பாடம் : 4 (கஅபாவிற்குச் செல்ல முடியாதபடி) ஹஜ்ஜிலிருந்து தடுக்கப்பட்டவர் மீண்டும் (ஹஜ்) செய்ய வேண்டியதில்லை.
யார் (தாம்பத்திய) இன்பத்தை நாடித் தமது ஹஜ்ஜை முறித்துக்கொள்கிறாரோ அவர் மீது தான் மீண்டும் (அதை) நிறைவேற்றும் கடமை உள்ளது! தக்க காரணமோ (நோய், எதிரிகளின் முற்றுகை போன்ற) வேறு ஏதுமோ ஒருவரைத் தடுத்திருந்தால் அவர் இஹ்ராமிலிருந்து விடுவார்; அவர் திரும்ப (ஹஜ்) செய்ய வேண்டியதில்லை. தடுக்கப்படும் போது அவரிடம் பலிப்பிராணி இருந்தால், அதை பலியிடும் இடத்திற்கு (மினாவுக்கு) அனுப்ப இயலாவிட்டால், தடுக்கப்பட்ட இடத்திலேயே அதை அறுத்து பலியிடுவார். அனுப்ப இயலுமானால் பலிப்பிராணி அதற்குரிய இடத்தை (மினாவை) அடையும்வரை அவர் இஹ்ராமிலிருந்து விடுபடக்கூடாது! என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
தடுக்கப்படுபவர் தமது பலிப் பிராணியை அறுத்து பலியிட்டு விடுவார். எந்த இடத்திலிருந்தாலும் தலையை மழித்துக்கொள்வார்; (தடுக்கப்பட்ட ஹஜ்ஜை அல்லது உம்ராவை) அவர் திரும்ப நிறைவேற்ற வேண்டியதில்லை. ஏனெனில், நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் ஹுதைபிய்யாவில் உம்ராவிலிருந்து தடுக்கப்பட்ட போது அவர்கள் அறுத்து பலியிட்டார்கள்; தலை மழித்துக் கொண்டார்கள்;தவாஃப் செய்வதற்கு முன்பும் பலிப்பிராணி கஅபாவை அடைவதற்கு முன்பும் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டார்கள்.
மேலும், நபி (ஸல்) அவர்கள் எதையும் (களாவாக) திரும்பச் செய்யுமாறு எவருக்கும் கட்டளையிட்டதாகக் கூறப்பட வில்லை. மேலும் ஹுதைபியா எனும் இடம் ஹரம்-புனித எல்லைக்கு வெளியே உள்ளதாகும்’ என மாலிக் (ரஹ்) அவர்களும் மற்றும் சிலரும் குறிப்பிடுகிறார்கள்.
நாஃபிவு(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
குழப்பமான காலத்தில் உம்ரா செய்வதற்காக இப்னு உமர்(ரலி) மக்காவிற்குப் புறப்பட்டபோது, ‘கஅபாவுக்குச் செல்ல விடாமல் நான் தடுக்கப்பட்டால் நபி(ஸல்) அவர்களுடன் சென்றபோது நாங்கள் செய்தது போல் செய்து கொள்வோம்!’ என்றார்கள். ஹுதைபிய்யா ஆண்டின்போது (ஹிஜ்ரி6-ல்), நபி(ஸல்) அவர்கள் உம்ராவிற்கு இஹ்ராம் அணிந்த காரணத்தினால் இப்னு உமர்(ரலி) அவர்களும் உம்ராவிற்கு இஹ்ராம் அணிந்தார்கள். பின்னர் சிந்தித்துப் பார்த்து, ‘ஹஜ், உம்ரா இரண்டும் ஒரே மாதிரியானது தான்!’ என்று கூறினார்கள்.
பின்னர் தம் தோழர்களை நோக்கி, ‘இவ்விரண்டும் ஒரே மாதிரியானவையே! எனவே, உம்ராவுடன் ஹஜ்ஜையும் (நிறைவேற்றுவதை என்மீது) கடமையாக்கிக் கொண்டேன் என்பதற்கு உங்களை நான் சாட்சியாக்குகிறேன்!’ என்றார்கள். பிறகு, இரண்டிற்கும் (ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும்) சேர்த்து ஒரே வலம்வந்தார்கள். அதுவே (இரண்டிற்கும்) போதுமானது எனக் கருதினார்கள்; (பலிப் பிராணியை) பலியிடவும் செய்தார்கள்.
Book : 27
بَابُ مَنْ قَالَ: لَيْسَ عَلَى المُحْصَرِ بَدَلٌ
وَقَالَ رَوْحٌ: عَنْ شِبْلٍ، عَنْ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: «إِنَّمَا البَدَلُ عَلَى مَنْ نَقَضَ حَجَّهُ بِالتَّلَذُّذِ، فَأَمَّا مَنْ حَبَسَهُ عُذْرٌ أَوْ غَيْرُ ذَلِكَ، فَإِنَّهُ يَحِلُّ وَلاَ يَرْجِعُ، وَإِنْ كَانَ مَعَهُ هَدْيٌ وَهُوَ مُحْصَرٌ نَحَرَهُ، إِنْ كَانَ لاَ يَسْتَطِيعُ أَنْ يَبْعَثَ بِهِ، وَإِنِ اسْتَطَاعَ أَنْ يَبْعَثَ بِهِ لَمْ يَحِلَّ حَتَّى يَبْلُغَ الهَدْيُ مَحِلَّهُ» وَقَالَ مَالِكٌ وَغَيْرُهُ: يَنْحَرُ هَدْيَهُ وَيَحْلِقُ فِي أَيِّ مَوْضِعٍ كَانَ، وَلاَ قَضَاءَ عَلَيْهِ، لِأَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابَهُ بِالحُدَيْبِيَةِ نَحَرُوا وَحَلَقُوا وَحَلُّوا مِنْ كُلِّ شَيْءٍ قَبْلَ الطَّوَافِ، وَقَبْلَ أَنْ يَصِلَ الهَدْيُ إِلَى البَيْتِ، ثُمَّ لَمْ يُذْكَرْ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ أَحَدًا أَنْ يَقْضُوا شَيْئًا، وَلاَ يَعُودُوا لَهُ وَالحُدَيْبِيَةُ خَارِجٌ مِنَ الحَرَمِ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ
أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ حِينَ خَرَجَ إِلَى مَكَّةَ مُعْتَمِرًا فِي الفِتْنَةِ: «إِنْ صُدِدْتُ عَنِ البَيْتِ صَنَعْنَا كَمَا صَنَعْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَهَلَّ بِعُمْرَةٍ مِنْ أَجْلِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ أَهَلَّ بِعُمْرَةٍ عَامَ الحُدَيْبِيَةِ»، ثُمَّ إِنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ نَظَرَ فِي أَمْرِهِ، فَقَالَ: مَا أَمْرُهُمَا إِلَّا وَاحِدٌ، فَالْتَفَتَ إِلَى أَصْحَابِهِ فَقَالَ: مَا أَمْرُهُمَا إِلَّا وَاحِدٌ، أُشْهِدُكُمْ أَنِّي قَدْ أَوْجَبْتُ الحَجَّ مَعَ العُمْرَةِ، ثُمَّ طَافَ لَهُمَا طَوَافًا وَاحِدًا، وَرَأَى أَنَّ ذَلِكَ مُجْزِيًا عَنْهُ وَأَهْدَى
சமீப விமர்சனங்கள்