பாடம் : 39 நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் (ஒரு நோன்பிற்கு பதிலாக) ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும்!என்ற (2:184ஆவது) இறைவசனத்தை,
ரமளான் மாதம் எத்தகையதென்றால், அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழியின் தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை-தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமானது அல்குர்ஆன் இறக்கியருளப்பெற்றது! ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அதில் நோன்பு நோற்க வேண்டும்! எனினும், எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்! அல்லாஹ் உங்களுக்கு இலகுவை விரும்புகிறானே தவிர, உங்களுக்குச் சிரமத்தை(த்தர) அவன் விரும்பவில்லை! (விடுபட்டுப்போன நோன்பு நாட்களின்) எண்ணிக்கையைப் பூர்த்தி செய்யவும் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி, நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இப்படிக் கட்டளையிடுகிறான்!)
என்ற (2:185ஆவது) இறைவசனம் மாற்றிவிட்டது! என இப்னு உமர் (ரலி), சலமா பின் அக்வஉ(ரலி) ஆகியோர் கூறுகின்றனர்.
(ரமளான் நோன்பு பற்றிய வசனம் அருளப்பெற்றதும் அது நபித்தோழர்களுக்குச் சிரமமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் ஓர் ஏழைக்கு உணவளிப்பவர் நோன்பிருக்க சக்தியிருந்தும் நோன்பை விட்டு விடுபவராக இருந்தார். தொடக்கத்தில் இவ்வாறு அவர்களுக்குச் சலுகை வழங்கப்பட்டது.
நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்குச் சிறந்ததாகும்! என்ற (2:184ஆவது) வசனம் இச்சலுகையை மாற்றி விட்டது.
நோன்பு நோற்குமாறு இவ்வசனத்தின் மூலம் அவர்கள் கட்டளையிடப்பட்டனர்! என்று பல நபித்தோழர்கள் கூறியதாக இப்னு அபீ லைலா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்)
நாஃபிவு(ரஹ்) அறிவித்தார்.
‘ரமளான் (நோன்பைவிட்டதற்குப்) பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்!’ என்ற வசனத்தை இப்னு உமர்(ரலி) ஓதிவிட்டு, இந்த வசனம் கூறும் சட்டம் மாற்றப்பட்டுவிட்டது!’ என்று கூறினார்.
Book : 30
بَابُ {وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ} [البقرة: 184] قَالَ ابْنُ عُمَرَ، وَسَلَمَةُ بْنُ الأَكْوَعِ: نَسَخَتْهَا {شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ القُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الهُدَى وَالفُرْقَانِ، فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ، يُرِيدُ اللَّهُ بِكُمُ اليُسْرَ وَلاَ يُرِيدُ بِكُمُ العُسْرَ، وَلِتُكْمِلُوا العِدَّةَ، وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ} [البقرة: 185]
وَقَالَ ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا عَمْرُو بْنُ مُرَّةَ، حَدَّثَنَا ابْنُ أَبِي لَيْلَى، حَدَّثَنَا أَصْحَابُ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: نَزَلَ رَمَضَانُ فَشَقَّ عَلَيْهِمْ، فَكَانَ مَنْ أَطْعَمَ كُلَّ يَوْمٍ مِسْكِينًا تَرَكَ الصَّوْمَ مِمَّنْ يُطِيقُهُ، وَرُخِّصَ لَهُمْ فِي ذَلِكَ، فَنَسَخَتْهَا: {وَأَنْ تَصُومُوا خَيْرٌ لَكُمْ} [البقرة: 184] فَأُمِرُوا بِالصَّوْمِ
حَدَّثَنَا عَيَّاشٌ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا
قَرَأَ: (فِدْيَةُ طَعَامِ مَسَاكِينَ) قَالَ: «هِيَ مَنْسُوخَةٌ»
சமீப விமர்சனங்கள்