பாடம் : 1 நல்ல வார்த்தை(க-மா தய்யிபாவு)க்கு அல்லாஹ் எவ்வாறு உவமை கூறுகின்றான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அது ஒரு நல்ல மரத்தைப் போன்றதாகும்.அதன் வேர் பூமியில் ஆழப் பதிந்திருக்கின்றது; அதன் கிளைகள் வானளாவ உயர்ந்து நிற்கின்றன; எந்நேரமும் அம்மரம் தன் இறைவனின் ஆணைக்கேற்பக் கனிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றது எனும் (14:24, 25)இறைவசனங்கள்.
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள், ‘ஒரு முஸ்லிமான மனிதரை ஒத்திருக்கும்’ அல்லது ‘(அவரைப்) போன்றிருக்கும்’ ஒரு மரத்தை எனக்கு அறிவியுங்கள். அதன் இலை உதிராது. மேலும் இப்படி.. இப்படி.. இப்படியெல்லாம் இராது. அது தன் கனிகளை எல்லாப் பருவங்களிலும் கொடுத்துக் கொண்டிருக்கும். (அத்தகைய ஒரு மரத்தை எனக்கு அறிவியுங்கள்)’ என்று கூறினார்கள். அப்போது என் மனத்தில் ‘இது பேரிச்ச மரம்தான்’ என்று தோன்றியது. அபூ பக்ர், உமர் (போன்றவர்களே பதில்) பேசாமல் இருப்பதை கண்டேன். எனவே, நான் பேசவிரும்பவில்லை. (அங்கிருந்த) மக்கள் ஒன்றும் சொல்லாமலிருந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தாமே) ‘அது பேரிச்ச மரம்’ என்று கூறினார்கள். நாங்கள் (புறப்பட) எழுந்தபோது நான் உமர்(ரலி) அவர்களிடம், ‘என் அன்புத் தந்தையே! அல்லாஹ்வின் மீதாணையாக! என் மனத்தில் அது பேரிச்ச மரம் தான் என்று தோன்றியது’ என்றேன். அதற்கு அவர்கள், ‘(அப்துல்லாஹ்!) நீ ஏன் (மனத்தில் தோன்றியதைக்) கூறாமலிருந்தாய்?’ என்று கேட்டார்கள். நான், ‘நீங்கள் பேசாமலிருப்பதைப் பார்த்தேன். எனவே, நான் பேசவோ எதுவும் சொல்லவோ விரும்பவில்லை’ என்று பதிலளித்தேன். உமர்(ரலி), ‘நீ அதைச் சொல்லியிருந்தால் அதுவே இன்ன இன்ன(செல்வம் கிடைப்ப)தைவிட எனக்கு மிகவும் பிரியமான தாய் இருந்திருக்கும்’ என்று கூறினார்கள்.
Book : 65
(புகாரி: 4698)سُورَةُ إِبْرَاهِيمَ
قَالَ ابْنُ عَبَّاسٍ: {هَادٍ} [الرعد: 7]: «دَاعٍ» وَقَالَ مُجَاهِدٌ: {صَدِيدٌ} [إبراهيم: 16]: «قَيْحٌ وَدَمٌ» وَقَالَ ابْنُ عُيَيْنَةَ: {اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ} [المائدة: 20]: «أَيَادِيَ اللَّهِ عِنْدَكُمْ وَأَيَّامَهُ» وَقَالَ مُجَاهِدٌ: {مِنْ كُلِّ مَا سَأَلْتُمُوهُ} [إبراهيم: 34] «رَغِبْتُمْ إِلَيْهِ فِيهِ»، {يَبْغُونَهَا عِوَجًا} [الأعراف: 45]: «يَلْتَمِسُونَ لَهَا عِوَجًا»، {وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ} [إبراهيم: 7]: «أَعْلَمَكُمْ، آذَنَكُمْ» {رَدُّوا أَيْدِيَهُمْ فِي أَفْوَاهِهِمْ}: «هَذَا مَثَلٌ، كَفُّوا عَمَّا أُمِرُوا بِهِ»، {مَقَامِي} [يونس: 71]: «حَيْثُ يُقِيمُهُ اللَّهُ بَيْنَ يَدَيْهِ»، {مِنْ وَرَائِهِ} [إبراهيم: 16]: «قُدَّامَهُ جَهَنَّمُ»، {لَكُمْ تَبَعًا} [إبراهيم: 21]: «وَاحِدُهَا تَابِعٌ مِثْلُ غَيَبٍ وَغَائِبٍ»، {بِمُصْرِخِكُمْ} [إبراهيم: 22]: «اسْتَصْرَخَنِي اسْتَغَاثَنِي»، {يَسْتَصْرِخُهُ} [القصص: 18]: «مِنَ الصُّرَاخِ» (وَلَا خِلاَلَ): «مَصْدَرُ خَالَلْتُهُ خِلاَلًا، وَيَجُوزُ أَيْضًا جَمْعُ خُلَّةٍ وَخِلاَلٍ»، {اجْتُثَّتْ} [إبراهيم: 26]: «اسْتُؤْصِلَتْ»
بَابُ قَوْلِهِ: (كَشَجَرَةٍ طَيِّبَةٍ أَصْلُهَا ثَابِتٌ وَفَرْعُهَا فِي السَّمَاءِ تُؤْتِي أُكْلَهَا كُلَّ حِينٍ)
حَدَّثَنِي عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ أَبِي أُسَامَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ
كُنَّا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: ” أَخْبِرُونِي بِشَجَرَةٍ تُشْبِهُ أَوْ: كَالرَّجُلِ المُسْلِمِ لاَ يَتَحَاتُّ وَرَقُهَا، وَلاَ وَلاَ وَلاَ تُؤْتِي أُكْلَهَا كُلَّ حِينٍ ” قَالَ ابْنُ عُمَرَ: فَوَقَعَ فِي نَفْسِي أَنَّهَا النَّخْلَةُ، وَرَأَيْتُ أَبَا بَكْرٍ، وَعُمَرَ لاَ يَتَكَلَّمَانِ، فَكَرِهْتُ أَنْ أَتَكَلَّمَ فَلَمَّا لَمْ يَقُولُوا شَيْئًا، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هِيَ النَّخْلَةُ» فَلَمَّا قُمْنَا قُلْتُ لِعُمَرَ: يَا أَبَتَاهُ، وَاللَّهِ لَقَدْ كَانَ وَقَعَ فِي نَفْسِي أَنَّهَا النَّخْلَةُ، فَقَالَ: مَا مَنَعَكَ أَنْ تَكَلَّمَ؟ قَالَ: لَمْ أَرَكُمْ تَكَلَّمُونَ، فَكَرِهْتُ أَنْ أَتَكَلَّمَ أَوْ أَقُولَ شَيْئًا، قَالَ عُمَرُ: لَأَنْ تَكُونَ قُلْتَهَا، أَحَبُّ إِلَيَّ مِنْ كَذَا وَكَذَا
சமீப விமர்சனங்கள்