பாடம் : 10 உரிமையில்லாதவர் கையில் சிக்கி வீணாகி விடாமல் இருப்பதற்காக, ஒருவர் தாம் கண்டெடுத்த பொருளைத் தம்மிடமே வைத்துக் கொள்ளலாமா?
சுவைத் இப்னு கஃபலா(ரஹ்) கூறினார்.
நான் சல்மான் இப்னு ரபீஆ அல்பாஹிலீ(ரலி) அவர்களுடனும், ஸைத் இப்னு ஸூஹான்(ரலி) அவர்களுடனும் ஒரு போரில் பங்கெடுத்தபோது சாட்டை ஒன்றைக் கண்டேன். (என் தோழர்கள்) இருவரும், ‘அதைப் போட்டு விடு’ என்று கூறினார்கள். நான், ‘இல்லை. இதன் உரிமையாளரைக் கண்டால் (இதைக் கொடுத்து விடுவேன்.) இல்லையென்றால் இதைப் பயன்படுத்திக் கொள்வேன்’ என்று கூறினேன்.
நான் போரிலிருந்து திரும்பியபோது ஹஜ் செய்தேன். அப்போது மதீனா வழியாக நான் சென்றேன். அப்போது உபை இப்னு கஅப்(ரலி) அவர்களிடம் இது பற்றிக் கேட்டேன். அவர்கள் கூறினார்கள். நான், நபி(ஸல்) அவர்கள், ‘ஒரு வருட காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்புச் செய்’ என்று கூறினார்கள். ஒரு வருடகாலம் அதைப் பற்றி அறிவிப்புச் செய்தேன். பிறகு மீண்டும் அவர்களிடம் சென்றேன். அப்போதும் அவர்கள், ‘ஒரு வருட காலத்திற்கு அறிவிப்புச் செய்’ என்று கூறினார்கள். அவ்வாறே நான் ஒரு வருட காலத்திற்கு அறிவிப்புச் செய்தேன். பிறகு திரும்பவும் அவர்களிடம் வந்தேன். அப்போதும் அவர்கள், ‘ஒரு வருட காலத்திற்கு அறிவிப்புச் செய்’ என்று கூறினார்கள். அவ்வாறே, நானும் ஒரு வருட காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்புச் செய்தேன்.
நான்காவது முறையாக, நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், ‘அதன் (பையிலுள்ள பணத்தின்) எண்ணிக்கையையும், முடிச்சையும், பையையும் அடையாளம் அறிந்து கொள். அதன் உரிமையாளர் வந்தால் அதை அவரிடம் கொடுத்துவிடு. இல்லையென்றால் அதை நீ பயன்படுத்திக்கொள்’ என்று கூறினார்கள்.
Book : 45
بَابٌ: هَلْ يَأْخُذُ اللُّقَطَةَ وَلاَ يَدَعُهَا تَضِيعُ حَتَّى لاَ يَأْخُذَهَا مَنْ لاَ يَسْتَحِقُّ
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، قَالَ: سَمِعْتُ سُوَيْدَ بْنَ غَفَلَةَ، قَالَ
كُنْتُ مَعَ سَلْمَانَ بْنِ رَبِيعَةَ وَزَيْدِ بْنِ صُوحَانَ فِي غَزَاةٍ، فَوَجَدْتُ سَوْطًا، فَقَالاَ لِي: أَلْقِهِ، قُلْتُ: لاَ، وَلَكِنْ إِنْ وَجَدْتُ صَاحِبَهُ، وَإِلَّا اسْتَمْتَعْتُ بِهِ، فَلَمَّا رَجَعْنَا حَجَجْنَا، فَمَرَرْتُ بِالْمَدِينَةِ، فَسَأَلْتُ أُبَيَّ بْنَ كَعْبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقَالَ: وَجَدْتُ صُرَّةً عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهَا مِائَةُ دِينَارٍ، فَأَتَيْتُ بِهَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «عَرِّفْهَا حَوْلًا» فَعَرَّفْتُهَا حَوْلًا، ثُمَّ أَتَيْتُ، فَقَالَ: «عَرِّفْهَا حَوْلًا» فَعَرَّفْتُهَا حَوْلًا، ثُمَّ أَتَيْتُهُ، فَقَالَ: «عَرِّفْهَا حَوْلًا» فَعَرَّفْتُهَا حَوْلًا، ثُمَّ أَتَيْتُهُ الرَّابِعَةَ: فَقَالَ: «اعْرِفْ عِدَّتَهَا، وَوِكَاءَهَا وَوِعَاءَهَا، فَإِنْ جَاءَ صَاحِبُهَا، وَإِلَّا اسْتَمْتِعْ بِهَا»
حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ: أَخْبَرَنِي أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ سَلَمَةَ، بِهَذَا قَالَ: فَلَقِيتُهُ بَعْدُ بِمَكَّةَ، فَقَالَ: لاَ أَدْرِي أَثَلاَثَةَ أَحْوَالٍ أَوْ حَوْلًا وَاحِدًا
சமீப விமர்சனங்கள்