தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2730

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 14 நிலக் குத்தகையின் போது நில உரிமையாளர், நான் விரும்பும் போது உன் ஒப்பந்தத்தை ரத்து செய்து விடுவேன் என்று நிபந்தனையிட்டால்… (செல்லும்.)

 இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

கைபர் வாசிகள் என் கைமூட்டுகளைப் பிசகச் செய்துவிட்டபோது என் தந்தை உமர்(ரலி) எழுந்து நின்று உரையாற்றினார்கள். அவ்வுரையில், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கைபர் பிரசேத்து யூதர்களிடம் அவர்களின் சொத்துகள் தொடர்பாக ஒப்பந்தம் செய்தார்கள். அப்போது, ‘அல்லாஹ் உங்களை இங்கு வசிக்கச் செய்யும் வரை நாம் உங்களை வசிக்க விடுவோம்’ என்று கூறினார்கள். (என்னுடைய மகன்) அப்துல்லாஹ் இப்னு உமர் அங்கேயிருந்த தன்னுடைய சொத்தைப் பார்ப்பதற்காகச் சென்றார். அவர் அன்றிரவு தாக்கப்பட்டார். அதனால் அவரின் இருகைகளின் மூட்டுகளும் இருகால்களின் மூட்டுகளும் பிசகிவிட்டன.

அங்கு அவர்களைத் தவிர வேறு பகைவர்கள் எவரும் இல்லை. அவர்கள் நம்முடைய பகைவர்களும் நம் சந்தேகத்திற்குரியவர்களும் ஆவர். அவர்களை நாடு கடத்தி விடுவதே பொறுத்தமென்று கருதுகிறேன்’ என்று கூறினார்கள். உமர்(ரலி) (யூதர்களை) நாடு கடத்துவதென்று இறுதி முடிவெடுத்துவிட்டபோது, (யூதர்களின் தலைவனான) அபுல் ஹுகைக் உடைய மகன்களில் ஒருவன் வந்து, ‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! எங்களை முஹம்மத்(ஸல்) அவர்கள் (கைபரிலேயே) வசிக்கச் செய்து, எங்கள் சொத்துகள் தொடர்பாக ஒப்பந்தமும் செய்த, அதை (நாங்கள் பேணி வந்தால் அங்கேயே தொடர்ந்து வசிக்கலாம் என்று) நிபந்தனையிட்டிருக்க, நீங்கள் எங்களை (அங்கிருந்து) வெளியேற்றுகிறீர்களா?’ என்று கேட்டான்.

அதற்கு உமர்(ரலி), ‘கைபரிலிருந்து நீ வெளியேற்றப்பட்டு, (நீண்ட கால்களும்) சகிப்புத் தன்மை(யும்) கொண்ட உன்னுடைய ஒட்டகம் உன்னைச் சுமந்துகொண்டு இரவுக்குப் பின் இரவாக நடந்து சென்று கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் உனக்கு எப்படி இருக்கும்?’ என்று இறைத்தூதர்(ஸல்) கூறியதை நான் மறந்து விட்டேன் என்று நினைக்கிறாயா?’ என்று கேட்டார்கள். அதற்கு அவன், ‘அது அபுல் காசிம் (முஹம்மத் – ஸல்) விளையாட்டாகக் கூறினார்கள்’ என்று சொன்னான்.

அதற்கு உமர்(ரலி), ‘பொய் சொன்னாய், அல்லாஹ்வின் பகைவனே!’ என்று கூறினார்கள். பிறகு, அந்த யூதர்களை உமர்(ரலி) நாடு கடத்திவிட்டார்கள். அவர்களுக்குக் கிடைத்திருந்த விளைச்சலின் விலையைப் பணமாகவும், ஒட்டகமாகவும், பொருட்களாகவும், ஒட்டகச் சேணங்களாகவும், கயிறுகளாகவும் அவர்களுக்குக் கொடுத்துவிட்டார்கள்.

இன்னோர் அறிவிப்பில் ஹம்மாது இப்னு ஸலமா(ரஹ்) நபி(ஸல்) அவர்கள் குறித்த அறிவிப்பில் மட்டும் சுருக்கமாக கூறுகிறார்கள். (உமர்(ரலி) குறித்த அறிவிப்பை சுருக்கமாக்கவில்லை.
Book : 54

(புகாரி: 2730)

بَابُ إِذَا اشْتَرَطَ فِي المُزَارَعَةِ إِذَا شِئْتُ أَخْرَجْتُكَ

حَدَّثَنَا أَبُو أَحْمَدَ مَرَّارُ بْنُ حَمُّويَهْ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى أَبُو غَسَّانَ الكِنَانِيُّ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ

لَمَّا فَدَعَ أَهْلُ خَيْبَرَ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، قَامَ عُمَرُ خَطِيبًا، فَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ عَامَلَ يَهُودَ خَيْبَرَ عَلَى أَمْوَالِهِمْ، وَقَالَ: «نُقِرُّكُمْ مَا أَقَرَّكُمُ اللَّهُ» وَإِنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ خَرَجَ إِلَى مَالِهِ هُنَاكَ، فَعُدِيَ عَلَيْهِ مِنَ اللَّيْلِ، فَفُدِعَتْ يَدَاهُ وَرِجْلاَهُ، وَلَيْسَ لَنَا هُنَاكَ عَدُوٌّ غَيْرَهُمْ، هُمْ عَدُوُّنَا وَتُهْمَتُنَا وَقَدْ رَأَيْتُ إِجْلاَءَهُمْ، فَلَمَّا أَجْمَعَ عُمَرُ عَلَى ذَلِكَ أَتَاهُ أَحَدُ بَنِي أَبِي الحُقَيْقِ، فَقَالَ: يَا أَمِيرَ المُؤْمِنِينَ، أَتُخْرِجُنَا وَقَدْ أَقَرَّنَا مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعَامَلَنَا عَلَى الأَمْوَالِ وَشَرَطَ ذَلِكَ لَنَا، فَقَالَ عُمَرُ: أَظَنَنْتَ أَنِّي نَسِيتُ قَوْلَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَيْفَ بِكَ إِذَا أُخْرِجْتَ مِنْ خَيْبَرَ تَعْدُو بِكَ قَلُوصُكَ لَيْلَةً بَعْدَ لَيْلَةٍ» فَقَالَ: كَانَتْ هَذِهِ هُزَيْلَةً مِنْ أَبِي القَاسِمِ، قَالَ: كَذَبْتَ يَا عَدُوَّ اللَّهِ، فَأَجْلاَهُمْ عُمَرُ، وَأَعْطَاهُمْ قِيمَةَ مَا كَانَ لَهُمْ مِنَ الثَّمَرِ، مَالًا وَإِبِلًا، وَعُرُوضًا مِنْ أَقْتَابٍ وَحِبَالٍ وَغَيْرِ ذَلِكَ

رَوَاهُ حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، أَحْسِبُهُ عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، عَنْ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اخْتَصَرَهُ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.