தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3436

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 48

(அல்லாஹ் கூறுகின்றான்:) மேலும், (நபியே!) மர்யமைப் பற்றி இந்த வேதத்தில் (உள்ளதை) நீர் எடுத்துரைப்பீராக! அவர் தம்முடைய குடும்பத்தாரைவிட்டு விலகி கிழக்குப் பக்கமாக ஒதுங்கியிருந்த நேரத்தில் அவர் ஒரு திரையிட்டு அவர்களிலிருந்து மறைந்திருந்தார். (அப்போது) நாம் அவரிடம் நம்முடைய ரூஹை (வானவரை) அனுப்பினோம். அவர் மர்யமின் முன் னிலையில் முழு மனித உருவில் தோன்றினார். உடனே மர்யம் கூறினார்: ‘‘உம்மை விட்டுக் கருணைமிக்க இறைவனிடம் நான் பாதுகாப்புக் கோருகின்றேன், நீர் இறையச்சம் உள்ளவராயின்”

அதற்கு அவர் கூறினார்: ‘‘நான் உம் இறைவனின் தூதராவேன்: தூய்மையான ஓர் ஆண் குழந்தையை உமக்கு வழங்குவதற்காக நான் அனுப்பப்பட்டுள்ளேன்.” மர்யம் கூறினார்: ‘‘எனக்கு எவ்வாறு ஆண் குழந்தை பிறக்கும்? என்னை எந்த மனிதனும் தீண்டவில்லையே; நான் தீய நடத்தையுடையவளும் அல்லவே!” அதற்கு வானவர் கூறினார்: ‘‘அவ்வாறே நிகழும்.” உம் இறைவன் கூறுகின்றான்: அவ்வாறு செய்வது எனக்கு மிகவும் எளிதானது; மேலும், நாம் அக்குழந்தையை மக்களுக்கு ஒரு சான்றாகவும் நம்மிடமிருந்து ஒரு கருணையாகவும் ஆக்குவதற் காகவே இவ்வாறு செய்கின்றோம். மேலும் அது நடந்தே தீரும்” (19:16-21)

…….விலகியிருந்தோர்’ (இஅதஸலத்) ஒதுங்கி தனிமையில் இருந்தார்; கிழக்குப் பக்கம் (ஷர்கீ)கிழக்கை ஒட்டிய ஓரிடத்தில். (19:16) ‘அவரைக் கொண்டுசென்றது’ (அஜாஅஹா)  அவரை வலுக்கட்டாயமாகக் கொண்டுசென்றது (19:23). இது யிஜாஅ’ என்பதன் ‘அஃப்அல’ வாய்பாட்டில் வந்தது. துசாகித் (அல்லது தஸ்ஸாகத்) விழும்; சொரியும். யிகஸிய்யு லி தொலைவான (காஸியன்) இடத்தில் (19:22). யிஃபரிய்யு’ (பயங்கரமான) லி மிகப்பெரிய காரியம். 19:27) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: யிநஸ்யன்’ (மறக்கப்பட்ட) லி எப்பொரு ளாகவும் இல்லாமல் (19:23). மற்றவர்கள், ‘அற்பமான பொருளாக’ என்று இதற்கு அர்த்தம் கூறுகிறார்கள். அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: ‘நீர் இறையச்சமுடையவராக இருந்தால்’ (19:18) என்று மர்யம் (அலை) அவர்கள் சொல்லக் காரணம், இறையச்சம் உள்ளவர் சுயக்கட்டுப்பாடு உள்ளவராக இருப்பார் என அவர் அறிந்திருந்ததுதான். பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: யிசரிய்யு’ (ஊற்று) என்பது யிசிரியாக்’ மொழியில் சிற்றாற்றைக் குறிக்கும்…….

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று பேரைத் தவிர வேறெவரும் தொட்டிலில் (குழந்தையாக இருக்கும்போது) பேசியதில்லை. (ஒருவர்) ஈசா (அலை) அவர்கள். (மற்றொருவர்) இஸ்ரவேலர்களால் ஜுரைஜ்’ என்றழைக்கப்பட்டு வந்த (நல்ல) மனிதர் ஒருவர்.

(ஒருமுறை) அவர் தொழுதுகொண்டிருந்தார். அப்போது அவருடைய தாயார் வந்து அவரை அழைத்தார். ஜுரைஜ் (தம் மனத்திற்குள்) ‘‘அவருக்கு நான் பதிலளிப்பதா? தொழுவதா?” என்று கூறிக்கொண்டார். (பதிலளிக்கவில்லை.) அதனால் கோபமடைந்த அவரின் தாய், ‘‘இறைவா! இவனை விபசாரிகளின் முகங்களில் விழிக்கச்செய்யாமல் மரணிக்கச்செய்யாதே!” என்று கூறிவிட்டார்.

(ஒருமுறை) ஜுரைஜ் தமது ஆசிரமத்தில் இருந்தபோது அவரிடம் ஒரு பெண் வந்து (தன்னுடன் தகாத உறவு கொள்ளும்படி அழைத்துப்) பேசினாள். அதற்கு அவர் மறுத்துவிட்டார். ஆகவே, (அவள் அவரைப் பழிவாங்குவதற்காக) ஓர் ஆட்டு இடையனிடம் சென்று அவனைத் தன் வசப்படுத்தி (அவனுடன் விபசாரம் புரிந்து) ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். பிறகு இது ஜுரைஜுக்குப் பிறந்தது’ என்று (மக்களிடம்) சொன்னாள்.

உடனே மக்கள் ஜுரைஜிடம் சென்று அவரது ஆசிரமத்தை இடித்து அவரைக் கீழே இறங்கிவரச்செய்து அவரை ஏசினார்கள். உடனே ஜுரைஜ் அங்கத் தூய்மை செய்து தொழுதுவிட்டு, பின்னர் அந்தக் குழந்தையிடம் சென்று, ‘‘குழந்தையே! உன் தந்தை யார்?” என்று கேட்டார். அக்குழந்தை, ‘‘(இன்ன) இடையன்” என்று பேசியது.

அதைக் கண்டு (உண்மையை உணர்ந்துகொண்ட) அந்த மக்கள், ‘‘தங்கள் ஆசிரமத்தை நாங்கள் தங்கத்தால் கட்டித் தருகிறோம்” என்று கூறினார்கள். அதற்கு அவர், ‘‘இல்லை, களிமண்ணால் கட்டித் தந்தாலே போதும்” என்று கூறிவிட்டார்.

(மூன்றாமவர்) இஸ்ரவேலர்களில் ஒரு பெண் தன் மகன் ஒருவனுக்குப் பால் கொடுத்துக்கொண்டிருந்தாள். அப்போது அழகும் பொலிவும் மிக்க ஒரு மனிதன் வாகனத்தில் ஏறிச் சென்றுகொண்டிருந்தான். உடனே அவள், ‘‘இறைவா! என் மகனை இவனைப் போல் ஆக்குவாயாக!” என்று துஆ செய்தாள். உடனே அந்தக் குழந்தை அவளது மார்பை விட்டுவிட்டு சவாரி செய்பவனை நோக்கி, ‘‘இறைவா! இவனைப் போல் என்னை ஆக்கிவிடாதே” என்று கூறியது.

பிறகு அவளது மார்பை நோக்கிப் பால் குடிக்கச் சென்றது. இந்த இடத்தில் நபி (ஸல்) அவர்கள் தம் விரலை உறிஞ்சுவது போல் தெரிந்தது. பிறகு அக்குழந்தை ஓர் அடிமைப் பெண்ணுக்கு அருகில் கொண்டு செல்லப்பட்டது. அப்போது அந்தப் பெண், ‘‘இறைவா! என் மகனை இவளைப்போல் ஆக்கிவிடாதே” என்று கூறினாள். உடனே அக்குழந்தை அவளது மார்பை விட்டுவிட்டு, ‘‘இறைவா! என்னை இவளைப் போல் ஆக்குவாயாக!” என்று கூறியது. அந்தப் பெண் (வியப்படைந்து), ‘‘ஏன் இப்படிச் சொல்கிறாய்?” என்று கேட்டதற்கு அக்குழந்தை, ‘‘வாகனத்தில் ஏறிச் சென்றவன் கொடுங்கோலர்களில் ஒருவன்; இந்த அடிமைப் பெண்ணைக் குறித்து மக்கள் (அவதூறாக) ‘நீ திருடிவிட்டாய்; விபசாரம் செய்து விட்டாய்’ என்று கூறுகிறார்கள். ஆனால், இவள் அப்படி எதுவும் செய்யவில்லை” என்று பதிலளித்தது.119

அத்தியாயம் : 60

(புகாரி: 3436)

بَابُ قَوْلِ اللَّهِ {وَاذْكُرْ فِي الكِتَابِ مَرْيَمَ إِذِ انْتَبَذَتْ مِنْ أَهْلِهَا} [مريم: 16] ”
نَبَذْنَاهُ: أَلْقَيْنَاهُ: اعْتَزَلَتْ. {شَرْقِيًّا} [مريم: 16]: مِمَّا يَلِي الشَّرْقَ، {فَأَجَاءَهَا} [مريم: 23]: أَفْعَلْتُ مِنْ جِئْتُ، وَيُقَالُ: أَلْجَأَهَا اضْطَرَّهَا. (تَسَّاقَطْ): تَسْقُطْ، {قَصِيًّا} [مريم: 22]: قَاصِيًا، {فَرِيًّا} [مريم: 27]: عَظِيمًا ” قَالَ ابْنُ عَبَّاسٍ: ” (نِسْيًا) لَمْ أَكُنْ شَيْئًا، وَقَالَ غَيْرُهُ: النِّسْيُ: الحَقِيرُ ” وَقَالَ أَبُو وَائِلٍ: عَلِمَتْ مَرْيَمُ أَنَّ التَّقِيَّ ذُو نُهْيَةٍ حِينَ قَالَتْ: {إِنْ كُنْتَ تَقِيًّا} [مريم: 18] قَالَ وَكِيعٌ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ البَرَاءِ: ” {سَرِيًّا} [مريم: 24]: نَهَرٌ صَغِيرٌ بِالسُّرْيَانِيَّةِ

حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:

لَمْ يَتَكَلَّمْ فِي المَهْدِ إِلَّا ثَلاَثَةٌ: عِيسَى، وَكَانَ فِي بَنِي إِسْرَائِيلَ رَجُلٌ يُقَالُ لَهُ جُرَيْجٌ، كَانَ يُصَلِّي، جَاءَتْهُ أُمُّهُ فَدَعَتْهُ، فَقَالَ: أُجِيبُهَا أَوْ أُصَلِّي، فَقَالَتْ: اللَّهُمَّ لاَ تُمِتْهُ حَتَّى تُرِيَهُ وُجُوهَ المُومِسَاتِ، وَكَانَ جُرَيْجٌ فِي صَوْمَعَتِهِ، فَتَعَرَّضَتْ لَهُ امْرَأَةٌ وَكَلَّمَتْهُ فَأَبَى، فَأَتَتْ رَاعِيًا فَأَمْكَنَتْهُ مِنْ نَفْسِهَا، فَوَلَدَتْ غُلاَمًا، فَقَالَتْ: مِنْ جُرَيْجٍ فَأَتَوْهُ فَكَسَرُوا صَوْمَعَتَهُ وَأَنْزَلُوهُ وَسَبُّوهُ، فَتَوَضَّأَ وَصَلَّى ثُمَّ أَتَى الغُلاَمَ، فَقَالَ: مَنْ أَبُوكَ يَا غُلاَمُ؟ قَالَ : الرَّاعِي، قَالُوا: نَبْنِي صَوْمَعَتَكَ مِنْ ذَهَبٍ؟ قَالَ: لاَ، إِلَّا مِنْ طِينٍ. وَكَانَتِ امْرَأَةٌ تُرْضِعُ ابْنًا لَهَا مِنْ بَنِي إِسْرَائِيلَ، فَمَرَّ بِهَا رَجُلٌ رَاكِبٌ ذُو شَارَةٍ فَقَالَتْ: اللَّهُمَّ اجْعَلِ ابْنِي مِثْلَهُ، فَتَرَكَ ثَدْيَهَا وَأَقْبَلَ عَلَى الرَّاكِبِ، فَقَالَ: اللَّهُمَّ لاَ تَجْعَلْنِي مِثْلَهُ، ثُمَّ أَقْبَلَ عَلَى ثَدْيِهَا يَمَصُّهُ، –

قَالَ: أَبُو هُرَيْرَةَ كَأَنِّي أَنْظُرُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمَصُّ إِصْبَعَهُ – ثُمَّ مُرَّ بِأَمَةٍ، فَقَالَتْ: اللَّهُمَّ لاَ تَجْعَلِ ابْنِي مِثْلَ هَذِهِ، فَتَرَكَ ثَدْيَهَا، فَقَالَ: اللَّهُمَّ اجْعَلْنِي مِثْلَهَا، فَقَالَتْ: لِمَ ذَاكَ؟ فَقَالَ: الرَّاكِبُ جَبَّارٌ مِنَ الجَبَابِرَةِ، وَهَذِهِ الأَمَةُ يَقُولُونَ: سَرَقْتِ، زَنَيْتِ، وَلَمْ تَفْعَلْ


Bukhari-Tamil-3436.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-3436.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




பார்க்க: அஹ்மத்-2821 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.