தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2328

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 8

விளைச்சலில் ஒரு பாதியைக் கொண்டு, அல்லது அதை விடக் கூடுதல் குறைவான பாகத்தைக் கொண்டு குத்தகை ஒப்பந்தம் செய்வது செல்லும்.

அபூஜஅஃபர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

தாயகம் துறந்து வந்த முஹாஜிர்கள் (மக்கா வாசிகள்) அனைவருமே விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கையோ நான்கில் ஒரு பங்கையோ நில உரிமையாளரிட மிருந்து(தம் உழைப்புக்கான ஊதியமாகப்) பெற்றுக் கொள்வது என்னும் நிபந்தனையின் பேரில் விவசாயம் செய்து வந்தார்கள்.

அலீ, சஅது பின் மாலிக், அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ஆகியோரும் உமர் பின் அப்தில் அஸீஸ், காஸிம், உர்வா பின் ஸுபைர், அபூபக்ரின் குடும்பத்தார், உமரின் குடும்பத்தார், அலீயின் குடும்பத்தார் மற்றும் இப்னு சீரீன் ஆகியோரும் கூட (இப்படி விளைச்சலின் ஒரு பங்கு ஊதியமாக வழங்கப்படும் என்னும் நிபந்தனையின் பேரில் தான்) குத்தகை முறையிலான விவசாயம் செய்து வந்தார்கள்.

அப்துர் ரஹ்மான் பின் அஸ்வத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

நான் (என் தந்தையின் சகோதர ரான) அப்துர் ரஹ்மான் பின் யஸீத் அவர்களுடன் விவசாயத்தில் கூட்டாளியாக இருந்தேன். தம் தரப்பிலிருந்து விதைகளைக் கொடுத்தால் விளைச்சலின் பாதியைத் தமக்குக் கொடுத்து விட வேண்டும்; விவசாயியே விதைகளைக் கொண்டு வந்து விதைத்தால் அந்த விவசாயிக்கு விளைச் சலின் இன்ன பங்கு (பாதிக்கும் மேல்) கிடைக்கும் என்னும் நிபந்தனையின் பேரில், உமர் (ரலி) அவர்கள் நிலத்தைக் குத்தகைக்கு விட்டு வந்தார்கள்.

நிலம் ஒருவருக்குச் சொந்தமாய் இருந்து நில உரிமையாளர், குத்தகைக்கு எடுத்தவர் இருவருமே அதற்காகச் செல வழித்து, கிடைக்கின்ற விளைச்ச-ல் இரு வரும் பங்கு போட்டுக் கொள்வதில் தவறில்லை என்று ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். இமாம் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களும் இதே கருத்தைத் தான் கொண்டுள்ளார்கள்.

ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள், பருத்தி விளைச்ச-ன் போது, ஆளுக்குப் பாதியாகப் பிரித்துக் கொள்வது என்னும் நிபந்தனையின் பேரில் பருத்தி விவசாயத்திற்காக, குத்தகை ஒப்பந்தம் செய்து கொள்வதில் தவறேதுமில்லை என்று கூறினார்கள்.

நெய்த துணியின் மூன்றில் ஒரு பங்கையோ, நான்கில் ஒரு பங்கையோ அல்லது அது போன்று வேறெந்தப் பங்கையுமோ நெசவுக் கூலியாக நெசவாளிக்குக் கொடுப்பது என்ற அடிப் படையில் துணி நெய்வதற்கான பாவு இழைகளை நெசவாளிக்குக் கொடுப்பதில் தவறில்லை என்று இப்ராஹீம், இப்னு சீரீன், அதாஉ, ஹகம், ஸுஹ்ரீ மற்றும் கதாதா (ரஹ்-அலைஹிம்) ஆகியோர் கூறுகின்றனர்.

(சுமை சுமக்கும்) கால்நடைகளை, அவை சுமக்கின்ற(உற்பத்திப்) பொருட் களில் மூன்றில் ஒரு பங்கை அல்லது நான்கில் ஒரு பங்கை அதன் உரிமையாளரிடம் கொடுத்து விடுவது என்னும் நிபந்தனையின் பேரில், ஒரு குறிப்பிட்ட காலத் தவணைக்குக் குத்தகைக்கு எடுத்துக் கொள்வதில் தவறில்லை என்று மஅமர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.


 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் கைபரில் இருந்த மக்களுடன், அங்குள்ள மரங்களில் விளையும் கனிகள், நிலத்தில் விளையும் தானியங்கள் ஆகியவற்றில் பாதியைக் கொடுத்து விட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் (கைபரின் நிலங்களையும் மரங்களையும் அம்மக்கள் விவசாயத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதியளித்து) ஒப்பந்தம் செய்தார்கள்.

இந்த நிலங்கள் மற்றும் மரங்களின் விளைச்சலிருந்து, நபி (ஸல்) அவர்கள், தம் மனைவிமார்களுக்கு எண்பது வஸக்குகள் பேரீச்சம் பழமும், இருபது வஸக்குகள் வாற்கோதுமையும் ஆக, நூறு வஸக்குகள் கொடுத்து வந்தனர். உமர் (ரலி) (கலீஃபாவாக வந்த போது) கைபர் நிலங்களைப் பங்கிட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களுக்கு, அவர்கள் தங்கள் பங்காக நிலத்தையும் நீரையும் மட்டும் எடுத்துக் கொள்வது, அல்லது முன்பு நடைபெற்று வந்த வழக்கத்தின்படியே, நூறு வஸக்குகளைத் தங்கள் பங்காகப் பெற்றுக் கொள்வது என்ற இரண்டில் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ள உரிமையளித்தார்கள்.

அவர்களில் சிலர் நிலத்தைத் தமக்காகப் பெற்றனர். சிலர் (முன்பு கிடைத்து வந்தபடி) வஸக்குகளையே தொடர்ந்து பெற்றனர். அன்னை ஆயிஷா (ரலி) நிலத்தைப் பெற்றார்கள்.

அத்தியாயம்: 41

(புகாரி: 2328)

بَابُ المُزَارَعَةِ بِالشَّطْرِ وَنَحْوِهِ

وَقَالَ قَيْسُ بْنُ مُسْلِمٍ: عَنْ أَبِي جَعْفَرٍ، قَالَ: «مَا بِالْمَدِينَةِ أَهْلُ بَيْتِ هِجْرَةٍ إِلَّا يَزْرَعُونَ عَلَى الثُّلُثِ وَالرُّبُعِ» وَزَارَعَ عَلِيٌّ، وَسَعْدُ بْنُ مَالِكٍ، وَعَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ وَعُمَرُ بْنُ عَبْدِ العَزِيزِ، وَالقَاسِمُ، وَعُرْوَةُ، وَآلُ أَبِي بَكْرٍ، وَآلُ عُمَرَ، وَآلُ عَلِيٍّ، وَابْنُ سِيرِينَ وَقَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ الأَسْوَدِ: «كُنْتُ أُشَارِكُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ يَزِيدَ فِي الزَّرْعِ» وَعَامَلَ عُمَرُ، «النَّاسَ عَلَى إِنْ جَاءَ عُمَرُ بِالْبَذْرِ مِنْ عِنْدِهِ فَلَهُ الشَّطْرُ، وَإِنْ جَاءُوا بِالْبَذْرِ فَلَهُمْ كَذَا» وَقَالَ الحَسَنُ: «لاَ بَأْسَ أَنْ تَكُونَ الأَرْضُ لِأَحَدِهِمَا، فَيُنْفِقَانِ جَمِيعًا، فَمَا خَرَجَ فَهُوَ بَيْنَهُمَا» وَرَأَى ذَلِكَ الزُّهْرِيُّ وَقَالَ الحَسَنُ: «لاَ بَأْسَ أَنْ يُجْتَنَى القُطْنُ عَلَى النِّصْفِ» وَقَالَ إِبْرَاهِيمُ، وَابْنُ سِيرِينَ، وَعَطَاءٌ، وَالحَكَمُ، وَالزُّهْرِيُّ، وَقَتَادَةُ: «لاَ بَأْسَ أَنْ يُعْطِيَ الثَّوْبَ بِالثُّلُثِ أَوِ الرُّبُعِ» وَنَحْوِهِ وَقَالَ مَعْمَرٌ: «لاَ بَأْسَ أَنْ تَكُونَ المَاشِيَةُ عَلَى الثُّلُثِ، وَالرُّبُعِ إِلَى أَجَلٍ مُسَمًّى»

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ المُنْذِرِ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَخْبَرَهُ

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَلَ خَيْبَرَ بِشَطْرِ مَا يَخْرُجُ مِنْهَا مِنْ ثَمَرٍ أَوْ زَرْعٍ، فَكَانَ يُعْطِي أَزْوَاجَهُ مِائَةَ وَسْقٍ، ثَمَانُونَ وَسْقَ تَمْرٍ، وَعِشْرُونَ وَسْقَ شَعِيرٍ»، فَقَسَمَ عُمَرُ خَيْبَرَ «فَخَيَّرَ أَزْوَاجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنْ يُقْطِعَ لَهُنَّ مِنَ المَاءِ وَالأَرْضِ، أَوْ يُمْضِيَ لَهُنَّ»، فَمِنْهُنَّ مَنِ اخْتَارَ الأَرْضَ، وَمِنْهُنَّ مَنِ اخْتَارَ الوَسْقَ، وَكَانَتْ عَائِشَةُ اخْتَارَتِ الأَرْضَ


Bukhari-Tamil-2328.
Bukhari-TamilMisc-2328.
Bukhari-Shamila-2328.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.