தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1572

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 37 (தமத்துஉ செய்ய அனுமதியளிக்கும்) இச்சலுகை எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமின் பக்கத்தில் இல்லையோ அவருக்குத்தான் எனும் (2:196ஆவது) இறைவசனம். 

 இக்ரிமா அறிவித்தார்.

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் தமத்துஉ பற்றிக் கேட்கப்பட்டது. ‘ஹஜ்ஜத்துல் வதாவில் முஹாஜிரீன்களும் அன்ஸாரிகளும் நபி(ஸல்) அவர்களின் மனைவியர்களும் (ஹஜ்ஜுக்காக) இஹ்ராம் அணிந்தார்கள். நாங்களும் (அதற்காகவே) இஹ்ராம் அணிந்தோம். ஆனால், நாங்கள் மக்கா நகருக்கு வந்தபோது, நபி(ஸல்) ‘குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்தவர்களைத் தவிர, மற்ற அனைவரும் தங்கள் ஹஜ்ஜை உம்ராவாக மாற்றிக் கொள்ளுங்கள்!’ என்றார்கள்.

நாங்கள் கஅபாவைத் வலம்வந்து ஸஃபா மர்வாவுக்கிடையே ஓடி, மனைவியருடன் கூடி (தைக்கப்பட்ட) ஆடைகளை அணிந்து கொண்டோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘தம்மோடு பிராணி கொண்டு வந்தவர்கள் பிராணி தனக்குரிய இடத்தில் சேரும் வரை… குர்பானி கொடுக்கும் வரை.. இஹ்ராமிலிருந்து விடுபடக் கூடாது’ எனக் கட்டளையிட்டார்கள். எட்டாம் நாள் மாலையில் நபி(ஸல்) அவர்கள் எங்களை ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணியக் கட்டளையிட்டார்கள். நாங்கள் ஹஜ்ஜுக்கான மற்ற வழிபாடுகளை முடித்துவிட்டு வலம்வந்தோம். ஸஃபா மர்வாவுக்கிடையே ஓடினோம். எங்களின் ஹஜ் நிறைவு பெற்றுவிட்டது.

மேலும், ‘எவரேனும் ஹஜ்ஜுடைய காலம் வரும் முன் உம்ரா செய்ய விரும்பினால் அவர் பலிப் பிராணிகளில் தம்மால் இயன்றதை குர்பானி கொடுக்கட்டும். பலிப் பிராணி கிடைக்கப் பெறாதவர்கள் ஹஜ்ஜுக் காலத்தில் மூன்று நாள்களும் (ஹஜ்ஜிலிருந்து தம் ஊர்களுக்கு) திரும்பியதும் ஏழு நாள்களும் நோன்பு நோற்க வேண்டும்.’ (திருக்குர்ஆன் 02: 196) என்ற இறைவசனம் கூறுவது போல் எங்களின் மீது பலி கொடுப்பது கடமையாகிவிட்டது. குர்பானி (பலி) கொடுப்பதற்கு ஆடு போதுமானதாகும்.

எனவே, மக்கள் ஹஜ், உம்ரா என்ற இரண்டு கடமையையும் ஒரே ஆண்டில் நிறைவேற்றினர். (தமத்துஉ செய்ய அனுமதியளிக்கும்) இச்சட்டம் அல்லாஹ் தன் வேதத்தில் அருளியதும், நபி(ஸல்) அவர்களின் நடைமுறையும், மக்காவாசிகளல்லாத மற்ற மக்கள் அனைவருக்கும் நபி(ஸல்) அவர்கள் அனுமதித்ததாகும்.

ஏனெனில், அல்லாஹ் ‘இச்சலுகை எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமின் பக்கத்தில் இல்லையோ அவர்களுக்குத்தான்’ (திருக்குர்ஆன்:02:196) என்று கூறுகிறான்.
மேலும், அல்லாஹ் ஹஜ்ஜுடைய மாதம் எனக் கூறுவது ஷவ்வால், துல்கஅதா, துல்ஹஜ் ஆகும். இம்மாதங்களில் யார் தமத்துஉ செய்கின்றனரோ அவர்களின் மீது குர்பானியோ அல்லது நோன்போ கடமையாகும் என்றார்கள்.
Book : 25

(புகாரி: 1572)

بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {ذَلِكَ لِمَنْ لَمْ يَكُنْ أَهْلُهُ حَاضِرِي المَسْجِدِ الحَرَامِ} [البقرة: 196]

وَقَالَ أَبُو كَامِلٍ فُضَيْلُ بْنُ حُسَيْنٍ البَصْرِيُّ: حَدَّثَنَا أَبُو مَعْشَرٍ البَرَّاءُ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ غِيَاثٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّهُ

سُئِلَ عَنْ مُتْعَةِ الحَجِّ، فَقَالَ: أَهَلَّ المُهَاجِرُونَ، وَالأَنْصَارُ، وَأَزْوَاجُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّةِ الوَدَاعِ، وَأَهْلَلْنَا، فَلَمَّا قَدِمْنَا مَكَّةَ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اجْعَلُوا إِهْلاَلَكُمْ بِالحَجِّ عُمْرَةً، إِلَّا مَنْ قَلَّدَ الهَدْيَ» فَطُفْنَا بِالْبَيْتِ، وَبِالصَّفَا وَالمَرْوَةِ، وَأَتَيْنَا النِّسَاءَ، وَلَبِسْنَا الثِّيَابَ، وَقَالَ: «مَنْ قَلَّدَ الهَدْيَ، فَإِنَّهُ لاَ يَحِلُّ لَهُ حَتَّى يَبْلُغَ الهَدْيُ مَحِلَّهُ» ثُمَّ أَمَرَنَا عَشِيَّةَ التَّرْوِيَةِ أَنْ نُهِلَّ بِالحَجِّ، فَإِذَا فَرَغْنَا مِنَ المَنَاسِكِ، جِئْنَا فَطُفْنَا بِالْبَيْتِ، وَبِالصَّفَا وَالمَرْوَةِ، فَقَدْ تَمَّ حَجُّنَا وَعَلَيْنَا الهَدْيُ، كَمَا قَالَ اللَّهُ تَعَالَى: {فَمَا اسْتَيْسَرَ مِنَ الهَدْيِ، فَمَنْ لَمْ يَجِدْ فَصِيَامُ ثَلاَثَةِ أَيَّامٍ فِي الحَجِّ، وَسَبْعَةٍ إِذَا رَجَعْتُمْ} [البقرة: 196]: إِلَى أَمْصَارِكُمْ، الشَّاةُ تَجْزِي، فَجَمَعُوا نُسُكَيْنِ فِي عَامٍ، بَيْنَ الحَجِّ وَالعُمْرَةِ، فَإِنَّ اللَّهَ تَعَالَى أَنْزَلَهُ فِي كِتَابِهِ، وَسَنَّهُ نَبِيُّهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَبَاحَهُ لِلنَّاسِ غَيْرَ أَهْلِ مَكَّةَ قَالَ اللَّهُ: {ذَلِكَ لِمَنْ لَمْ يَكُنْ أَهْلُهُ حَاضِرِي المَسْجِدِ الحَرَامِ} [البقرة: 196] وَأَشْهُرُ الحَجِّ الَّتِي ذَكَرَ اللَّهُ تَعَالَى فِي كِتَابهِ: شَوَّالٌ وَذُو القَعْدَةِ وَذُو الحَجَّةِ، فَمَنْ تَمَتَّعَ فِي هَذِهِ الأَشْهُرِ، فَعَلَيْهِ دَمٌ أَوْ صَوْمٌ

 وَالرَّفَثُ: الجِمَاعُ، وَالفُسُوقُ: المَعَاصِي، وَالجِدَالُ: المِرَاءُ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.