பாடம் : 10 ஒருவர் தன் உறவினர்களுக்கு வக்ஃபு அல்லது மரண சாசனம் செய்வதும், உறவினர் என்போர் யார், யார்? என்பதும்.
நபி (ஸல்) அவர்கள் அபூதல்ஹா (ரலி) அவர்களிடம், அதை (உன் தோட்டத்தை) உன் ஏழை உறவினர்களுக்குக் கொடுத்து விடு என்று கூறினார்கள். ஆகவே, அபூதல்ஹா (ரலி) அவர்கள் அதை ஹஸ்ஸான் (ரலி) அவர்களுக்கும், உபை பின் கஅப் (ரலி) அவர்களுக்கும் கொடுத்து விட்டார்கள் என்று அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து சாபித் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதே போன்ற மற்றோர் அறிவிப்பை அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே சுமாமா (ரஹ்) அவர்களும் அறிவித்துள்ளார்கள். அதில் இடம் பெற்றுள்ளதாவது: உன் ஏழை உறவினர்களுக்கு அதைக் கொடுத்து விடு என்று நபி (ஸல்) அவர்கள் (அபூதல்ஹா (ரலி) அவர்களிடம்) கூறினார்கள். ஆகவே, அவர் அதை ஹஸ்ஸான் (ரலி) அவர்களுக்கும், உபை பின் கஅப் (ரலி) அவர்களுக்கும் கொடுத்து விட்டார். அவர்களிருவரும் அபூதல்ஹாவுக்கு என்னை விட நெருக்கமான உறவினர்களாக இருந்தனர்.
அபூதல்ஹா (ரலி) அவர்களுக்கும் ஹஸ்ஸான் (ரலி) மற்றும் உபை பின் கஅப் (ரலி) ஆகியோருக்குமிடையிலான உறவு முறை வருமாறு: அபூதல்ஹா (ரலி) அவர்களின் இயற்பெயர் ஸைத் என்பதாகும். ஸைத், ஸஹ்-ன் மகனாவார். ஸஹ்ல், அஸ்வத் என்பவரின் மகனும் அஸ்வத், ஹராம் என்பவரின் மகனும் ஹராம், அம்ரு என்பவரின் மகனும் அம்ரு,ஸைது மனாத் என்பவரின் மகனும் ஸைது மனாத் அதீ என்பவரின் மகனும் அதீ, அம்ரு என்பவரின் மகனும் அம்ரு, மாலிக் என்பவரின் மகனும் மாலிக், நஜ்ஜார் என்பவரின் மகனும் ஆவார்கள். ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் சாபித் என்பவரின் மகனும் சாபித், முன்திர் என்பவரின் மகனும் முன்திர்,ஹராம் என்பவரின் மகனும் ஆவார்கள். ஆக, (முப்பாட்டனான) மூன்றாவது தந்தை ஹராம் அவர்களிடம் இருவரின் குடும்ப உறவும் ஒன்று சேர்கிறது. அந்த (முப்பாட்டனான) ஹராம், அம்ருடைய மகனும் அம்ரு, ஸைது மனாத்துடைய மகனும், ஸைது மனாத், அதீயின் மகனும் அதீ, அம்ருடைய மகனும் அம்ரு, மாலிக் உடைய மகனும் மாலிக், நஜ்ஜாருடைய மகனும் ஆவார்கள்.
இந்த அம்ரு தான் – நஜ்ஜாரின் மகனான மாலிக்கின் மகன் அம்ரு தான் -ஹஸ்ஸான் (ரலி), அபூதல்ஹா (ரலி), உபை பி ன் கஅப் (ரலி) ஆகிய மூவரையும் ஒன்று சேர்க்கும் தந்தையாவார். இவர் உபை பின் கஅப் (ரலி) அவர்களின் (தந்தை, பாட்டன் ஆகிய மேல் நோக்கிய உறவு முறை வரிசையில்) ஆறாவது தந்தையாக (முப்பாட்டனுக்கு முப் பாட்டனாக) வருகிறார். உபை (ரலி) அவர்கள், கஅபு அவர்களின் மகனும் கஅபு, கைஸ் உடைய மகனும் கைஸ், உபைத் உடைய மகனும் உபைத், ஸைத் உடைய மகனும் ஸைத், முஆவியாவின் மகனும் முஆவியா,அம்ருடைய மகனும் அம்ரு, மாலிக்கின் மகனும் மாலிக், நஜ்ஜார் உடைய மகனும் ஆவார்கள். ஆக, அம்ரு பின் மாலிக் அவர்கள் தாம் ஹஸ்ஸான் (ரலி), அபூதல்ஹா (ரலி), உபை பின் கஅப் (ரலி) ஆகிய மூவரையும் (உறவு முறையில்) ஒன்றிணைப்பவர் ஆவார்.
ஒருவன், தன் உறவினர்களுக்கு மரண சாசனம் செய்ய வேண்டுமென்றால் அவனையும் அவர்களையும் இணைக்கின்ற முஸ்லிமான பாட்டனார் அல்லது முப்பாட்டனார் ஒருவர் இருக்க வேண்டும் (இல்லை யென்றால் மரண சாசனம் செய்யக் கூடாது) என்று சிலர் கூறினர்.
அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் அபூ தல்ஹா(ரலி) அவர்களிடம், ‘நீ அதை (உன் தோட்டத்தை) உன் உறவினர்களிடையே பங்கிட்டுக் கொடுத்து விடுவதை நான் பொறுத்தமானதாகக் கருதுகிறேன்’ என்று கூறினார்கள். அதற்கு அபூ தல்ஹா(ரலி), ‘அவ்வாறே செய்கிறேன், இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறிவிட்டு, தன்னுடைய (நெருங்கிய) உறவினர்களிடையேயும், தன் தந்தையின் உடன் பிறந்தார் மக்களிடையேயும் பங்கிட்டுவிட்டார்.
‘(நபியே!) நீங்கள் உங்கள் நெருங்கிய உறவினர்களை அச்சுறுத்தி எச்சரியுங்கள்’ என்னும் (திருக்குர்ஆன் இறைவசனம் அருளப்பட்டபோது நபி(ஸல்) அவர்கள், ‘பனூ ஃபிஹ்ரு குடும்பத்தாரே! பனூ அதீயே!’ என்று குறைஷிக் குலத்தாரின் பெரும் பெரும் (கிளையினர்) குடும்பத்தினரை நோக்கி அழைக்கலானார்கள்’ என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.
‘இந்த (திருக்குர்ஆன் 26:214) இறைவசனம் அருளப்பட்டபோது நபி(ஸல்) அவர்கள், ‘குறைஷிக் குலத்தாரே!’ என்று அழைத்து, (இஸ்லாமியச் செய்தியை எடுத்துரைத்து) எச்சரித்தார்கள்’ என்று அபூ ஹுரைரா(ரலி) கூறினார்.
Book : 55
بَابُ إِذَا وَقَفَ أَوْ أَوْصَى لِأَقَارِبِهِ وَمَنِ الأَقَارِبُ
وَقَالَ ثَابِتٌ: عَنْ أَنَسٍ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَبِي طَلْحَةَ: «اجْعَلْهَا لِفُقَرَاءِ أَقَارِبِكَ» فَجَعَلَهَا لِحَسَّانَ، وَأُبَيِّ بْنِ كَعْبٍ وَقَالَ الأَنْصَارِيُّ: حَدَّثَنِي أَبِي، عَنْ ثُمَامَةَ، عَنْ أَنَسٍ، مِثْلَ حَدِيثِ ثَابِتٍ، قَالَ: «اجْعَلْهَا لِفُقَرَاءِ قَرَابَتِكَ»، قَالَ أَنَسٌ: فَجَعَلَهَا لِحَسَّانَ، وَأُبَيِّ بْنِ كَعْبٍ وَكَانَا أَقْرَبَ إِلَيْهِ مِنِّي «وَكَانَ قَرَابَةُ حَسَّانَ، وَأُبَيٍّ مِنْ أَبِي طَلْحَةَ وَاسْمُهُ زَيْدُ بْنُ سَهْلِ بْنِ الأَسْوَدِ بْنِ حَرَامِ بْنِ عَمْرِو بْنِ زَيْدِ مَنَاةَ بْنِ عَدِيِّ بْنِ عَمْرِو بْنِ مَالِكِ بْنِ النَّجَّارِ، وَحَسَّانُ بْنُ ثَابِتِ بْنِ المُنْذِرِ بْنِ حَرَامٍ، فَيَجْتَمِعَانِ إِلَى حَرَامٍ وَهُوَ الأَبُ الثَّالِثُ، وَحَرَامُ بْنُ عَمْرِو بْنِ زَيْدِ مَنَاةَ بْنِ عَدِيِّ بْنِ عَمْرِو بْنِ مَالِكِ بْنِ النَّجَّارِ، فَهُوَ يُجَامِعُ حَسَّانَ، وَأَبَا طَلْحَةَ وَأُبَيًّا إِلَى سِتَّةِ آبَاءٍ، إِلَى عَمْرِو بْنِ مَالِكٍ وَهُوَ أُبَيُّ بْنُ كَعْبِ بْنِ قَيْسِ بْنِ عُبَيْدِ بْنِ زَيدِ بْنِ مُعَاوِيَةَ بْنِ عَمْرِو بْنِ مَالِكِ بْنِ النَّجَّارِ، فَعَمْرُو بْنُ مَالِكٍ يَجْمَعُ حَسَّانَ وَأَبَا طَلْحَةَ وَأُبَيًّا» وَقَالَ بَعْضُهُمْ: إِذَا أَوْصَى لِقَرَابَتِهِ فَهُوَ إِلَى آبَائِهِ فِي الإِسْلاَمِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، أَنَّهُ سَمِعَ أَنَسًا رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ
قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَبِي طَلْحَةَ: «أَرَى أَنْ تَجْعَلَهَا فِي الأَقْرَبِينَ»، قَالَ أَبُو طَلْحَةَ: أَفْعَلُ يَا رَسُولَ اللَّهِ، فَقَسَمَهَا أَبُو طَلْحَةَ فِي أَقَارِبِهِ، وَبَنِي عَمِّهِ، وَقَالَ ابْنُ عَبَّاسٍ: لَمَّا نَزَلَتْ: {وَأَنْذِرْ عَشِيرَتَكَ الأَقْرَبِينَ} [الشعراء: 214]، جَعَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُنَادِي: «يَا بَنِي فِهْرٍ، يَا بَنِي عَدِيٍّ» لِبُطُونِ قُرَيْشٍ، وَقَالَ أَبُو هُرَيْرَةَ: لَمَّا نَزَلَتْ: {وَأَنْذِرْ عَشِيرَتَكَ الأَقْرَبِينَ} [الشعراء: 214]، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا مَعْشَرَ قُرَيْشٍ»
சமீப விமர்சனங்கள்