பாடம் : 14 திவாலாகி விட்டவரிடம்-ஏற்கனவே ஒரு பொருளைக் கடனுக்கு விற்றவர் அப்பொருளைக் கண்டாலோ,அதே போல கடன் கொடுத்தவர் அந்தக் கடன் தொகையைக் கண்டாலோ அல்லது அடைக்கலப் பொருளைக் கொடுத்தவர் அப்பொருளைக் கண்டாலோ அதை எடுத்துக் கொள்ள மற்ற கடன் காரர்களை விட அவருக்கே அதிக உரிமையுண்டு.
ஒருவர் திவாலாகி அது (நீதி மன்றத்தில்) நிரூபணமாகியும் விட்டால் அவர் ஓர் அடிமையை விடுதலை செய்தாலும் அது செல்லுபடியாகாது. அவர் எதையும் விற்றாலும் வாங்கினாலும் செல்லுபடியாகாது ; என்று ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
ஒருவர் திவாலாவதற்கு முன்பே அவரிடமிருந்து தனக்குரிய பொருளை யார் திருப்பி வாங்கிக் கொண்டாரோ, அவருக்கே அப்பொருள் சொந்தமாகும். மேலும், திவாலாகிப் போனவரிடம் தன்னுடைய பொருளை அப்படியே ஒருவர் காண்பாராயின் அதை எடுத்துக் கொள்ள (மற்ற கடன்காரர்களை விட) அவரே அதிக உரிமையுடையவர் என்று உஸ்மான் (ரலி) அவர்கள் தீர்ப்பளித்தார்கள். இதை சயீத் பின் முஸய்யப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் திவாலான ஒரு மனிதரிடம் தன் பொருளை அப்படியே (கொடுத்தபோது இருந்தபடியே) காண்பாராயின், அதை எடுத்துக் கொள்ள மற்ற கடன்காரர்களை விட அவருக்கே அதிக உரிமை இருக்கிறது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 43
بَابٌ: إِذَا وَجَدَ مَالَهُ عِنْدَ مُفْلِسٍ فِي البَيْعِ، وَالقَرْضِ وَالوَدِيعَةِ، فَهُوَ أَحَقُّ بِهِ
وَقَالَ الحَسَنُ: «إِذَا أَفْلَسَ وَتَبَيَّنَ، لَمْ يَجُزْ عِتْقُهُ وَلاَ بَيْعُهُ وَلاَ شِرَاؤُهُ»
وَقَالَ سَعِيدُ بْنُ المُسَيِّبِ: «قَضَى عُثْمَانُ مَنِ اقْتَضَى مِنْ حَقِّهِ قَبْلَ أَنْ يُفْلِسَ فَهُوَ لَهُ، وَمَنْ عَرَفَ مَتَاعَهُ بِعَيْنِهِ فَهُوَ أَحَقُّ بِهِ»
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ: أَخْبَرَنِي أَبُو بَكْرِ بْنُ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ العَزِيزِ، أَخْبَرَهُ أَنَّ أَبَا بَكْرِ بْنَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الحَارِثِ بْنِ هِشَامٍ أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – أَوْ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – يَقُولُ
«مَنْ أَدْرَكَ مَالَهُ بِعَيْنِهِ عِنْدَ رَجُلٍ – أَوْ إِنْسَانٍ – قَدْ أَفْلَسَ فَهُوَ أَحَقُّ بِهِ مِنْ غَيْرِهِ»
சமீப விமர்சனங்கள்