இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (நோயுற்றிருந்த கிராமவாசி) ஒருவரை உடல் நலம் விசாரிக்கச் சென்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘கவலைப்பட வேண்டாம். இறைவன் நாடினால் (இது உங்கள் பாவத்தைக் கழுவி உங்களைத்) தூய்மைப்படுத்திவிடும்’ என்று கூறினார்கள். அதற்கு அந்த மனிதர், ‘(நான் தூய்மை பெற்றுவிடுவேனா? இது நடக்கப் போவது) இல்லை. இதுவோ வயது முதிர்ந்த பெரியவரைப் பீடிக்கிற சூடாகித் தகிக்கின்ற காய்ச்சல் ஆகும். இது அ(ம் முதிய)வரை மண்ணறைகளைச் சந்திக்கவைக்கும் வரை (ஓயாது)’ என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால், ஆம் (நீர் நினைத்தது போன்றே நடக்கும்)’ என்று கூறினார்கள்.21
Book :75
(புகாரி: 5662)حَدَّثَنَا إِسْحَاقُ، حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ خَالِدٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَى رَجُلٍ يَعُودُهُ، فَقَالَ: «لاَ بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُ» فَقَالَ: كَلَّا، بَلْ حُمَّى تَفُورُ، عَلَى شَيْخٍ كَبِيرٍ، كَيْمَا تُزِيرَهُ القُبُورَ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَنَعَمْ إِذًا»
சமீப விமர்சனங்கள்