (அல்லாஹ்வால் ஹலால் என்று) அனுமதிக்கப்பட்டதை மதபோதகர்கள் தடைசெய்தபோது அதை அவர்கள் தடை செய்துக் கொண்டார்கள். எனவே, மதபோதகர்கள் (அவர்களுக்கு) கடவுளர்கள் (போன்று) ஆகிவிட்டனர்” என்று பதிலளித்தார்கள்.

பைஹகீ இமாம் கூறுகிறார்:

இது அஃமஷ் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸாயிதா அவர்களின் வாக்கியமாகும்.


سُئِلَ حُذَيْفَةُ رَضِيَ اللهُ عَنْهُ عَنْ هَذِهِ الْآيَةِ: ” {اتَّخَذُوا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِنْ دُونَ اللهِ} [التوبة: 31] , أَكَانُوا يُصَلُّونَ لَهُمْ؟ ” قَالَ: ” لَا , وَلَكِنَّهُمْ كَانُوا يُحِلُّونَ لَهُمْ مَا حُرِّمَ عَلَيْهِمْ , فَيَسْتَحِلُّونَهُ , وَيُحَرِّمُونَ عَلَيْهِمْ مَا أَحَلَّ اللهُ لَهُمْ , فَيُحَرِّمُونَهُ , فَصَارُوا بِذَلِكَ أَرْبَابًا “.

لَفْظُ حَدِيثِ زَائِدَةَ


Musannaf-Ibn-Abi-Shaybah-34936

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

34936. (தவ்பா அத்தியாயத்தின்) “அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர். ஒரே கடவுளை வணங்குமாறுதான் அவர்கள் கட்டளையிடப்பட்டனர். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் தூயவன். (அல்குர்ஆன் 9:31)

எனும் வசனத்தின் விளக்கம்பற்றி, “யூத, கிருத்துவர்கள் தங்கள் மதபோதகர்கள், (அல்லாஹ்வால் ஹலால் என்று) அனுமதிக்கப்பட்டதை தடைசெய்தபோதும்; (அல்லாஹ்வால் ஹராம் என்று) தடுக்கப்பட்டதை அனுமதித்தபோதும் அவர்களுக்கு கட்டுப்பட்டனர். எனவே இது அவர்களை வணங்கியதாக ஆனது என்று அபுல்பக்தரீ (ஸயீத் பின் ஃபைரூஸ்-ரஹ்) அவர்கள் கூறினார்.

அறிவிப்பவர்: அதாஉ பின் ஸாயிப் (ரஹ்)


{اتَّخَذُوا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ} [التوبة: 31] قَالَ: أَطَاعُوهُمْ فِيمَا أَمَرُوهُمْ بِهِ مِنْ تَحْرِيمِ حَلَالٍ وَتَحْلِيلِ حَرَامٍ , فَعَبَدُوهُمْ بِذَلِكَ


Kubra-Bayhaqi-20350

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

20350. என் கழுத்தில் தங்கத்தால் ஆன சிலுவை இருக்கும் நிலையில் நபி (ஸல்) அவர்களிடம் நான் சென்றேன். அப்போது அவர்கள், தவ்பா அத்தியாத்தின் “அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர். ஒரே கடவுளை வணங்குமாறுதான் அவர்கள் கட்டளையிடப்பட்டனர். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் தூயவன். (அல்குர்ஆன் 9:31) எனும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

அப்போது நான், அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் மதபோதகர்களை வணங்கவில்லையே! என்று கூறினேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம்”. என்றாலும் அல்லாஹ் (ஹராம் என்று) தடுத்ததை அவர்கள் அனுமதித்தபோது அதை அவர்கள் அனுமதிக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டார்கள்; அல்லாஹ் (ஹலால் என்று) அனுமதித்ததை மதபோதகர்கள் தடைசெய்தபோது அதை அவர்கள் தடை செய்துக் கொண்டார்கள். இவ்வாறு அவர்கள் செய்தது, அவர்களை வணங்கியது (போன்று) தான்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அதீ பின் ஹாதிம் (ரலி)


أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , وَفِي عُنُقِي صَلِيبٌ مِنْ ذَهَبٍ , قَالَ: فَسَمِعْتُهُ يَقُولُ: ” {اتَّخَذُوا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِنْ دُونِ اللهِ} [التوبة: 31] ” , قَالَ: قُلْتَ: يَا رَسُولَ اللهِ , إِنَّهُمْ لَمْ يَكُونُوا يَعْبُدُونَهُمْ قَالَ: ” أَجَلْ , وَلَكِنْ يُحِلُّونَ لَهُمْ مَا حَرَّمَ اللهُ , فَيَسْتَحِلُّونَهُ , وَيُحَرِّمُونَ عَلَيْهِمْ مَا أَحَلَّ اللهُ , فَيُحَرِّمُونَهُ , فَتِلْكَ عِبَادَتُهُمْ لَهُمْ


Almujam-Alkabir-218

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

218. என் கழுத்தில் தங்கத்தால் ஆன சிலுவை இருக்கும் நிலையில் நபி (ஸல்) அவர்களிடம் நான் சென்றேன். அப்போது அவர்கள், இந்த சிலுவையை எறிந்து விடுங்கள் என்று கூறினார்கள். எனவே நான் அதை எறிந்துவிட்டு வந்தபோது நபி (ஸல்) அவர்கள், பராஅத் (தவ்பா) அத்தியாயத்தின் “அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர். ஒரே கடவுளை வணங்குமாறுதான் அவர்கள் கட்டளையிடப்பட்டனர். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் தூயவன். (அல்குர்ஆன் 9:31) எனும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

அப்போது நான், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் மதபோதகர்களை வணங்கவில்லையே! என்று கூறினேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் (ஹலால் என்று) அனுமதித்ததை அவர்கள் தடைசெய்தபோது அதை நீங்கள் தடை செய்துக் கொண்டீர்கள் அல்லவா?; அல்லாஹ் (ஹராம் என்று) தடுத்ததை அவர்கள் அனுமதித்தபோது அதை நீங்கள் அனுமதிக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டீர்கள் அல்லவா?” என்று என்னிடம் (திருப்பிக்) கேட்டார்கள். அதற்கு நான், “ஆம்” என்று கூற, “இவ்வாறு நீங்கள் செய்தது அவர்களை வணங்கியது (போன்று) தான்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அதீ பின் ஹாதிம் (ரலி)


أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي عُنُقِي صَلِيبٌ مِنْ ذَهَبٍ، فَقَالَ: ” يَا عَدِيُّ اطْرَحْ هَذَا الْوَثَنَ مِنْ عُنُقِكَ، فَطَرَحْتُهُ فَانْتَهَيْتُ إِلَيْهِ وَهُوَ يَقْرَأُ سُورَةَ بَرَاءَةَ فَقَرَأَ هَذِهِ الْآيَةَ {اتَّخَذُوا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِنْ دُونِ اللهِ} [التوبة: 31] حَتَّى فَرَغَ مِنْهَا، فَقُلْتُ: إنَّا لَسْنَا نَعْبُدُهُمْ، فَقَالَ: «أَلَيْسَ يُحَرِّمُونَ مَا أَحَلَّ اللهُ فَتُحَرِّمُونُهُ، ويُحِلُّونَ مَا حَرَّمَ اللهُ فَتَسْتَحِلُّونَهُ؟» قُلْتُ: بَلَى، قَالَ: «فَتِلْكَ عِبَادَتُهُمْ»


Bazzar-6212

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6212.


الْحَسَدُ يَأْكُلُ الْحَسَنَاتِ كَمَا تأكل النار الحطب والصدقة تطفيء الخطيئة كما يطفىء الْمَاءُ النَّارَ وَالصَّلاةُ نُورُ الْمُؤْمِنِ وَالصِّيَامُ جُنَّةٌ مِنَ النَّارِ.


Abi-Yala-3656

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3656.


«الْحَسَدُ يَأْكُلُ الْحَسَنَاتِ كَمَا تَأْكُلُ النَّارُ الْحَطَبَ، وَالصَّدَقَةُ تُطْفِئُ الْخَطِيئَةَ كَمَا يُطْفِئُ الْمَاءُ النَّارَ، وَالصَّلَاةُ نُورُ الْمُؤْمِنِ، وَالصِّيَامُ جُنَّةٌ مِنَ النَّارِ»


Almujam-Alkabir-163

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

163. நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் தொழுகையைப் பற்றி குறிப்பிட்டார்கள். அப்போது யார் அதை பேணிக் கொள்கிறாரோ அவருக்கு அது மறுமை நாளில் ஒளியாகவும் ஆதாரமாகவும் இருக்கும். மேலும் யார் அதை பேணவில்லையோ அவருக்கு அது மறுமை நாளில் ஒளியாகவும் ஆதாரமாகவும் இருக்காது.

மேலும் அவர் மறுமை நாளில் ஃபிர்அவ்ன், ஹாமான், உபைய்யு பின் கலஃப் ஆகியாருடன் இருப்பார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

 


ذَكَرَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مَنْ حَافَظَ عَلَيْهَا كَانَتْ لَهُ نُورٌ وَبُرْهَانٌ، وَمَنْ لَمْ يُحَافِظْ عَلَيْهَا لَمْ تَكُنْ لَهُ نُورٌ وَلَا بُرْهَانٌ، وَكَانَ مَعَ فِرْعَوْنَ وَهَامَانَ وَأَبِيِّ بْنِ خَلَفٍ»


Next Page » « Previous Page