பாடம் : 19 விற்பவரும் வாங்குபவரும் பொருட்களில் உள்ள குறைகளை மறைக்காமல் தெளிவுபடுத்தி நலம் நாடுதல்.
(என்னிடமிருந்து ஓர் அடிமையை வாங்கிய) நபி (ஸல்) அவர்கள், அதாஉ பின் காலித் என்பாரிடமிருந்து அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் இவரை விலைக்கு வாங்கிக் கொண்டார்; இது ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமிடம் செய்த வியாபாரமாகும்; இதில் எந்தக் குறையுமில்லை; இவரிடம் கெட்ட குணமில்லை, குற்றம்புரியும் தன்மையுமில்லை என்று எனக்கு எழுதித் தந்தார்கள்.
குற்றம் புரிதல் என்று இங்குக் கூறப்படுவது விபசாரம் செய்தல், திருடுதல், எஜமானரைவிட்டு ஓடுதல் ஆகியவையே! என்று கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
சில தரகர்கள் தொழுவங்களுக்கு குராசான் தொழுவம் சஜஸ்தான் தொழுவம் என்று பெயரிட்டுக் கொண்டு, இது நேற்று குராசானிலிருந்து வந்தது! இது இன்று சஜஸ்தானிலிருந்து வந்தது! என்று கூறுவார்கள். இது பற்றி இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது அவர்கள் இதைக் கடுமையாக ஆட்சேபித்தார்கள்.
விற்பனை செய்யும் பொருளில் குறை இருப்பதை அறிந்திருக்கின்ற எவரும் அதைத் தெளிவுபடுத்தாமல் விற்பது ஹலால் (அனுமதிக்கப்பட்டது) அல்ல! என்று உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசிக் குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத் (அருள் வளம்) அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்!’ என ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார்.
Book : 34
بَابُ إِذَا بَيَّنَ البَيِّعَانِ وَلَمْ يَكْتُمَا وَنَصَحَا
وَيُذْكَرُ عَنِ العَدَّاءِ بْنِ خَالِدٍ، قَالَ: كَتَبَ لِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذَا مَا اشْتَرَى مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مِنَ العَدَّاءِ بْنِ خَالِدٍ، بَيْعَ المُسْلِمِ مِنَ المُسْلِمِ، لاَ دَاءَ وَلاَ خِبْثَةَ، وَلاَ غَائِلَةَ» وَقَالَ قَتَادَةُ: «الغَائِلَةُ الزِّنَا، وَالسَّرِقَةُ، وَالإِبَاقُ»
وَقِيلَ لِإِبْرَاهِيمَ: إِنَّ بَعْضَ النَّخَّاسِينَ يُسَمِّي آرِيَّ خُرَاسَانَ، وَسِجِسْتَانَ، فَيَقُولُ: جَاءَ أَمْسِ مِنْ خُرَاسَانَ، جَاءَ اليَوْمَ مِنْ سِجِسْتَانَ، فَكَرِهَهُ كَرَاهِيَةً شَدِيدَةً
وَقَالَ عُقْبَةُ بْنُ عَامِرٍ: «لاَ يَحِلُّ لِامْرِئٍ يَبِيعُ سِلْعَةً يَعْلَمُ أَنَّ بِهَا دَاءً إِلَّا أَخْبَرَهُ»
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ صَالِحٍ أَبِي الخَلِيلِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الحَارِثِ، رَفَعَهُ إِلَى حَكِيمِ بْنِ حِزَامٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
البَيِّعَانِ بِالخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا، – أَوْ قَالَ: حَتَّى يَتَفَرَّقَا – فَإِنْ صَدَقَا وَبَيَّنَا بُورِكَ لَهُمَا فِي بَيْعِهِمَا، وَإِنْ كَتَمَا وَكَذَبَا مُحِقَتْ بَرَكَةُ بَيْعِهِمَا
சமீப விமர்சனங்கள்