தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7163

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 16 நீதிபதியாகும் தகுதியை ஒருவர் எப்போது பெறுகிறார்? ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள், நீதிபதிகள் மன இச்சையைப் பின்பற்றக் கூடாது; மக்களுக்கு அஞ்சக் கூடாது; தன் வசனங்களை அற்ப விலைக்கு விற்கக் கூடாது என அவர்களிடம் அல்லாஹ் உறுதிமொழி வாங்கியுள்ளான் என்று கூறிவிட்டு தாவூதே! உங்களை நாம் பூமியில் பிரதிநிதியாக ஆக்கியுள்ளோம். ஆகவே, மக்களுக்கிடையே (நேர்மையாக) சத்தியத் தீர்ப்பு வழங்குங்கள். மன இச்சையைப் பின்பற்றாதீர்கள். அது உங்களை இறைவழியிலிருந்து தவறச் செய்து விடும். இறைவழியிலிருந்து தவறிச்செல்பவர்களுக்கு, அவர்கள் கணக்கு வாங்கும் நாளை மறந்துவிட்ட காரணத்தால் கடுமையான வேதனை உண்டு எனும் (38:26ஆவது) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள். மேலும், நிச்சயமாக நாம்தாம் தவ்ராத்’ தையும் அருளினோம்; அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன; (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்ட நபிமார்கள், யூதர்களுக்கு அதைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள். இறைபக்தியாளர்களும் அறிஞர் களும் -அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்கக் கட்டளையிடப்பட்டவர்கள் என்பதாலும், இன்னும் அவ்வேதத்திற்குச் சாட்சிகளாக அவர்கள் இருந்ததாலும்- அவர்கள் அதைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள். (இறைநம்பிக்கையாளர்களே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள். என்னுடைய வசனங் களை அற்பக் கிரயத்திற்கு விற்றுவிடாதீர்கள். எவர் அல்லாஹ் அருளிய(வேதத்)தைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக இறைமறுப்பாளர்கள்தாம் எனும் (5:44ஆவது) வசனத்தையும் ஓதிக் காட்டினார்கள். மேலும், இன்னும் தாவூதும் சுலைமானும் (பற்றி நினைவு கூர்வீராக!) வேளாண்மை நிலத்தில் அவர்களுடைய சமூகத்தாரின் ஆடுகள் இரவில் இறங்கி மேய்ந்த போது, அதைப் பற்றி அவ்விருவரும் தீர்ப்பளித்தனர். அவர்களது தீர்ப்பை நாம் கவனித்துக் கொண்டிருந்தோம். அப்போது, நாம் சுலைமானுக்கு அதை (-தீர்ப்பளிப்பதன் முறையை)ப் புரியவைத்தோம். (அவ்விருவரில்) ஒவ்வொருவருக்கும் (தீர்ப்பளிக்கும்) ஞானத்தையும் அறிவையும் வழங்கினோம் எனும் (21:78,79) வசனங்களையும் ஓதிக் காட்டினார்கள். (இந்த வசனத்தில்) அல்லாஹ் சுலைமான் (அலை) அவர்களைப் புகழ்ந்துள்ளான். தாவூத் (அலை) அவர்களைப் பழிக்கவில்லை. இந்த இருவரின் விவகாரத்தையும் அல்லாஹ் எடுத்துரைத்திருக்காவிட்டால், நீதிபதிகள் அழிந்துபோவதைத்தான் நான் பார்த்தி ருப்பேன். ஏனெனில்,அல்லாஹ் ஒருவரை ளசுலைமான் (அலை) அவர்களைன அவருடைய அறிவுக்காகப் பாராட்டியுள்ளான். மற்றொரு வரை ளதாவூத் (அலை) அவர்களைன அவருடைய ஆராய்ச்சிக்காக மன்னித்திருக்கின்றான். முஸாஹிம் பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்: ஒரு நீதிபதி ஐந்து பண்புகளில் எந்த ஒன்றைத் தவறவிட்டாலும் அது அவருக்குக் களங்கமாகும். அவையாவன: அவர் (விஷயங்களை நன்கு புரிந்துகொள்ளும்) விளக்கமுள்ளவராகவும் (பழிவாங்கும் எண்ணமில்லாத) சகிப்புத் தன்மையுடைய வராகவும், (விலக்கப்பட்டவற்றிலிருந்து விலகி) மார்க்கநெறி காப்பவராகவும், (எடுக்கும் முடிவில்) உறுதியானவராகவும், கல்விமானாகவும், கல்வியறிவைப் பெருக்கிக் கொள்ள அதிகம் கேள்வி கேட்பவராகவும் இருக்க வேண்டும். பாடம் : 17 ஆட்சியாளர்கள், நீதிபதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோருக்கான ஊதியம். நீதிபதி ஷுரைஹ் (ரஹ்) அவர்கள் (நீதி மன்றத்தில்) தீர்ப்பு வழங்கும் தமது பணிக்காக ஊதியம் பெற்றுவந்தார்கள்.27 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அநாதையின் காப்பாளர் தமது வேலைப் பளுவுக்கேற்ப அநாதையின் செல்வத்திலிருந்து உண்ணலாம். அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் (நிர்வாகப் பணிக்காக அரசு நிதியிலிருந்து ஊதியம் பெற்று) உண்டார்கள்.

 அப்துல்லாஹ் இப்னு சஅதீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நான் உமர்(ரலி) அவர்களிடம் அவர்களின் ஆட்சிக்காலத்தின்போது சென்றேன். அப்போது அவர்கள் என்னிடம், ‘நீங்கள் மக்கள் (நலப்) பணிகள் சிலவற்றுக்குப் பொறுப்பேற்றிருப்பதாகவும், அதற்காக ஊதியம் தரப்பட்டால் அதை நீங்கள் வெறுப்பதாகவும் எனக்குத் தகவல் வந்ததே! (உண்மைதானா?)’ என்று கேட்டார்கள். அதற்கு நான் ‘ஆம்’ என்றேன். உமர்(ரலி) அவர்கள், ‘நீங்கள் எந்த நோக்கத்தில் இப்படிச் செய்கிறீர்கள்?’ என்று கேட்க, நான், ‘என்னிடம் பல குதிரைகளும் பல அடிமைகளும் உள்ளனர். நான் நல்ல நிலையில் தான் இருக்கிறேன். எனவே, என் ஊதியம் முஸ்லிம்களுக்கு தர்மமாக இருக்கட்டும் என்று விரும்புகிறேன்’ என்று பதிலளித்தேன். உமர்(ரலி) கூறினார்: அப்படிச் செய்யாதீர்கள். ஏனென்றால், நீங்கள் விரும்பியபடியே நானும் விரும்பிவந்தேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எனக்கு (மக்கள் நல நிதியிலிருந்து) நன்கொடை வழங்குவார்கள். நான், ‘என்னை விட அதிகத் தேவை உடையோருக்கு இதைக் கொடுங்கள்’ என்று சொல்லிவந்தேன். இறுதியில் ஒரு முறை நபி(ஸல்) அவர்கள், (நன்கொடைப்) பொருள் ஒன்றை எனக்கு அளித்தபோது, நான், ‘என்னைவிட அதிகத் தேவை உடையோருக்கு இதை வழங்குங்கள்’ என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘(முதலில்) இதை வழங்குங்கள்’ என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘(முதலில்) இதை வாங்கி உங்களுக்கு உடைமையாக்கிக் கொள்ளுங்கள். பிறகு, (தேவைப்படவில்லையென்றால்,) தர்மம் செய்துவிடுங்கள். இச்செல்வத்திலிருந்து எது நீங்கள் எதிர்பார்க்காமலும் நீங்களாகக் கேட்காமலும் உங்களுக்கு வந்தோ அதை (மறுக்காமல்) வாங்கிக் கொள்ளுங்கள். அப்படி எதுவும் வரவில்லையென்றால் நீங்களாக அதைத் தேடிச் செல்லாதீர்கள்’ என்றார்கள்.

Book : 93

(புகாரி: 7163)

بَابٌ: مَتَى يَسْتَوْجِبُ الرَّجُلُ القَضَاءَ

وَقَالَ الحَسَنُ: ” أَخَذَ اللَّهُ عَلَى الحُكَّامِ أَنْ لاَ يَتَّبِعُوا الهَوَى، وَلاَ يَخْشَوُا النَّاسَ، وَلاَ يَشْتَرُوا بِآيَاتِي ثَمَنًا قَلِيلًا، ثُمَّ قَرَأَ: {يَا دَاوُدُ إِنَّا جَعَلْنَاكَ خَلِيفَةً فِي الأَرْضِ، فَاحْكُمْ بَيْنَ النَّاسِ بِالحَقِّ، وَلاَ تَتَّبِعِ الهَوَى فَيُضِلَّكَ عَنْ سَبِيلِ اللَّهِ، إِنَّ الَّذِينَ يَضِلُّونَ عَنْ سَبِيلِ اللَّهِ لَهُمْ عَذَابٌ شَدِيدٌ بِمَا نَسُوا يَوْمَ الحِسَابِ}، وَقَرَأَ: {إِنَّا أَنْزَلْنَا التَّوْرَاةَ فِيهَا هُدًى وَنُورٌ يَحْكُمُ بِهَا النَّبِيُّونَ الَّذِينَ أَسْلَمُوا لِلَّذِينَ هَادُوا وَالرَّبَّانِيُّونَ وَالأَحْبَارُ بِمَا اسْتُحْفِظُوا مِنْ كِتَابِ اللَّهِ، وَكَانُوا عَلَيْهِ شُهَدَاءَ، فَلاَ تَخْشَوُا النَّاسَ وَاخْشَوْنِ، وَلاَ تَشْتَرُوا بِآيَاتِي ثَمَنًا قَلِيلًا وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الكَافِرُونَ} [المائدة: 44]، ” {بِمَا اسْتُحْفِظُوا} [المائدة: 44]: اسْتُوْدِعُوا مِنْ كِتَابِ اللَّهِ “، وَقَرَأَ: {وَدَاوُدَ، وَسُلَيْمَانَ إِذْ يَحْكُمَانِ فِي الحَرْثِ إِذْ نَفَشَتْ فِيهِ غَنَمُ القَوْمِ وَكُنَّا لِحُكْمِهِمْ شَاهِدِينَ، فَفَهَّمْنَاهَا سُلَيْمَانَ وَكُلًّا آتَيْنَا حُكْمًا وَعِلْمًا}، «فَحَمِدَ سُلَيْمَانَ وَلَمْ يَلُمْ دَاوُدَ، وَلَوْلاَ مَا ذَكَرَ اللَّهُ مِنْ أَمْرِ هَذَيْنِ لَرَأَيْتُ أَنَّ القُضَاةَ هَلَكُوا، فَإِنَّهُ أَثْنَى عَلَى هَذَا بِعِلْمِهِ وَعَذَرَ هَذَا بِاجْتِهَادِهِ» وَقَالَ مُزَاحِمُ بْنُ زُفَرَ: قَالَ لَنَا عُمَرُ بْنُ عَبْدِ العَزِيزِ: ” خَمْسٌ إِذَا أَخْطَأَ القَاضِي مِنْهُنَّ خَصْلَةً، كَانَتْ فِيهِ وَصْمَةٌ: أَنْ يَكُونَ فَهِمًا، حَلِيمًا، عَفِيفًا، صَلِيبًا، عَالِمًا، سَئُولًا عَنِ العِلْمِ

بَابُ رِزْقِ الحُكَّامِ وَالعَامِلِينَ عَلَيْهَا

وَكَانَ شُرَيْحٌ القَاضِي يَأْخُذُ عَلَى القَضَاءِ أَجْرًا وَقَالَتْ عَائِشَةُ: «يَأْكُلُ الوَصِيُّ بِقَدْرِ عُمَالَتِهِ» وَأَكَلَ أَبُو بَكْرٍ، وَعُمَرُ

حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي السَّائِبُ بْنُ يَزِيدَ، ابْنُ أُخْتِ نَمِرٍ، أَنَّ حُوَيْطِبَ بْنَ عَبْدِ العُزَّى، أَخْبَرَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ السَّعْدِيِّ، أَخْبَرَهُ

أَنَّهُ قَدِمَ عَلَى عُمَرَ فِي خِلاَفَتِهِ، فَقَالَ لَهُ عُمَرُ: أَلَمْ أُحَدَّثْ أَنَّكَ تَلِيَ مِنْ أَعْمَالِ النَّاسِ أَعْمَالًا، فَإِذَا أُعْطِيتَ العُمَالَةَ كَرِهْتَهَا، فَقُلْتُ: بَلَى، فَقَالَ عُمَرُ: فَمَا تُرِيدُ إِلَى ذَلِكَ، قُلْتُ: إِنَّ لِي أَفْرَاسًا وَأَعْبُدًا وَأَنَا بِخَيْرٍ، وَأُرِيدُ أَنْ تَكُونَ عُمَالَتِي صَدَقَةً عَلَى المُسْلِمِينَ، قَالَ عُمَرُ: لاَ تَفْعَلْ، فَإِنِّي كُنْتُ أَرَدْتُ الَّذِي أَرَدْتَ، فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعْطِينِي العَطَاءَ، فَأَقُولُ: أَعْطِهِ أَفْقَرَ إِلَيْهِ مِنِّي، حَتَّى أَعْطَانِي مَرَّةً مَالًا، فَقُلْتُ: أَعْطِهِ أَفْقَرَ إِلَيْهِ مِنِّي، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خُذْهُ، فَتَمَوَّلْهُ، وَتَصَدَّقْ بِهِ، فَمَا جَاءَكَ مِنْ هَذَا المَالِ وَأَنْتَ غَيْرُ مُشْرِفٍ وَلاَ سَائِلٍ فَخُذْهُ، وَإِلَّا فَلاَ تُتْبِعْهُ نَفْسَكَ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.