தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1234

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 9 தொழுகையில் சைகை செய்வது

இதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடமிருந்து உம்மு சலமா (ரலி) அவர்கள் அறிவித்ததாக, குறைப் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். 

 ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.

இப்னு அவ்ஃப் கோத்திரத்தார்களிடைய ஏதோ பிரச்சினை ஏற்பட்டு இருப்பதாக நபி(ஸல்) அவர்களுக்குச் செய்தி கிடைத்தது. எனவே, நபி(ஸல்) அவர்கள் தம் தோழர் சிலருடன் அங்கு சென்று அக்கோத்திரத்தார்களிடையே சமாதானம் செய்வதில் ஈடுபட்டிருந்தபோது தொழுகையின் நேரம் நெருங்கிவிட்டது. அப்போது பிலால்(ரலி), அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் வந்து ‘அபூ பக்ரே! நபி(ஸல்) அவர்கள் (தங்கள் பணியின் நிமித்தமாக நேரத்தோடு வந்து சேர்வதிலிருந்து) தடுக்கப்பட்டிருக்கிறார்கள். தொழுகையின் நேரமும் நெருங்கிவிட்டது. எனவே, தாங்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துகிறீர்களா?’ எனக் கேட்டதற்கு அபூ பக்ர்(ரலி) ‘நீர் விரும்பினால் செய்கிறேன்’ என்றவுடன் பிலால்(ரலி) இகாமத் கூற அபூ பக்ர்(ரலி) முன்னின்று மக்களுக்குத் தொழுகை நடத்துவதற்காகத் தக்பீர் கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் வரிசைகளினூடே வந்து (முதல்) வரிசையில் நின்றார்கள். (இதைக் கண்ட) மக்கள் கைதட்டலானார்கள்.

தொழுகையில் திரும்பும் வழக்கமில்லாத அபூ பக்ர்(ரலி) மக்கள் கைதட்டலை அதிகரித்தபோது திரும்பி (முதல் வரிசையில்) நபி(ஸல்) அவர்கள் நிற்பதைக் கண்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ரைப் பார்த்துத் தொழுகையைத் தொடரும்படி சைகை செய்தார்கள். எனினும், அபூ பக்ர்(ரலி) தம் கைகளை உயர்த்தி இறைவனைப் புகழ்ந்து திரும்பாமல் பின் நோக்கி வந்து (முதல்) வரிசையில் நின்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள் முன் சென்று மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். தொழுகையை முடித்ததும் மக்களை முன்னோக்கி

‘மக்களே! தொழுகையில் (இதே போன்று) ஏதாவது நிகழ்ந்துவிட்டால் நீங்கள் ஏன் கை தட்டுகிறீர்கள்? கை தட்டுதல் பெண்களுக்குரிய செயலாகும். எனவே, யாருக்கேனும் தம் தொழுகையில் ஏதேனும் நிகழ்ந்துவிட்டால் ‘ஸுப்ஹானல்லாஹ்’ எனக் கூறட்டும். ஏனெனில், ஸுப்ஹானல்லாஹ்வைக் கேட்கிறவர் இந்தப் பக்கம் தம் கவனத்தைச் செலுத்துவார்’ எனக் கூறினார்கள். பிறகு (அபூ பக்ர்(ரலி) அவர்களிடம்) ‘அபூ பக்ரே! நான் உம்மை நோக்கிச் சைகை செய்தபோது மக்களுக்குத் தொடர்ந்து தொழுகை நடத்துவதிலிருந்து உம்மைத் தடுத்தது எது?’ எனக் கேட்டார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி) ‘இறைத்தூதர் முன்னிலையில் தொழுகை நடத்து அபூ குஹாஃபாவின் மகனுக்குத் தகுதியற்ற செயலாகும்’ எனக் கூறினார்.
Book : 22

(புகாரி: 1234)

بَابُ الإِشَارَةِ فِي الصَّلاَةِ

قَالَهُ كُرَيْبٌ: عَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَلَغَهُ أَنَّ بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ، كَانَ بَيْنَهُمْ شَيْءٌ، فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصْلِحُ بَيْنَهُمْ فِي أُنَاسٍ مَعَهُ، فَحُبِسَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَحَانَتِ الصَّلاَةُ، فَجَاءَ بِلاَلٌ إِلَى أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقَالَ: يَا أَبَا بَكْرٍ، إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ حُبِسَ، وَقَدْ حَانَتِ الصَّلاَةُ، فَهَلْ لَكَ أَنْ تَؤُمَّ النَّاسَ؟ قَالَ: نَعَمْ إِنْ شِئْتَ، فَأَقَامَ بِلاَلٌ، وَتَقَدَّمَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَكَبَّرَ لِلنَّاسِ وَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْشِي فِي الصُّفُوفِ، حَتَّى قَامَ فِي الصَّفِّ، فَأَخَذَ النَّاسُ فِي التَّصْفِيقِ، وَكَانَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ لاَ يَلْتَفِتُ فِي صَلاَتِهِ، فَلَمَّا أَكْثَرَ النَّاسُ التَفَتَ، فَإِذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَشَارَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَأْمُرُهُ: «أَنْ يُصَلِّيَ» فَرَفَعَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَدَيْهِ، فَحَمِدَ اللَّهَ وَرَجَعَ القَهْقَرَى وَرَاءَهُ حَتَّى قَامَ فِي الصَّفِّ، فَتَقَدَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَصَلَّى لِلنَّاسِ، فَلَمَّا فَرَغَ أَقْبَلَ عَلَى النَّاسِ، فَقَالَ: ” يَا أَيُّهَا النَّاسُ مَا لَكُمْ حِينَ نَابَكُمْ شَيْءٌ فِي الصَّلاَةِ، أَخَذْتُمْ فِي التَّصْفِيقِ إِنَّمَا التَّصْفِيقُ لِلنِّسَاءِ، مَنْ نَابَهُ شَيْءٌ فِي صَلاَتِهِ فَلْيَقُلْ: سُبْحَانَ اللَّهِ، فَإِنَّهُ لاَ يَسْمَعُهُ أَحَدٌ حِينَ يَقُولُ: سُبْحَانَ اللَّهِ إِلَّا التَفَتَ، يَا أَبَا بَكْرٍ، مَا مَنَعَكَ أَنْ تُصَلِّيَ لِلنَّاسِ حِينَ أَشَرْتُ إِلَيْكَ ” فَقَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: مَا كَانَ يَنْبَغِي لِابْنِ أَبِي قُحَافَةَ أَنْ يُصَلِّيَ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.