தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3185

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 20 காலம் குறிப்பிடாமல் சமாதான ஒப்பந்தம் செய்து கொள்வதும், அல்லாஹ் எதுவரை உங்களை இங்கு நீடித்திருக்கச் செய்கிறானோ அதுவரை உங்களை நான் இ(ந்த நிலக் குத்தகை ஒப்பந்தத்)தில் நீடித்திருக்கச் செய்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும்.

 பாடம் : 21 இணைவைப்பவர்களின் சடலங்களைக் கிணற்றில் வீசுவதும், (அவர் களுடைய குடும்பத்தார் அவர்களை எடுத்துச் செல்ல விரும்பினால்) அவர்களுக்காகக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது என்பதும்.

 அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

ஒரு முறை (கஅபா அருகே) நபி(ஸல்) அவர்கள் (தொழுது) சிர வணக்கம் (ஸஜ்தா) செய்து கொண்டிருக்க, அவர்களைச் சுற்றிலும் குறைஷி இணைவைப்பாளர்கள் இருந்தனர். அப்போது (குறைஷித் தலைவன்) உக்பா இப்னு அபீ முஐத், நபி(ஸல்) அவர்களை நோக்கி ஒட்டகத்தின் (கர்ப்பத்திலுள்ள) குட்டியை மூடியிருக்கும் ஜவ்வைக் கொண்டு வந்து, அதை நபி(ஸல்) அவர்களின் முதுகின் மீது எறிந்துவிட்டான்.

நபி(ஸல்) அவர்கள், ஃபாத்திமா(ரலி) வரும் வரை (ஸஜ்தாவிலிருந்து) தம் தலையை உயர்த்தவில்லை. ஃபாத்திமா(ரலி) வந்தவுடன் (அந்த ஜவ்வை) நபி(ஸல்) அவர்களின் முதுகிலிருந்து அகற்றிவிட்டார்கள். மேலும், அதைச் செய்தவனுக்குத் தீங்கு நேரட்டுமெனப் பிரார்த்தனை செய்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இறைவா! குறைஷிகளில் முக்கியப் பிரமுகர்களை நீ கவனித்துக் கொள். இறைவா! அபூ ஜஹ்ல் இப்னு ஹிஷாம், உத்பா இப்னு ரபீஆ, ஷைபா இப்னு ரபீஆ, உக்பா இப்னு அபீ முஐத், உமய்யா இப்னு கலஃப் அல்லது உபை இப்னு கலஃப்… ஆகியோரை நீ கவனித்துக் கொள்’ என்று அவர்களுக்குத் தீங்கு நேரப் பிரார்த்தித்தார்கள்.

நான் இவர்களையெல்லாம் பத்ருப் போரில் கொல்லப்பட்டுக் கிணற்றில் போடப்பட்டிருக்கக் கண்டேன்; உமைய்யாவைத் தவிர… அல்லது உபையைத் தவிர. ஏனெனில், அவன் பருமனான மனிதனாக இருந்தான்.. அவனை அவர்கள் (முஸ்லிம் வீரர்கள்) இழுத்துச் சென்றபோது அவன் கிணற்றில் போடப்படுவதற்கு முன்பே அவனுடைய மூட்டுகள் துண்டாகி (தனித் தனியாகக் கழன்று)விட்டன.
Book : 58

(புகாரி: 3185)

بَابُ المُوَادَعَةِ مِنْ غَيْرِ وَقْتٍ

وَقَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُقِرُّكُمْ عَلَى مَا أَقَرَّكُمُ اللَّهُ بِهِ»

بَابُ طَرْحِ جِيَفِ المُشْرِكِينَ فِي البِئْرِ، وَلاَ يُؤْخَذُ لَهمْ ثَمَنٌ

حَدَّثَنَا عَبْدَانُ بْنُ عُثْمَانَ، قَالَ: أَخْبَرَنِي أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

بَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَاجِدٌ وَحَوْلَهُ نَاسٌ مِنْ قُرَيْشٍ مِنَ المُشْرِكِينَ، إِذْ جَاءَ عُقْبَةُ بْنُ أَبِي مُعَيْطٍ بِسَلَى جَزُورٍ، فَقَذَفَهُ عَلَى ظَهْرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمْ يَرْفَعْ رَأْسَهُ حَتَّى جَاءَتْ فَاطِمَةُ عَلَيْهَا السَّلاَمُ، فَأَخَذَتْ مِنْ ظَهْرِهِ، وَدَعَتْ عَلَى مَنْ صَنَعَ ذَلِكَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ عَلَيْكَ المَلاَ مِنْ قُرَيْشٍ، اللَّهُمَّ عَلَيْكَ أَبَا جَهْلِ بْنَ هِشَامٍ، وَعُتْبَةَ بْنَ رَبِيعَةَ، وَشَيْبَةَ بْنَ رَبِيعَةَ، وَعُقْبَةَ بْنَ أَبِي مُعَيْطٍ، وَأُمَيَّةَ بْنَ خَلَفٍ، أَوْ أُبَيَّ بْنَ خَلَفٍ»، فَلَقَدْ رَأَيْتُهُمْ قُتِلُوا يَوْمَ بَدْرٍ، فَأُلْقُوا فِي بِئْرٍ غَيْرَ أُمَيَّةَ، أَوْ أُبَيٍّ، فَإِنَّهُ كَانَ رَجُلًا ضَخْمًا، فَلَمَّا جَرُّوهُ تَقَطَّعَتْ أَوْصَالُهُ قَبْلَ أَنْ يُلْقَى فِي البِئْرِ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.